Posted by : Author
Thursday, 25 June 2015
சிக்கன் வகை உணவுகள் என்றால் அசைவப்பிரியர்கள் நன்றாக ருசிப்பார்கள்.
அதுவும் வீட்டு சமையலை விட ஹொட்டல்களில் சமைக்கும் சாப்பாட்டுக்கு பலரும் அடிமையாக உள்ளனர்.
இந்த துரித உணவுகள் எனப்படும் பாஸ்ட் புட்கள் ஆக்கிரமிக்க தொடங்கிவிட்டன, ருசி நன்றாக இருப்பதால் அதனால் ஏற்படும் விளைவுகளை நாம் எண்ணிப் பார்ப்பதில்லை.
அதிலும் சிகப்பு நிறத்தில், எண்ணெயில் பொறித்து எடுத்து அழகாக பரிமாறப்படும் சிக்கனுக்கு ரசிகர்கள் ஏராளம்.
சிக்கனுடன் கூடவே, இரண்டு துண்டு எலுமிச்சை பழங்களும் இருக்கும், இதற்கு ஒரு முக்கிய காரணம் உள்ளது.
சிக்கனில் அதிக அளவுக்கு இரும்புச் சத்து உள்ளது. இரும்புச் சத்தை நமது உடல் முழுமையாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்றால், வைட்டமின்-சி தேவை.
அதனால்தான், சிக்கன் சாப்பிடும் போது, வைட்டமின்-சி சத்து நிறைந்த எலுமிச்சை சாற்றை பிழிந்துவிட்டுச் சாப்பிடச் சொல்கிறார்கள்.
சிக்கன் மட்டுமல்ல, இரும்புச் சத்து அதிகம் உள்ள எந்த உணவை எடுத்துக் கொண்டாலும், அதனுடன் வைட்டமின்- சி சத்துள்ள உணவுகளை சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் பரிந்துரை செய்கிறார்கள்.