Posted by : Author Friday, 3 July 2015


தண்ணீர் தாகத்தை தீர்ப்பதோடு உடலில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு தீர்வு தருகிறது.
மனித உடலில் தண்ணீர் என்பது ஜீரணம், வியர்வை வெளியேற்றம், உடலுக்குள் சத்துணவை எடுத்துச் செல்வது, திரவ மற்றும் திடக் கழிவுகளை வெளியேற்றுவதற்கு, உடலின் வெப்பநிலையை சீராக வைத்திருப்பதற்கு போன்ற பல்வேறு ரசாயன மாற்றங்கள் நிகழ்வதற்கு அவசியமாகிறது.

ஒரு நாளைக்கு ஆண்கள் 3 லிட்டர் தண்ணீரும், பெண்கள் 2.2 லிட்டர் தண்ணீரும் அருந்த வேண்டும்.

உடலின் மொத்த எடையில் தண்ணீரின் பங்கு மட்டுமே எழுபது சதவிகிதமாகும்.

உடலின் அனைத்துப் பாகங்களிலும் அது நிறைந்திருந்தாலும் மூளை மற்றும் நுரையீரல் போன்ற உறுப்புகளிலும், இரத்தம், உமிழ்நீர், நிணநீர் போன்ற திரவங்களிலும், ஜீரண முறையில் உள்ள உறுப்புகளின் சுரப்பிகளிலும் அதிகப்படியாகவே அடங்கியுள்ளது.

நீர் சிகிச்சை (Water Therapy)

1. காலையில் எழுந்தவுடன் 1.5 லிட்டர் அல்லது 5-6 டம்ளர் தண்ணீர் அருந்த வேண்டும். அதன் பின்னர் பல் மற்றும் முகங்களை கழுவ வேண்டும்.

2.இந்த நீர் சிகிச்சையின் முக்கிய அம்சம் என்னவென்றால், வெறும் வயிற்றில் 1.5 லிட்டர் தண்ணீர் குடிப்பதற்கு 1 மணி நேரத்துக்கு முன்னும், குடித்த 1 மணி நேரத்துக்கு பின்பும், எதுவும் சாப்பிடக்கூடாது.

3. மேலும் இந்த நீர் சிகிச்சையைக் கடைப்பிடிப்பவர்கள் முந்தைய இரவிலிருந்து மது அருந்தாமல் இருக்கவேண்டும்.

5.முதலில் ஆரம்பிக்கும்போது 1 1/2 லிட்டர் தண்ணீர் குடிப்பது மிக கடினமாக இருக்கும். ஆனால், போகப் போக பழகிவிடும். மிகக் கடினமாக இருந்தால், முதலில் 4 டம்ளர்கள் தண்ணீரைக் குடித்துவிட்டு 2 நிமிடங்கள் கழித்து மீதமுள்ள தண்ணீரைப் பருகலாம்.

இதனால் நீர்சிகிச்சையை(Watertherapy) தொடங்கும் புதிதில் தண்ணீரைக் குடித்த 1 மணி நேரத்தில், 2 முதல் 3 முறை சிறுநீர் கழிக்கக்கூடும். நாளடைவில் இதுவும் சரியாகிவிடும்.

நீர் சிகிச்சையின் நன்மைகள்

மன அழுத்தத்திலிருந்து விடுதலை கிடைக்கும்.

நாள் முசுவதும் உடல் புத்துணர்ச்சி அடையும்.

உடலுக்கு ஆரோக்ககியத்தையும் தோலுக்கு மினுமினுப்பையும் கொடுக்கும் . உடல் சூட்டைத் தணிக்கிறது.

உடலில் உள்ள தேவையில்லாத பொருட்களை எளிதாக நீக்க உதவுகிறது.

இதைத் தொடர்ந்து கடைப்பிடித்தால் மலச்சிக்கல் உள்ளவர்களுக்கு மலச் சிக்கல் அடியோடு நீங்கும்.

அசிடிட்டியைக் கட்டுப்படுத்தும்.

உடலில் உள்ள ரத்தம் தூய்மையடைகிறது.

தோல் சுருக்கங்கள் ஏற்படாமல் பாதுகாக்கும். உடலின் வடிவமைப்பை ஒழுங்கான நிலையில் வைத்திருக்க உதவுகிறது.

அனிமியா(Anemia), உடற்பருமன்(obesity), ஆர்த்ரிடிஸ்(Arthritis) டைகார்டியா(tachycardia), இருமல்(cough), லுகேமியா(leukemia), கண் நோய்கள்(eye-disease), ஒழுங்கற்ற மாதவிடாய்(irregular menstruation), தலைவலி(headache) போன்றவற்றை நீர்சிகிச்சை கட்டுப்படுத்துகிறது.

தீமைகள்

அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்ற பழமொழி நீர்சிகிச்சைக்கும் பொருந்தும்.

அளவுக்கதிகமான தண்ணீரை அருந்தும்போது அது உடலுக்கு பல விளைவுகளை ஏற்படுத்துகின்றன, ஏனெனில் நம் உடம்பானது குறைந்த திறன் தண்ணீரையே உடம்பில் இருந்து வெளியேற்றுகிறது.

இந்த அளவு கடந்துவிட்டால், அந்த தண்ணீரே விஷமாகவும், அல்லது உயர் நீரேற்றத்தினையும் ஏற்படுத்திவிடுகின்றன.

இதனால், மூளை பாதிப்பு மற்றும் இதயம் செயலிழப்பு போன்ற விளைவுகள் ஏற்படுகின்றன.

எனவே நீர்சிகிச்சையை மேற்கொள்வதற்கு முன்னர் மருத்துவரிடம் ஆலோசிப்பது நல்லது.

Leave a Reply

Subscribe to Posts | Subscribe to Comments

Welcome to My Blog

- Copyright © மருத்துவம் -New Mannar- Powered by New Mannar - Designed by New Mannar -