Posted by : Author
Monday, 1 June 2015


கர்ப்பிணி பெண்கள் குடிக்கலாமா?
கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு கால்சியத்தின் அளவு அதிகம் தேவைப்படும். வயிற்றில் வளரும் குழந்தையின் வளர்ச்சிக்கு கால்சியம் தேவைப்படுவதால், தாயின் உடலில் உள்ள கால்சியம் உறிஞ்சப்படுவதால், கர்ப்பிணிகள் தினமும் 3 கப் பாலாவது பருக வேண்டும். கர்ப்பிணிகளின் உடலில் புரோட்டீன் குறைவாக இருந்தால், அது குழந்தையின் எடையை குறைத்துவிடும். எனவே கர்ப்ப காலத்தில் பெண்கள் புரோட்டீன் உணவுகளை அதிகம் உட்கொள்வது மிகவும் இன்றியமையாதது. அதற்கு கொழுப்பு குறைவான பாலை தினமும் அதிக அளவில் பருக வேண்டும். பாலில் கால்சியம், புரோட்டீன் மட்டுமின்றி, வைட்டமின் டி சத்தும் வளமாக உள்ளது. மேலும் வைட்டமின் டி இருந்தால் தான், கால்சியம் சத்தானது உடலால் உறிஞ்சப்படும். பால் ஒரு சிறப்பான ஆன்டாசிட்(Antacid). பொதுவாக கர்ப்ப காலத்தில் நெஞ்செரிச்சல் ஏற்படும். இத்தகைய நெஞ்செரிச்சலை தடுக்க குளிர்ந்த பாலை குடித்தால் நல்ல பலன் கிடைக்கும். பால் குடிப்பதால் உடலின் நீர்ச்சத்து அதிகரிக்கும். ஆகவே கர்ப்ப காலத்தில் உடல் வறட்சியடையாமல் இருக்கவும், நீர்ச்சத்தை அதிகரிக்கவும் பால் குடிப்பதும் அவசியம். இஞ்சிப்பால் இஞ்சியை தோலைச் நீக்கி விட்டு நசுக்கிக் கொள்ளவும். நசுக்கிய இஞ்சியை முக்கால் கப் தண்ணீரில் போட்டு நல்லா கொதிக்க விடணும். தண்ணீரில் இஞ்சியின் சாறு முழுவதும் இறங்கிய உடன் வடிகட்டி சாரை மட்டும் எடுத்துக் கொள்ளணும். ஒரு கப் காய்ச்சிய பாலில் வடிக்கட்டிய இஞ்சி சாறை கலந்து கொள்ளவும். அத்துடன் ஒரு ஸ்பூன் தேன் அல்லது பணங்கற்கண்டு சேர்த்தால் சுவையான இஞ்சிப்பால் தயார்.

பயன்கள்
நுரையீரல் சுத்தமாகும்.
சளியை குணமாக்கும் வாயுத் தொல்லை நீங்கும்
தேவையற்ற கொழுப்புகள் குறையும்.