Posted by : Author
Monday, 1 June 2015
ஆரோக்கியமான வாழ்க்கைக்கு ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக்கொண்டாலும், அவற்றை சாப்பிடுவதற்கென்று சில விதிமுறைகள் உள்ளன.
இதோ சில விதிமுறைகள்:
- நின்று கொண்டு சாப்பிடும் பழக்கத்தை கைவிட்டு,
- பொறுமையாக அமர்ந்து சாப்பிட வேண்டும்.
- எந்த வகை சாப்பாடாக இருந்தாலும் நன்றாக மென்று சாப்பிடுங்கள்.
- பேசிக்கொண்டு சாப்பிடுவதை நிறுத்துங்கள்.
- சாப்பிடும் பொழுது இடையில் தேவையில்லாமல் தண்ணீர் குடிப்பதை தவிர்த்துவிட்டு,
- உணவு அருந்திய பின்னர் தண்ணீர் குடியுங்கள்.
- அவசர அவசரமாக சாப்பிட வேண்டாம். பிடிக்காத உணவுகளை கஷ்டப்பட்டு சாப்பிட வேண்டாம்.
- பிடித்த உணவுகளை அளவுக்கு அதிகமாகவும் சாப்பிட வேண்டாம்.
- இரவு உணவில் கீரை உணவுகளை சேர்க்க வேண்டாம்.
- சாப்பாட்டுக்கு பின்பு பழங்கள் சாப்பிட வேண்டாம்.
- சாப்பிடும் முன்பு சிறிது நடந்துவிட்டு பின்னர் சாப்பிடவும்.