Posted by : Author Thursday, 11 June 2015


அன்றாட வாழ்வில் சேர்த்துக் கொள்ளக்கூடிய மருத்துவ குணங்கள் நிறைந்த பொருள் தான் மிளகு.
இதில் மாங்கனீஸ், இரும்பு, பொட்டாசியம், வைட்டமின் சி, வைட்டமின் கே மற்றும் நார்ச்சத்து என்பன அடங்கி உள்ளது.

வலி மற்றும் காது சம்மந்தமான பிரச்சனைகள், பூச்சிக் கடி, குடல் இறக்கம், சுக்குவான் இருமல் ஆஸ்த்துமா போன்றவற்றிற்கு மிளகு இன்றி அமையாத ஒன்று.

நரம்புத்தளர்ச்சி, கை கால் நடுக்கம், உதறல், ஞாபக சக்தி குறைபாடு, முதுமையில் உண்டாகும் மாறாட்டம் இவற்றிற்கு நல்ல மிளகு சிறந்த மருந்தாகும்.

மிளகின் நன்மைகள்

* மிளகுடன் பனை வெல்லம் கலந்து காலையும் மாலையும் சாப்பிட்டு வந்தால் தலைப்பாரம்,தலைவலி போன்றவை குணமாகும்.

* மிளகை சுட்டு அந்தப் புகையை நுகர்ந்தால் தலைவலி குணமாகும் அது மட்டும் இன்றி மிளகை இடித்து தலையில் பற்றுப் போட்டாலும் தலைவலி விரைவில் குணமாகும்.

* தொண்டை வலி இருந்தால் கொஞ்சம் மிளகு, ஓமம், உப்பு ஆகிய மூன்றையும் சேர்த்து வாயில் போட்டு மென்றால் தொண்டை வலி படிப்படியாக குணமாகும்.

* மிளகைப் ஒரு ஸ்பூன் எடுத்து அதை பொடி செய்து, சிறிதளவு உப்பு சேர்த்து சூடாக்கி சிறிதளவு நெய் சேர்த்து சாப்பிட்டால் வயிற்று உப்புசம், பசியின்மை போன்றவை உடனே குணமாகும்.

* சளி, ஜலதோஷம் அதிகமாக இருந்தால், மிளகு ஒரு ஸ்பூன் எடுத்து நெய்யில் வறுத்து பொடி செய்து வைத்துக் கொண்டு தினமும் மூன்று வேளை அரை ஸ்பூன் பொடியைச் சாப்பிடுவது நல்லது இரண்டு நாள்களிலேயே நல்ல மாற்றத்தை காணலாம்.

மிளகு அவல்

முதலில் மிளகை வாணலியில் போட்டு வறுத்துக் கொண்டு, பின்பு மிக்ஸியில் போட்டு பொடி செய்து கொள்ள வேண்டும்.

இதேபோன்று முந்திரியை நெய் சேர்த்து வறுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

அவலை நீரில் போட்டு, மென்மையாகும் வரை ஊற வைக்க வேண்டும்.

இதன் பின்னர் வாணலியை அடுப்பில் வைத்து, நெய்யை ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை மற்றும் வரமிளகாய் சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும்.

பிறகு அரைத்து வைத்துள்ள மிளகுத் தூள், உப்பு சேர்த்து சிறிது நேரம் வதக்கி, பின் அவலை நன்கு கழுவி நீரை வடித்துவிட்டு, வாணலியில் சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.

இதில் துருவி வைத்துள்ள தேங்காய் சேர்த்து நன்கு கிளறி இறக்கினால், மிளகு அவல் உப்புமா ரெடி.



Leave a Reply

Subscribe to Posts | Subscribe to Comments

Welcome to My Blog

- Copyright © மருத்துவம் -New Mannar- Powered by New Mannar - Designed by New Mannar -