Posted by : Author Monday, 1 June 2015


கர்ப்பிணி பெண்கள் தினமும் ஆப்பிள் சாப்பிட்டு வந்தால் குழந்தை ஆரோக்கியமான உடல் நலம் கொண்ட குழந்தையாக இருக்கும். ஒரு ஆப்பிள் பழத்தில் கர்ப்பிணிகள் பயன் பெறும் வகையில் புரதம், கொழுப்பு, கார்போஹைட்ரேட், கால்சியம், பாஸ்பரஸ், நார், இரும்புசத்து, வைட்டமின் A-B1-B2 மற்றும் சி போன்ற சத்துக்களை கொண்டுள்ளது. பொதுவாக கர்ப்பகாலத்தில் கர்ப்பிணிகள் ஆப்பிள் சாப்பிட்டால் இரத்தத்தில் காணப்படும் சர்க்கரையின் அளவை கட்டுபாட்டுக்குள் வைத்துக்கொள்ளும். அதாவது ஆப்பிள் பழத்தில் இயற்கையாகவே இனிப்பு பொருட்களை உள்ளது. அது இரத்த ஓட்டத்தில் நுழைந்து ரத்தத்தில் கலந்துள்ள சர்க்கரையின் அளவையும், இன்சூலினையும் கட்டுபாட்டுக்குள் வைத்துக்கொள்ள உதவுகிறது. மேலும் சுவாச நோயிலிருந்து குழந்தையை காத்துக்கொள்ளும். கர்ப்பகாலத்தில் அதிகம் ஆப்பிள் சாப்பிட்ட கர்ப்பிணிபெண்களின் குழந்தைகள், 53% சுவாச பிரச்சனை மற்றும் ஆஸ்துமாவிலிருந்து விடுபடுகின்றனர். ஆப்பிள் சாப்பிடாத கர்ப்பிணிபெண்களின் குழந்தைகளுக்கு நோய் வர வாய்ப்பு அதிகமாக உள்ளது என்று ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. குறிப்பு: பொதுவாக ஆப்பிள் செரிமானத்தை அதிகமாக்கும் உணவுப் பொருள். ஆனால் அதில் உள்ள பெக்டின் என்னும் கார்போஹைட்ரேட், வாயுத் தொல்லையை உண்டாக்கும். எனவே கர்ப்பிணிகள் இதனை அளவாக சாப்பிடுவது நல்லது.

Leave a Reply

Subscribe to Posts | Subscribe to Comments

Welcome to My Blog

- Copyright © மருத்துவம் -New Mannar- Powered by New Mannar - Designed by New Mannar -