Posted by : Author
Monday, 1 June 2015


காரணம் என்ன?
மரபணு மற்றும் சுற்றுக்சூழுல் காரணிகள்.
வைரஸ் அல்லது பாக்டீரியா தொற்றுக்கள்.
உடல் பருமன்.
புகைப்பிடித்தல்.
கட்டுப்பாடற்ற மன அழுத்தம்.
தவறாக நோய் எதிர்ப்புசக்தி தூண்டப்படுவதும் இதற்கு காரணமாக அமைகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.
மன அழுத்தம் காரணமாக லித்தியம்(Lithium) போன்ற மருந்துகளை உட்கொள்வதன் மூலம் இந்த நோய் ஏற்பட வாய்ப்புள்ளது.
மேலும் இரத்த அழுத்தத்திற்கு உட்கொள்ளும் மருந்தான Beta blockers போன்ற மருந்துகள் மூலமும் இந்நோய் ஏற்படுகிறது.
அறிகுறிகள்
மீனின் செதில்களைப் போன்று தோல் உரிவது.
தலை, கண் இமை , முழங்கை, முழங்கால் போன்ற உடலின் பல பாகங்களில் சிவப்பு அல்லது வெள்ளை நிறங்களில் திட்டு ஏற்பட்டு அரிப்பு ஏற்படும்.
உள்ளங்கை மற்றும் உள்ளங்கால்களில் பிளேடால் வெட்டியது போன்ற வெடிப்பு, தோல் உரிதல் அரிப்பு, நகச்சொத்தை, மூட்டுகளில் வலியும் வீக்கமும் ஏற்பட்டு மூட்டுகள் கோணலாகும்.
மூட்டுகளை மடக்க இயலாமை, போன்றவை சொரியாஸிஸ் நோயின் அறிகுறிகளாகும்.
சிகிச்சைகள்
சொரியாசிஸ் பாதிப்பின் தீவிரத்தைப் பொருத்து இதற்கு சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன.
பாதிப்பு குறைவாக இருந்தால் ‘corticosteroid போன்ற வெறும் தடவக்கூடிய மருந்துகளை வைத்தே சரிசெய்துவிடலாம்.
வைட்டமின் ’டி’யில் சொரியாசிஸ் நோயின் வளர்ச்சியை குறைக்கும் சத்துக்கள் அதிகமாக உள்ளன. எனவே மிதமாக சொரியாசிஸ் பாதிக்கப்பட்டவர்களுக்கு வைட்டமின் டி நிறைந்த கால்சிபொட்ரீனி(calcipotriene) என்ற மருந்து பரிந்துரைக்கப்படுகிறது.
இந்த மருந்தை பயன்படுத்துவதால் தோல்களில் எரிச்சல் ஏற்படக்கூடும் . எரிச்சல் ஏற்படாமல் இருக்கவேண்டும் என்றால் இதற்கு நிகரான கால்சிடீயோல்(Calciodosis) என்ற மருந்தை பயன்படுத்தாலாம். ஆனால் இதன் விலை அதிகம்.
மேலும் அந்தரலின்என்ற மருந்து நமது தோல்களில் உள்ள அணுக்களில் ஏற்படும் டிஎன்ஏ செயல்பாடுகளை இயல்பாக வைக்க உதவும் என்றும் நம்பப்படுகிறது.
சூரிய கதிர்வீச்சினால் பாதிக்கப்பட்ட தோல்களுக்கு பயன்படுத்தப்படும் ரெட்டினொய்ட்ஸ் வகையை சேர்ந்த டாஸாரொடின் மருந்தும் சொரியாசிஸை குணப்படுத்த பயன்படுத்தப்படுகிறது.
எனினும் இந்த மருந்தை பயன்படுத்துவதால்சூரிய கதிர்வீச்சினால் பாதிக்கப்படகூடும் என்பதால் சன்ஸ்கிரீன் லோசன்ஸ்(sunscreen lotions) பயன்படுத்துவது நன்று.
எனினும் சொரியாசிஸை நிரந்தரமாக குணப்படுத்துவது என்பது கடினம், மேலும் அதிகப்படியான சொரியாசிஸ் பாதிப்பு இருக்குமேயானால் தகுந்த மருத்துவர்களை சந்தித்து ஆலோசனை பெறுவது நன்று.

Related Posts :
- Back to Home »
- மருத்துவம் »
- மீனின் செதில்களை போன்று தோல் உரிகிறதா? ஆபத்து

