Posted by : Author
Monday, 1 June 2015
தற்போது விதம் விதமான டாட்டூக்களை உடலில் வரைவது புதிய கலாச்சாரமாக மக்கள் மத்தியில் பரவி வருகின்றது.
ஆனால் இந்த அழகிய டாட்டூக்களுக்கு பின்னல் பல ஆபத்துக்கள் மறைந்திருப்பதாக மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அதாவது உடலில் வரையப்படும் டாட்டூக்களால் ஒரு சில ஆண்டுகள் கழித்து உடலில் சில தொற்றுக்கள், அரிப்பு மற்றும் வீக்க நோய்கள் உண்டாவதற்கான சாத்தியங்கள் இருப்பதாக ஆய்வில் ஈடுபட்ட Dr. Marie Leger குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்காவின் நியூயோர்க்கில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றில் 6 சதவீதமானவர்கள் மேற்குறித்த ஏதாவது ஒரு நோய்க்கு ஆளாகியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், இது அவர்கள் டாட்டுக்களை வரைந்து குறைந்தது 4 மாதங்களின் பின்னர் ஏற்பட்டவையாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பல ஆண்டுகள் கழித்தும் டாட்டூக்களினால் பக்க விளைவுகளை ஏற்படலாம் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.