Posted by : Author
Wednesday, 6 May 2015
சமையலில் பலவாறாக உபயோகப்படுத்தும் கொண்டைக்கடலை செடியின் விதைப்பகுதி, புரதச்சத்து மிகுந்தது. சைவ உணவு உண்பவர்களுக்கு புரதத்தை நாம் பருப்பு, பயறு வகைகள், தானியங்கள், பால் மற்றும் பால் பொருட்களில் இருந்து பெறவேண்டும். மற்ற நாடுகளில் நமது நாட்டைப்போல பலவிதமான பருப்புகள், பயறு வகைகள் இருக்காது. பொதுவாக தானியங்களுடன் பருப்பு அல்லது பயறு வகைகள் 5:1 என்ற விகிதத்தில் சேரும்போது எல்லா முக்கிய அமினோ அமிலங்களும் சேர்ந்த முழுமையான புரதமாகப் பெற இயலும் என்பதை விஞ்ஞானம் கூறுகிறது. இதையே நமது முன்னோர்கள் இட்லி, தோசை, பொங்கல் என்று பல டிபன் வகைகளில் மட்டுமன்றி, மதிய உணவில், சாதத்துடன் கூட்டு, பொரியல், சாம்பார் என பலவற்றிலும் ஒவ்வொருவிதமான பருப்பு வகைகளை சேர்ப்பதின் மூலம் பெற இயலும் என்பதை மெய்ஞ்ஞானத்தின் மூலமே உணர்த்தினார்கள். மற்ற பயறு வகைகளைவிட கொண்டைக் கடலையை அதிகம் விரும்புகிறோம். கொண்டைக்கடலை காற்றில் உள்ள ஹைட்ர ஜனை உள்ளிழுப்பதால் செடியாக இருக்கும ;போது மண்ணின் சத்துகள் அதிகரிக்கும். கொண்டைக்கடலையை வேக வைக்கும் போது ஒரு சிலர் சீக்கிரம் வேக வேண்டும் என்பதற்காக சமையல் சோடா சேர்ப்பது உண்டு. இந்த சோடாவை சேர்த்தால் முக்கியமான தயாமின் என்னும் வைட்டமினை அழித்துவிடும். சிலருக்கு முழுப்பயறுகள் உண்ணும்போது வாயுத்தொல்லை ஏற்படும். ஊறவைத்த தண்ணீரை மாற்றி நல்ல தண்ணீர் ஊற்றி வேக வைத்தால் வாயு பிரச்னை குறையும். மேல் தோல் வெடிக்கும் வரை நன்கு மெத்தென்று வேக வைத்தால் வாயுத்தொல்லை அதிகம் வராது. வேகும்போதே ஒரு சிறு துண்டு இஞ்சி சேர்க்கலாம். பிரவுன் கொண்டைக் கடலையில் வெள்ளை கொண்டைக் கடலையைவிட சத்துகள் அதிகம். ஒருசில சத்துகள் வெள்ளைக் கடலையில் இல்லை. பயறு வகைகளிலேயே கொண்டைக்கடலையில்தான் நல்ல புரதம் கிடைக்கும். கிட்டத்தட்ட 100 கிராம் அளவில் 17.1 கிராம் அளவு புரதம் இருக்கிறது. இதில் எல்லா முக்கிய அமினோ அமிலங்களும் இருக்கின்றன. முளைகட்டும்போது பல சத்துகள் அதிகமாகும். சுலபமாக ஜPரணமாகும். முக்கியமாக என்சைம்கள் அதிகரிக்கும். வைட்டமின்-சியும் கிடைக்கும். புரதம் சுலபமாக ஜPரணமாகும். சீக்கிரமாக வேகும். முளை கட்டியதை வறுக்கும்போது 'மால்ட்' ஆக மாறும்போது நல்ல மணம் கிடைக்கும். எல்லா சத்துகளும் நிறைந்த இதை முழுமையான உணவு என்று கூறலாம். எடை குறையவும், இதய நோய் வராமலும் தடுக்கும் ஒமேகா 3 என்ற கொழுப்பு சரியான சதவிகிதத்தில் ஒமேகா 6 என்ற கொழுப்புடன் கலந்து இருக்கும் ஓர் உணவுப்பொருள். தினமும் ஏதாவது ஒரு விதத்தில் சேர்த்துக் கொண்டால் ஆரோக்கியமாக வாழலாம். பொட்டுக்கடலையாக உபயோகிக்கும் போது அதிகமாகத் தண்ணீர் குடிக்க வேண்டும். கர்ப்பிணிகளுக்கு மிகவும் முக்கியத் தேவை யான /போலிக் ஆசிட் என்னும் பி வைட்டமின் நிறைந்தது. மரபணுக் கோளாறுகள் வராமல் தடுக்கும் 'கோலின்' வைட்டமின் கொண்டைக்கடலையில் சிறந்த அளவில் உள்ளது. பிரவுன் நிற முழு கொண்டைக்கடலையில் எல்லா தாது உப்புகளும் இருக்கின்றன. சிறுநீரகக் கோளாறு உள்ளவர்கள், சோடியம், பொட்டாசியம் குறைக்க வேண்டிய நிலையில் உள்ளவர்கள் வெள்ளை கொண்டைக்கடலையை உண்ணலாம்.