Posted by : Author Wednesday, 6 May 2015


உணவருந்தும் போது தண்ணீர் குடித்தால் பல்வேறு பிரச்சனைகளை சந்திக்கக்கூடும். உணவருந்தும் போது ஏன் தண்ணீர் குடிக்க கூடாது என்பதற்கான காரணங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து பார்த்து இனிமேல் சாப்பிடும் போது தண்ணீர் குடிப்பதை தவிர்த்திடுங்கள். இரைப்பை சாறுகளை நீர்க்கச் செய்யும். வயிற்றில் செரிமான அமிலங்கள் உள்ளது. செரிமானத்திற்கும் உணவை உடைக்கவும் இது பயன்படுகிறது. இது போக, உணவோடு சேர்ந்து செரிமானமான தொற்று இயற்றிகளை அழிக்கவும் இந்த சாறுகள் உதவுகிறது. 'செரிமான தீ' என அழைக்கப்படும் செரிமான என்சைம்கள், உண்ணும் உணவை அரைக்க உதவும். அதனால் இது உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் பயனுள்ளதாக உள்ளது. இந்த தீ நீருடன் சேர்ந்து நீர்த்து போகும் போது, இது ஒட்டுமொத்த அமைப்பை மந்தமாக்குவதோடு, குடல் சுவர்களில் பிடிப்பை ஏற்படுத்தும். ஒட்டு மொத்த செரிமான அமைப்பும் தேங்கி போவதால், உட்கொண்ட உணவு வயிற்றிலேயே நீண்ட நேரத்திற்கு தங்கி, ஊட்டச்சத்தை உறிஞ்ச சிறு குடலுக்கு உணவு செல்லும் செயல்முறை தாமதமாகும். எச்சில் அளவை குறைக்கும் செரிமானத்திற்கு முதல் படியே எச்சில் தான். உணவை உடைப்பதற்கான என்சைம்கள் மட்டுமல்லாமல் செரிமான என்சைம்கள் சுரக்க ஊக்குவிக்கவும் உதவும். உணவருந்தும் போது தண்ணீர் குடித்தால், எச்சில் நீர்த்து போகும். இது வயிற்றுக்கு பலவீனமான சிக்னல்களை அளிப்பதோடு மட்டுமல்லாமல், உடைபடும் உணவை வாயிலேயே நிறுத்தி விடும். இதனால் செரிமானம் இன்னும் சிரமமாகி விடும். அமில உபாதை உண்டாக்கும் அமில உபாதை அடிக்கடி ஏற்பட்டு அவதிப்படுகிறீர்களா? அப்படியானால் சாப்பிடும் போது தண்ணீர் குடிக்கும் பழக்கத்தின் மீது பழியை போடலாம். தண்ணீர் குடிப்பதால் உங்கள் செரிமான அமைப்பு நீர்த்து போவதால், தொடர்ச்சியான உடல் சுகவீனத்தை அது ஏற்படுத்தும். சேச்சுரேட் ஆகும் வரை தண்ணீரை உறிஞ்சுவதை வயிறு நிறுத்தாது. அதன் பிறகு இரைப்பை சாறுகளை தண்ணீர் நீர்க்க செய்யும். இதனால் இயல்பை விட அந்த கலவை அடர்த்தியாகும். இதனால் சுரக்க வேண்டிய செரிமான என்சைம்களின் அளவு குறைந்துவிடும். இதன் மூலம் செரிமானமாகாத உணவுகள் உங்கள் அமைப்பில் இறங்கி, அமில எதிர்பாயல் மற்றும் நெஞ்சு எரிச்சலை ஏற்படுத்தும். உணவை நன்கு மென்று விழுங்கவும் உணவை அப்படியே விழுங்காதீர்கள்; நன்றாக மென்று உண்ணுங்கள். உணவை மென்று உட்கொண்டால் அது நமக்கு பல பயன்களை அளிக்கும். மேலும் செரிமான செயல்முறையை வேகமாக்க எச்சிலும் உதவும். இது போக மென்று உட்கொண்ட உணவு உடைபடுவதற்கும் உட்கிரகித்துத் கொள்வதற்கும் சுலபமாக இருக்கும். இதனால் செரிமான அமைப்பு அதன் பணியை சிறப்பாக செய்யும். இது போக, மென்று உண்ணுவதால் உள்ள மற்றொரு பயன் எச்சில் உற்பத்தி அதிகரிக்கும். இதனால் தண்ணீர் குடிக்கும் எண்ணம் ஏற்படாது. 30 நிமிடத்திற்கு முன்பே தண்ணீர் குடிக்கவும் உணவருந்துவதற்கு 30 நிமிடத்திற்கு முன்பே தண்ணீர் குடியுங்கள். உடல் எடையை குறைத்து ஆரோக்கியமான மெட்டபாலிசத்தை உண்டாக்க வேண்டுமானால், உணவருந்தும் முன், அறை வெப்பநிலையை கொண்ட நீரை ஒருவர் குடிக்கவேண்டும். இதனால் உணவருந்தும் போது தண்ணீர் குடிக்க வேண்டும் என்ற ஆவலையும் இது குறைக்குமாம்….!

Leave a Reply

Subscribe to Posts | Subscribe to Comments

Welcome to My Blog

- Copyright © மருத்துவம் -New Mannar- Powered by New Mannar - Designed by New Mannar -