Posted by : Admin Friday, 8 November 2013

உணவில் கட்டுப்பாடுகளை கடைபிடிக்க வேண்டும், அதுவும் கொழுப்புச்சத்து நிறைந்த உணவு வகைகளை தவிர்த்து விடுவதே நல்லது.
அப்படி அறவே தவிர்க்க முடியாத சூழ்நிலையில் சிறந்த ஊட்டச்சத்து நிறைந்த உணவை அதிக அளவில் உட்கொண்டு கொழுப்புச்சத்து நிறைந்த உணவை குறைவாக உட்கொள்ளலாம்.

அமெரிக்காவின் இதய அமைப்பின் படி, ஊட்டச்சத்து நிறைந்த உணவு வகைகளை சாப்பிட்டால், இரத்தத்தில் உள்ள கொழுப்புச்சத்து குறையும் என்று சொல்கிறது.

ஓட்ஸ்

காலை உணவை ஓட்ஸ்க்கு மாற்றினால் அது இரத்தக் கொழுப்பை பெரிதளவு குறைக்க உதவும். அதிலும் 2 கப் ஓட்ஸானது ஆறே வாரங்களில் LDL இரத்தக் கொழுப்பை 5.3% குறைக்கும். ஓட்ஸில் உள்ள பீட்டா க்ளுட்டான், நம் உடலில் உள்ள கெட்ட இரத்தக் கொழுப்பை உட்கொள்ளும் தன்மை படைத்தவை.

ரெட் ஒயின்

உடல் வலிமையை செழுமைப்படுத்த இதோ இன்னொரு வழி. ரெட் ஒயின் தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படும் ரெட் திராட்சைகள் இரத்தக் கொழுப்பை கட்டுபடுத்துவதில் பெரும் பங்கு வகிக்கின்றது.

எனவே ஒரு வாரத்திற்கு இரண்டு டம்ளர் ரெட் ஒயின் குடித்தால், நமது இரத்தக் கொழுப்பிற்கு நல்லது.

சால்மன் மற்றும் கொழுப்புள்ள மீன்கள்

ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த இயற்கை ஊட்டச்சத்து நிறைந்த உணவுப்பொருள் தான் சால்மன் மீன்கள்.

அவை இதய நோய்களான நெஞ்சு வலி, பக்கவாதம் மற்றும் அதிக இரத்த கொழுப்பு போன்றவைகளை துரத்த உதவும். அதிலும் மீன் வகைகளான சால்மன், சர்டின்ஸ் மற்றும் ஹெர்ரிங் வகைகள் நமது நல்ல இரத்த கொழுப்பை 4% உயர்த்த உதவும்.

நட்ஸ்

நட்ஸ் மற்றும் விதைகளில் இருக்கும் மோனோ சாச்சுரேட்டட் கொழுப்பில் குறைவான கொழுப்பு அமிலங்கள் உள்ளன.

இவை மூன்று வகை கொழுப்புகளான பாலி சாச்சுரேட்டட் கொழுப்பு, சாச்சுரேட்டட் கொழுப்பு மற்றும் மோனோ சாச்சுரேட்டட் கொழுப்பு ஆகியவற்றில் மிகவும் சிறந்தது.

அதிலும் நட்ஸ்கள் உடம்பில் நல்ல கொழுப்பை பெற உதவும். இதில் இருந்து வரும் கொழுப்பு எந்தவித இரசாயன முறையிலும் இல்லாமல் இயற்கையான முறையில் தருவதால் இதயம் நன்றாகவும், வயிறு நிரம்பியும், ஊட்டச்சத்து வழிமுறைகளுக்கு துணையாகவும் இருக்கும்.

அவரை

இதயத்திற்கு மிகவும் நன்மை அளிக்கக்கூடிய உணவுப்பொருட்களில் ஒன்று தான் அவரை. அதிலும் அரை கப் அவரையை, உணவில் சேர்த்து வந்தால், இரத்தக் கொழுப்பு 8% குறைய உதவி புரியும்.

மேலும் உணவில் காராமணி, மொச்சை கொட்டை போன்றவைகளை சேர்த்து வந்தால், அவை நாள் ஒன்றிக்கு தேவைப்படும் நார்ச்சத்தில் மூன்றில் ஒரு பங்கை அளிக்கும்.

டீ

டீயில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், காபியை காட்டிலும் குறைவான காப்ஃபைன் உள்ளது. அதுவும் 8 அவுன்ஸ் கப் காபியில் 135 mg காப்ஃபைன் உள்ளது.

அதுவே டீயில் 30 - 40 mg அளவே உள்ளது. டீயில் உள்ள பைட்டோ கெமிக்கல், நமது எலும்புகளை பாதுக்கக்கின்றன. மேலும், LDL இரத்தகொழுப்பிற்கு எதிராகவும் செயல்படுகின்றன.

சொக்லெட்

சொக்லெட் சாப்பிடுபவர்கள் டார்க் சொக்லெட் சாப்பிட்டால் நல்லது, ஏனெனில் அதில் பெரும் அளவு ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் கொழுப்பைக் குறைக்கும் தன்மை உள்ளது.

டார்க் சொக்லெட்டில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட், இரத்த குழாய்களுக்கு ஏற்படும் சேதமான சிர்ஹோசிஸ் வரும் வாய்ப்பை குறைக்கும்.

மேலும் இவை கல்லீரல் இரத்த குழாய்கள் சேதம் அடைவதை தவிர்க்கும். தினமும் 100 கிராம் சாக்லெட் சாப்பிட்டால் இதய பிரச்சனைகள் 21% குறையும் என மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.

கீரைகள்

கீரைகளில் உள்ள 13 ப்ளேவோனாய்டுகள் புற்றுநோய், இதய நோய்கள் போன்றவற்றில் இருந்து பாதுகாக்கின்றது. அதிலும் அரை கப் கீரையை தினமும் சாப்பிட்டால், நெஞ்சு வலியில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ளலாம்.

ஆலிவ் எண்ணெய்

ஆலிவ் எண்ணெயில் ஊட்டச்சத்து பலன்கள் அதிகம் இருக்கின்றன. இதில் உள்ள மோனோ சாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்கள், நல்ல கொழுப்பை குறைக்காமல், கெட்ட இரத்த கொழுப்பையும் ட்ரைகிளிசரையும் குறைக்க உதவும்.

Leave a Reply

Subscribe to Posts | Subscribe to Comments

Welcome to My Blog

- Copyright © மருத்துவம் -New Mannar- Powered by New Mannar - Designed by New Mannar -