Posted by : Admin Friday, 22 November 2013

நாம் அன்றாடம் உட்கொள்ளும் காய்கறிகள் பல பலன்களை கொண்டுள்ளது. ஒவ்வொரு காய்கறியும் ஒவ்வொரு தனித்தன்மை வாய்ந்த பலனை உள்ளடங்கியுள்ளது. 




ஊட்டச்சத்து நிறைந்த பச்சை ஓடுகளில் விளையும் பச்சை பட்டாணி, பழங்காலத்தில் இருந்தே விளையும் காய்கறிகளில் ஒன்றாகும். மாவுச்சத்து நிறைந்த பச்சை பட்டாணி நமது நாட்டில் விளையும் வணிகதானியங்களில் ஒன்றாகும். பெரும்பாலோர் பச்சை பட்டாணியை ஊட்டச்சத்து நிறைந்த காயாக கருதமாட்டார்கள். எனினும், இந்த பச்சை வகையைப் பற்றி சிறிது விளக்கமாக படித்து அதன் பயன்களை தெரிந்துகொள்ளலாம். பச்சை பட்டாணியில் ப்ஹைடொநியூடிரிஷியன்ஸ் அதிகம் நிறைந்துள்ளதால் அதன் பலன்கள் ஏராளம். ஆராச்சியாளர்களின் ஆராய்ச்சியின் படி, பச்சை பட்டணியில் உள்ள கௌமெஸ்டிரால் எனப்படும் பைட்டோ-நியூட்ரியண்ட்டுகள் புற்றுநோய்க்கு எதிராக செயல்படும் ஒன்றாகும். இந்த காய்கறியை தினமும் சாப்பிட்டு வந்தால், வயிற்று புற்றுநோய்க்கு சிறந்த மருந்தாக அமையும்.


இந்த செடி விரைவாக வளரக்கூடிய செடியாகும் மேலும் விளைப்பதற்கு எளிதான செடியாகும். இது களிமண்ணில் வளரும் மேலும் இதற்கு குளிர்ந்த வானிலை தேவைப்படும். மழைக்காலங்களில் இதன் பச்சை ஓடுகள் அதன் செடிகளில் தென்படும். அதன் அளவு 2-3 இன்ச்-களில் இருக்கும். இந்த ஓடுகளில் இருக்கும் பச்சை பட்டாணியை அப்படியே சாப்பிடுவதால், அதனை அவ்வாறே விதைக்கின்றனர். இந்த பச்சை பட்டாணியை சாப்பிடுவதால் பெரும்பாலான நோய்களில் இருந்து விடுபடலாம். நீங்கள் செய்ய வேண்டியது என்னவென்றால், அதன் ஓடுகளை நீக்கி உள்ளிருக்கும் ஊட்டச்சத்து நிறைந்த பச்சை பட்டாணிகளை சாப்பிட வேண்டும். இப்பொழுது பச்சை பட்டாணிகள் உங்களுக்கு அளிக்கும் நன்மைகளைப் பற்றி படிக்கலாம்.

உழவனின் நண்பன்


பச்சை பட்டாணிகள் ஊட்டச்சத்து வாய்ந்தவை மட்டுமல்லாது, சுற்றுச்சூழல் ஏற்ப வளரும் தன்மை வாய்ந்தவை. இவை மண்ணிற்கு அதிக பலன் தரும் நைட்ரஜன் பிக்சிங் செடி வகைகளை சார்ந்தவை ஆகும். மேலும் இவை ஆகாயத்தில் உள்ள நைட்ரஜனை உள் வாங்கி பயனளிக்கும் விதமாக வெளிக்கொணருகின்றது. மண் அரிப்பை தடுக்கும் உபயோகமான தானிய செடியாகவும் இருக்கின்றது.

கெட்ட கொழுப்பு குறைக்கின்றது

பச்சை பட்டாணியின் மூலமாக உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் குறைக்கலாம். இந்த பச்சை பட்டாணி உடலில் உள்ள ட்ரை கிளிசரைடுகளின் அளவைக் குறைத்து, இரத்தத்தில் உள்ள நல்ல கொழுப்புச்சத்தை அதிகரிக்கும். இதன் மூலமாக நமக்கு ஏற்படும் ஏராளமான நோய்களில் இருந்து விடுபடலாம்.

மலச்சிக்கலில் இருந்து நிவாரணம்


நார்ச்சத்து குறைவாக இருக்கும் உணவை உட்கொள்வதால் மலச்சிக்கல் ஏற்படும். ஆனால் நார்ச்சத்து நிறைந்த இந்த பச்சை பட்டாணியை சாப்பிட்டு வந்தால், மலச்சிக்கலில் இருந்து விடுபடலாம்.

இதயத்தை பாதுகாக்கும்

இதய நோய்களை தடுப்பதே இந்த பச்சை பட்டாணியின் மிக முக்கிய பலனாகும். இதில் உள்ள நோயெதிர்ப்பு அழற்சி பொருட்களும் சிறிதளவு ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளும் இதய நோய்களில் இருந்து பாதுகாக்கும்.

உடல் எடையை குறைக்க உதவும் உணவு


இன்று அதிகரித்து வரும் உடல் எடையை குறைக்க உடற்பயிற்சி நிலையங்களுக்கு செல்வதால், இந்த பச்சை பட்டாணி பெரிதும் உதவும். எப்படியெனில் இதில் கொழுப்புச்சத்து குறைவாக உள்ளதால், உடல் எடையை குறைக்க உதவும் பலனை பெற்றுள்ளது.

அல்சைமர் நோயை தடுக்கும்


இதில் நோயெதிர்ப்பு அழற்சி தன்மை நிறைந்துள்ளதால் அல்சைமர் நோயை தடுக்க உதவும். மேலும் இதனை உட்கொண்டால், ஆஸ்டியோபோரோசிஸ் மற்றும் ப்ரோஞ்சிடிஸ் நோய்களையும் எதிர்க்கலாம்.

சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்கும்


அதிக நார்ச்சத்தும் புரோட்டீன் சத்தும் நிறைந்துள்ள பச்சை பட்டாணிகள், இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவும்.

வயிற்று புற்றுநோய்க்கு எதிரான காய்


பச்சை பட்டாணி வயிற்று புற்றுநோய்க்கு எதிர்த்து செயல்படும். நாள் ஒன்றிக்கு 2 மில்லிகிராம் பட்டாணி சாப்பிட்டால் புற்றுநோயை எதிர்க்க பெரிதும் வழிவகுக்கும். இந்த இயற்கையான மருந்து இருக்க மற்ற மருந்துகளை நாம் ஏன் நாட வேண்டும்?

வலிமையான எலும்புகள்


வைட்டமின் கே நிறைந்துள்ள பச்சை பட்டாணி எலும்புகளை வலுவடையச் செய்யும். ஆஸ்டியோபோரோசிஸ் எதிராக செயல்படும் தன்மை வாய்ந்தது. மொத்தமாக, ஆரோக்கியமான வாழ்விற்கு பச்சை பட்டாணி மிகவும் அவசியமானதாகும்.

என்றும் இளமை

பச்சை பட்டணியில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் என்றும் இளமையாக வைக்க உதவும். இதில் உள்ள ப்ளேவோனாய்டுகள், பைட்டோ நியூட்ரியன்ட்டுகள், கரோட்டினாய்டுகள் மற்றும் ஃபீனாலிக் அமிலம் போன்றவை இளமையாகவும், எனர்ஜியாகவும் வைக்க உதவும். இது ஒரு வித்தியாசமான பலனல்லவா?

Leave a Reply

Subscribe to Posts | Subscribe to Comments

Welcome to My Blog

- Copyright © மருத்துவம் -New Mannar- Powered by New Mannar - Designed by New Mannar -