Posted by : Admin Friday, 18 October 2013

 தற்போது பெரும்பாலான பெண்களுக்கு அறுவைசிகிச்சை பிரசவத்தையே சிறந்ததாக சொல்கின்றனர். ஏனெனில் சுகப்பிரசவத்தின் போது ஏற்படும் வலியை தாங்கிக் கொள்ள முடியாது என்பதாலேயே. 

ஆனால் உண்மையில் அறுவைசிகிச்சை பிரசவத்தின் போது அவ்வளவாக வலி தெரியாவிட்டாலும் அந்த மாதிரியான பிரசவத்திற்குப் பின்னர் வாழ்நாள் முழுவதும் ஏற்படும் பக்கவிளைவுகளைப் பற்றி யாரும் யோசிக்கவில்லை. அறுவைசிகிச்சை பிரசவத்தை தேர்ந்தெடுத்தால், அதற்கு பின்னர் நிறைய பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். 

அறுவை சிகிச்சை பிரசவம் என்றாலேயே வயிற்றை கிழித்து குழந்தையை வெளியே எடுப்பது. அவ்வாறு அறுவைச்சிகிச்சை செய்து குழந்தையை வெளியே எடுக்கும்பொழுது வயிற்றில் ஏற்படும் தழும்பானது வாழ்நாள் முழுவதும் அப்படியே இருக்கும். 

அதுமட்டுமின்றி அவ்வாறு அடிவயிற்றில் அறுவைசிகிச்சை செய்யும் போது, பிற்காலத்தில் வேறு ஏதாவது அறுவைசிகிச்சை வயிற்றில் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டால், அது மிகுந்த ஆபத்தை ஏற்படுத்திவிடும். 

சுகப்பிரவத்தை விட அறுவைசிகிச்சை செய்து குழந்தை பெற்றவர்களுக்கு குறைந்தது 3 மாத ஓய்வானது அவசியம். வேலை செல்லும் பெண்களுக்கு இது மிகவும் பிரச்சனையாகிவிடும். ஏனெனில் அலுவலகத்தில் மகப்பேறு விடுப்பு மூன்று மாதம் என்பதால், அதற்கு மேல் விடுப்பு எடுத்தால், சம்பளத்தில் பிடித்துக் கொள்வார்கள் என்பதை விட, குழந்தையுடன் அதிகமான நேரத்தை செலவழிக்க முடியாது. 

பொதுவாகவே தசையில் ஏதேனும் கடுமையான வெட்டுக்கள் ஏற்பட்டால், அந்த இடத்தில் குடலிறக்கம் என்னும் ஒருவித புடைப்பானது உண்டாகும். குறிப்பாக அறுவைசிகிச்சை பிரசவத்திற்கு பின்னர் இந்த மாதிரியான குடலிறக்கம் ஏற்படும். 

அதிலும் அறுவைசிகிச்சை பிரசவத்திற்கு பின்னர் சரியான ஓய்வு எடுக்காவிட்டால் இறுதியில் குடலிறக்கத்திற்கு உள்ளாகக்கூடும். அறுவைசிகிச்சை செய்த பின்னர் அடிக்கடி கடுமையான முதுகு வலியானது ஏற்படும். 

அதிலும் அறுவைசிகிச்சையின் போது தையல்கள் போட்டிருப்பதால், ஒவ்வொரு முறை சிரிக்கும் போதும், இருமலின் போதும், தையல் போட்ட இடத்தில் ஒருவித அழுத்தம் மற்றும் வலியை உணர நேரிடும். இதனாலும் முதுகு வலி ஏற்படும்.

Leave a Reply

Subscribe to Posts | Subscribe to Comments

Welcome to My Blog

- Copyright © மருத்துவம் -New Mannar- Powered by New Mannar - Designed by New Mannar -