Posted by : Admin Wednesday, 23 October 2013

இன்றைய காலங்களில் நாம் நம்மை அழகுப்படுத்திக் கொள்வதில் மிகுந்த ஆர்வம் எடுத்து வருகிறோம்.
அதிலும் முக்கியமாக வேலைக்குச் செல்லும் போது அல்லது விழாக்களுக்கு செல்லும் போது நாம் நம்மை அழகுப்படுத்திக் கொள்ள ஆசைப்படுகிறோம்.

அழகு என்றவுடன் உடை அலங்காரங்கள் தான் முதல் பங்கு வகிக்கின்றது. இரண்டாவதாக இருப்பது நமது முக அழகு தான்.

அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பது பழமொழியாக இருந்தாலும், ஒருவது தோற்றத்தை அழகாக்குவது முகம் தான். நாம் அனைவரும் விரும்புவது அழகான, பளிச்சிடும் மற்றும் குறையில்லா சருமத்தை தான்.

அத்தகைய சருமத்தை வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே பெறலாம்.

தேன்

இந்த பேஸ்பேக் சருமத்திற்கு சிறந்த மாய்ஸ்சுரைசராக இருக்கும். இதனை தயாரிப்பதற்கு, ஒரு கிண்ணத்தில் 2 மேஜைக்கரண்டி பால் பவுடர் மற்றும் 2 மேஜைக்கரண்டி தேன் சேர்த்து கலக்கவும்.

இதனை நன்றாக கலந்த பின்னர் முகத்தில் தடவவும், 15 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரால் கழுவவும்.

தேன் மற்றும் எலுமிச்சை சாறு

பால் பவுடரில் தேன் மற்றும் எலுமிச்சை சாறு கலக்கவும். இதனை பசை பதத்திற்கு கொண்டு வரவும்.

அதை முகம் மற்றும் கழுத்தில் தடவி, குறைந்தது 20 நிமிடங்கள் வரை காய வைக்கவும். பின்னர் குளிர்ந்த நீரால் கழுவவும், இது ஒரு சிறந்த சரும வெண்மைக்கான ஃபேஸ் பேக் ஆகும். இதனை தினமும் பயன்படுத்தலாம்.

பாதாம் எண்ணெய் மற்றும் எலுமிச்சை சாறு

1 மேஜைக்கரண்டி தேன், ஒரு மேஜைக்கரண்டி பால் பவுடர் மற்றும் அரை மேஜைக்கரண்டி பாதாம் எண்ணெய் ஆகியவற்றை எடுத்துக் கொள்ளவும்.

இவை அனைத்தையும் ஒரு கிண்ணத்தில் கலந்து பசை போலாக்கவும். இதனை முகம் மற்றும் கழுத்தில் தடவி 20 நிமிடங்கள் ஊற வைத்து கழுவவும்.

இதனை தினமும் பயன்படுத்தி வந்தால், சன் டானில் இருந்து விடுபடலாம்.

ஆலிவ் எண்ணெய்

ஒரு மேஜைக்கரண்டி பால் பவுடரில், அரை மேஜைக்கரண்டி ஆலிவ் எண்ணெயை கலந்து ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொள்ளவும்.

இதனை பசை பதத்திற்கு கொண்டு வரவும். இதை முகத்தில் தடவி 15 நிமிடங்கள் காய விடவும்.

பின்னர் சுடுநீரில் கழுவிவிடவும். இது சருமத்தை மாய்ஸ்சுரைஸ் செய்து, ஒட்டுமொத்த சரும வலிமையை மேம்படுத்தும்.

ஆலிவ் எண்ணெய், தயிர் மற்றும் தேன்

ஒரு மேஜைக்கரண்டி பால் பவுடர், ஒரு மேஜைக்கரண்டி தயிர், ஒரு மேஜைக்கரண்டி தேன் மற்றும் அரை மேஜைக்கரண்டி ஆலிவ் எண்ணெய் எடுத்துக் கொள்ளவும்.

இதனை ஒரு கிண்ணத்தில் கலந்து ஃபேஸ் பேக்கை தயாரிக்கவும். பின் இதனை முகம் மற்றும் கழுத்தில் தடவி 20 நிமிடங்கள் கழித்து சுடுநீரில் கழுவிவிடவும்.

கடலை மாவு, மஞ்சள் பொடி மற்றும் க்ரீன் டீ

ஒரு கிண்ணத்தில் 2 மேஜைக்கரண்டி கடலை மாவு, ஒரு மேஜைக்கரண்டி பால் பவுடர், 2 மேஜைக்கரண்டி பொடி செய்த ஓட்ஸ் எடுத்துக் கொள்ளவும்.

பின் அதில் ரோஸ் வாட்டர் மற்றும் உபயோகித்த க்ரீன் டீ பையில் இருந்த இலைகள் ஆகியவற்றை சேர்க்கவும்.

இவற்றை பசை பதத்தில் வருமாறு நன்றாக கலந்து கொள்ளவும். பின்னர் முகத்தில் தடவி 20 நிமிடங்கள் கழித்து கழுவவும்.

Leave a Reply

Subscribe to Posts | Subscribe to Comments

Welcome to My Blog

- Copyright © மருத்துவம் -New Mannar- Powered by New Mannar - Designed by New Mannar -