Posted by : Admin Thursday, 17 October 2013

திருமணத்திற்கு முன்பு வரை சிற்றிடையும், ஒட்டிய வயிறுமாக இருக்கும் பெரும்பாலான பெண்கள், திருமணமாகி ஒரு குழந்தை பெற்ற பிறகு இடையும், வயிறும் பெருத்து விடுகின்றனர். தேசிய குடும்பநல மற்றும் சுகாதார ஆய்வில் 15 முதல் 45 வயதிற்குப்பட்ட பெண்களின் 11 சதவீதம் பேர் உடல் பருமனாவது தெரியவந்துள்ளது. 

 மெனோபாஸ் பருவத்தை அடையும் 40-60 வயதில் உடல் பருமனான நிலை மாறி, தற்போது 20- 30 வயதுக்குள் குண்டாகி விடுகின்றனர். உடல் பருமனாகும போது அதிகப்படியான கொழுப்புகள் தோலுக்கு அடியில் படிகின்றன. வயிற்றில் சேரும் கொழுப்புகள் தான் மிகவும் ஆபத்தானது. அடி வயிற்று கொழுப்பினால் நீரிழிவு, இருதயம் தொடர்பான நோய்கள் மற்றும் விரையில் மெனோபாஸ் நிலையை அடைவதன் மூலம் புற்றுநோய் அபாயம் உள்ளது. அதிக அளவு தண்ணீர் குடித்தால் உடலின் நச்சுத்தன்மை வெளிவேறும்.

 தூங்கி எழுந்த ஒருசில மணி நேரத்தில் காலை உணவை தொங்கலாம். முழு தானியங்கள், புரோட்டீன் நிறைந்த உணவுகளை சாப்பிட் வேண்டும். இரவில் வெகு சீக்கிரம் சமையலறையை மூடிவிட வேண்டும். தாமதமாக உணவு உண்பதை தவிர்ப்பது நல்லது. கேழ்வரகில் கால்சியம் அதிகம் உள்ளது. ஓட்ஸ் கொழுப்பை குறைக்கிறது. பார்லி தானியம் நீரிழப்பை குறைக்கிறது. பெண்களின் ஹார்மோன் செயல்பாட்டுக்கு சோயா நல்லது.

 இவற்றை உணவில் தவறாமல் சேர்க்க வேண்டும். வாயுத்தொல்லை, நெஞ்செரிச்சல், மலச்சிக்கல் போன்ற தொந்தரவுகளிலிருந்து விடுபட விழிப்புடன் இருக்க வேண்டும். ஓட்டல் உணவை தவிர்ப்பது நல்லது. முறையான உடற்பயிற்சி செய்து வயிற்றுக் கொழுப்பை குறைப்பதே பெண்களுக்கு ஆரோக்கியமானது

Leave a Reply

Subscribe to Posts | Subscribe to Comments

Welcome to My Blog

- Copyright © மருத்துவம் -New Mannar- Powered by New Mannar - Designed by New Mannar -