Posted by : Admin
Wednesday, 18 May 2011

ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட்டில் தேசிய புற்றுநோய் ஆய்வு மையம் உள்ளது. இங்குள்ள டி.என்.ஏ நிபுணர் மரியா பிளாஸ்கோ. ரத்த பரிசோதனை தொடர்பாக சமீபத்தில் இவர் தலைமையில் விரிவான ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது.
ஆய்வு பற்றி மரியா பிளாஸ்கோ கூறியதாவது: டி.என்.ஏ மற்றும் புரோட்டீன் இணைந்தது குரோமோசோம் எனப்படுகிறது. இது உயிர்களின் ஒவ்வொரு செல்லிலும் உள்ளது. குரோமோசோமின் இரு முனைகளிலும் தலோமர் என்பது உள்ளது.
குரோமோசோம்களை அழியாமல் பாதுகாப்பது இவை தான். இவை நன்றாக இருந்தால் குரோமோசோம் நன்றாக இருக்கும். வயது ஆக ஆக இந்த தலோமர் அளவு சிறிதாகிறது.
இவை வலிமை இழக்கின்றன. ஆரோக்கியமான குரோமோசோம்களைக் கொண்ட உயிர்கள் நீண்ட காலம் உயிர் வாழும். தலோமர் நார்மலான நீளத்தில் இருக்கிறதா என்பதை ரத்த பரிசோதனை மூலம் தெரிந்து கொள்ளலாம்.
தலோமர் எந்த நீளம் இருக்கிறது என்பதை தெரிந்து கொள்வதன் மூலம் நமது ஆயுளை ஓரளவு யூகிக்க முடியும். முக்கியமாக நமது உடல் ஆரோக்கியம் பற்றிய உண்மை நிலையை தெரிந்து கொள்ள முடியும்.
நமது உணவு பழக்க வழக்கங்கள், உடற்பயிற்சி போன்றவற்றையும் மாற்றிக்கொள்ள உதவியாக இருக்கும். இந்த ரத்த பரிசோதனை விரைவில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும்.
Related Posts :
- Back to Home »
- ஆரோக்கிய வாழ்வு »
- ரத்த சோதனை மூலம் ஒருவரின் ஆயுட் காலத்தை கண்டறியலாம்

