Posted by : Admin
Friday, 20 May 2011

காயம்பட்ட கைகளை எதிர் திசையில் குறுக்காக வைத்துக் கொள்ளும் போது உடலின் உணர் திறன் பாதிக்கப்படுகிறது. இந்த நிலையில் காய பாதிப்பு குறித்த தகவல்களை பெறுவதில் மூளை பெரும் குழப்பம் அடைகிறது.
இதனால் காயம்பட்ட கைளின் வலியை அதனால் நமக்கு உணர்த்த முடியாமல் போகிறது. ஆய்வாளர்கள் 4 மில்லி வினாடி வலி ஏற்படுத்தக்கூடிய லேசர் சோதனையை 20 பேரிடம் நடத்தினர். இந்த சோதனையின் போது கைகளை மாற்று திசையில் வைத்து இருந்தவர்களுக்கு வலி மிக குறைவாகவே உணரப்பட்டது.
வலியின் போது மூளை வெளிப்படுத்தும் வேகத்தை கண்டறிய இ.இ.ஜி எனப்படும் எலக்ட்ரோ செபலோ கிராபி பயன்படுத்தப்பட்டது. லண்டன் பல்கலைகழக உடலியல்துறை பேராசிரியர் டொக்டர் கியான்டோமென்சியோ தலைமையில் இந்த ஆய்வு நடத்தப்பட்டு அறிக்கை வெளியிடப்பட்டது.
Related Posts :
- Back to Home »
- ஆரோக்கிய வாழ்வு »
- கைகளை குறுக்கே வைத்துக் கொண்டால் காயத்தின் வலியில் இருந்து விடுபடலாம்

