Posted by : Admin
Monday, 9 May 2011

மாஸ்க் அணிந்தால் ஒரு நொடியில் தலைவலி பறந்துவிடும். மனிதர்களை இம்சை படுத்தும் நோய்களில் ஒன்று தலைவலி. இதனால் அவதிப்படாத யாரும் இருக்க முடியாது.
ஒற்றைத் தலைவலி, திடீர் தலைவலி என பல வகை உள்ளன. இதன் தாக்கம் மிக அதிகம். எந்த வேலையும் செய்ய முடியாமல் நம்மை முடக்கிப்போட்டு விடும். தலைவலிக்கு மாத்திரை எடுத்துக் கொண்டால் சில வேளைகளில் பலன் கிடைத்தாலும் பெரும்பாலான சமயங்களில் நிவாரணம் கிடைக்காது.
இந்த பிரச்னையை தீர்க்க சமீபத்தில் மேற்கொண்ட ஆராய்ச்சியில் மருத்துவ மாஸ்க் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதை அணிந்தால் நொடிப்பொழுதில் அனைத்துவித தலைவலியும் தீர்ந்துவிடும் என்கின்றனர் ஆராய்ச்சி மருத்துவர்கள்.
இந்த பிரத்யேக மாஸ்க்(முகமூடி போன்ற சாதனம்) விரைவில் அறிமுகமாக உள்ளது. உடலில் ஓக்சிஜன் அளவு தேவையைவிட சற்று குறைந்தாலும் தலைவலி ஏற்படும். அப்படிப்பட்ட நேரத்தில் புதிய கண்டுபிடிப்பான மாஸ்க் கைகொடுக்கும். இதை அணிந்தால் உடலில் குறையும் ஓக்சிஜன் அளவை உடனடியாக அதிகரித்து சமன்படுத்தி தலைவலிக்கு தீர்வு ஏற்படுத்துமாம்.
அமெரிக்காவில் உள்ள கெய்சிங்கர் மருத்துவமனையில் சோதனை முறையில் இந்த புதிய கண்டுபிடிப்பு பரிசீலித்து பார்க்கப்பட்டது. இதில் கிடைத்த வெற்றியைத் தொடர்ந்து மருத்துவ கவுன்சிலின் இறுதிகட்ட ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஒப்புதல் கிடைத்ததும் விரைவில் சந்தைக்கு வந்துவிடும் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.
Related Posts :
- Back to Home »
- மருத்துவம் »
- நொடிப் பொழுதில் தலைவலிக்கு தீர்வு தரும் மாஸ்க் தயாரித்து விஞ்ஞானிகள் சாதனை

