முருங்கை விதைகளை அடிக்கடி சாப்பிடுவதால் என்னாகும்?
Tuesday, 20 June 2017
Posted by Author
Tag :
ஆரோக்கிய வாழ்வு
முருங்கை விதைகள் அத்தனை மகத்துவம் கொண்டுள்ளது. பல வியாதிகளை நெருங்க விடாது. பல நோய்களை குணப்படுத்தும்.
பலரும் இந்த காலக்கட்டங்களில் தூக்கம் வராமல் அவதிப்படுகிறார்கள். அவர்கள் முருங்கை விதைகளை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் தூக்கமின்மை வியாதி குணமாகும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
மூட்டுகளின் இணைப்புகளில் வரும் வலியை போக்குகிறது. அதிக கால்சியம் இது கொண்டுள்ளதால் எலும்புகளும் பலம் பெறுகின்றது. மேலும் ஆர்த்ரைடிஸ் வராமல் நம்மை காக்கும் என ஆய்வுகள் கூறுகின்றன.
முருங்கை விதைகளிலிருந்து பிரித்தெடுக்கப்படும் எண்ணெயில் 30 வகையான ஆன்டி ஆக்ஸிடென்டுகள் இருக்கின்றன. இவை செல்களை ஆரோக்கியமாக பாதுக்காக்கும். இதனால் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியமாக திகழும்.
ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருக்கும் தன்மை பெற்றுள்ளது. அதோடு சர்க்கரை வியாதியையும் வரவிடாமல் தடுக்கும்.
செல் சிதைவை தடுக்கிறது. புதிய செல்கள் உருவாவதை பெருக்குகிறது. மற்றும் புற்று நோய் வர விடாமல் தடுக்கிறது.
இதயத்தில் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு உத்திரவாதம் இந்த முருங்கை விதைகள் தருகின்றன. . இவை இதயத்தில் படியும் கொழுப்புகளை வெளியேற்றும் பண்பை பெற்றுள்ளன.
மனித இனத்திற்கு அச்சுறுத்தலாக மாறிவருவதும், உயிர்க்கொல்லி நோயுமாக காணப்படும் புற்றுநோயை குணப்படுத்த பல்வேறு ஆராய்ச்சிகள் தொடர்ந்த வண்ணம் இருக்கின்றன.
இந்நிலையில் புற்றுநோய் தாக்கத்திற்கு உள்ளான ஸ்டெம் செல்களை அழிக்க புதிய வழிமுறை ஒன்றினை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
அதாவது ஆண்டிபயோட்டிக் மாத்திரைகளுடன் விட்டமின் C இனை இணைத்து பயன்படுத்துவதால் இது சாத்தியமாகின்றது.
உதாரணமாக Doxycycline உடன் விட்டமின் C (Ascorbic Acid) இணைத்து பயன்படுத்த முடியும்.
இவ்வாறு பயன்படுத்துவது ஏனைய முறைகளை விடவும் 100 மடங்கு வினைத்திறனானது எனவும் கண்டறியப்பட்டுள்ளது.
இதனை ஐக்கிய இராச்சியத்திலுள்ள சல்போர்ட் பல்கலைக்கழக விஞ்ஞானிகளே கண்டுபிடித்துள்ளனர்.
மேற்கண்ட கலவையானது கலங்களின் பிரதான சக்தி பிறப்பிக்கும் பகுதியாக இருக்கும் இழைமணி ஏனைய பகுதிகளுக்கு சக்தி வழங்குவதை தடுக்கின்றது.
இதன் மூலம் செயற்படத் தேவையான சக்தி கலப் புன்னங்கங்களுக்கு கிடைக்காத நிலையில் குறித்த கலங்கள் இறந்து போகின்றன.
ஃபீடிங் பாட்டில்: குழந்தைகளுக்கு ஏற்படும் அபாயங்கள்.......
Friday, 2 June 2017
Posted by Author
Tag :
ஆரோக்கியத்தை சொல்லும்
குழந்தைகளுக்கு ஃபீடிங் பாட்டிலில் தண்ணீர், பால் குடிக்க வைப்பது சுகாதாரமானதும் கிடையாது. கிருமித் தொற்று அதிக அளவில் இருக்கும்.
ஃபீடிங் பாட்டில்: குழந்தைகளுக்கு ஏற்படும் அபாயங்கள்
குழந்தைகளுக்கு தண்ணீர், பால் பருக வைத்த பல ரகங்களில் ஃபீடிங் பாட்டில்கள் உபயோகத்துக்கு வந்துவிட்டன. ஃபீடிங் பாட்டில் ரப்பரில் உள்ள கண்ணுக்குத் தெரியாத அழுக்குகளால் உடலினுள் நோய் உண்டாகும் அபாயம்... இப்படி ஃபீடிங் பாட்டிலில் உள்ள பல பயங்கரங்கள் குறித்து பார்க்கலாம்.
‘‘குழந்தை நேரிடையாக அம்மாவிடம் பால் குடிக்கும்போது, வாயை நன்றாக திறந்து நாக்கை வெளியே நீட்டியபடி பாலைக் குடிக்கும். ஃபீடிங் பாட்டிலில் பால் குடிக்கும்போது, குழந்தைகளின் வாய் குவியும். நாக்கு மடங்கி கொள்ளும். பாட்டில் ஃபீடிங் எடுத்துக்கொள்ளும் குழந்தைகளால் உறிஞ்சி குடிக்க முடியாது. அதன் காரணமாக, பாலை விழுங்கும்.
மூச்சு விடாமல் குடித்து முடிக்கும். அதனால், பாலை குடித்து முடித்த பிறகு குழந்தைகளுக்கு மூச்சு இரைக்கும். தாயிடம் பால் குடித்தல், கப்பில் பால் குடித்தல் பழக்கம் இல்லாத குழந்தைகளுக்கு சுவாசக்கோளாறு போன்ற பல பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்புகள் இருக்கின்றன.
பாட்டிலில் பால் அருந்தும்போது, பாலோடு சேர்த்து நிறைய காற்று வயிற்றின் உள்ளே செல்லும். இதனால், பாட்டில் பழக்கம் உள்ள குழந்தைகளுக்கு வாயுத்தொல்லை ஏற்பட்டு (Gastric Problem), வயிறு உப்புசத்தால் (Colic) அவதிப்படும். மேலும், பாட்டிலில் பால் குடிக்கும் வழக்கம் உடைய குழந்தைகள் மாலை 6 மணிக்கு மேல், தொடர்ந்து 2-3 மணிநேரம் அழுது கொண்டே இருக்கும். இதற்காக, குழந்தைகளுக்கு மருந்து (Colic Drops) கொடுப்பார்கள்.
சங்கில் பால் குடிக்கும் பழக்கம் கொண்டுள்ள குழந்தைகளால் குறுகிய காலத்தில் டம்ளரில் பால் குடிக்கவும் பழகிக் கொள்ளும். ஃபீடிங் பாட்டிலில் குடிக்க வைப்பது சுகாதாரமானதும் கிடையாது. கிருமித் தொற்று அதிக அளவில் இருக்கும். அதனால், குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கு உண்டாகும். பல், தாடை தொடர்பான பிரச்னைகள் ஏற்படும். பேச்சு வரத் தாமதம் ஆகும்.
உச்சரிப்பு சரியாக இருக்காது. பல் வரிசை மாற வாய்ப்பு உள்ளது. மேலும், பல் சம்பந்தப்பட்ட பிரச்னைகளும் தலைகாட்டும். இளம் தாய்மார்கள் பலர் பொது இடங்களில் குழந்தைக்கு பால் புகட்டுவது கஷ்டமான காரியம். அதனால்தான் பாட்டிலில் குடிப்பதற்கு பழக்கப் படுத்துகிறோம் என்று கூறுகின்றனர்.
அதில் உண்மையில்லை. ரயில் நிலையம், பேருந்து நிலையம், கடற்கரை, பூங்காக்கள் போன்ற மக்கள் அதிகமாக கூடுகின்ற இடங்களில் குழந்தைகளுக்கு பால் புகட்டுவதற்கு ஏற்ற வகையில், பிரத்யேக உடைகள் வந்துவிட்டன.
பாட்டிலில் குடிக்க வைப்பதற்குப் பதிலாக, கப்பில் பால் அருந்த வைப்பது மிகவும் நல்லது. அம்மாவிடம் பால் குடிக்கும் பழக்கம் உடைய குழந்தைகளுக்கு தாயின் வாசனை, அரவணைப்பு கிடைக்கும். ஃபீடிங் பாட்டில் பழக்கம் உடைய குழந்தைகளுக்கோ அம்மாவின் வாசனை, அரவணைப்பு ஆகியவையும் கிடைக்க வாய்ப்பு கிடையாது.
ஃபீடிங் பாட்டில் பழக்கம் உடைய குழந்தைகளுக்கு அம்மாவின் வாசனை, அரவணைப்பு ஆகியவையும் கிடைக்க வாய்ப்பு கிடையாது.
குழந்தைகளின் உணவு விஷயத்தில் கண்டிப்பாக கவனமாக இருக்க வேண்டும். அந்த வகையில் டீ, காபியை குழந்தைகளுக்கு கொடுப்பது நல்லதா என்பதை பற்றி பார்க்கலாம்.
டீ, காபி போன்ற உற்சாக பானங்களை 4 வயது வரை தவிர்ப்பது நல்லது. டீயில் உள்ள டென்னின் மற்றும் டேனிக் அமிலம் இரைப்பையில் அல்சர் எனப்படும் குடல் புண்ணை ஏற்படுத்தும். எனவே குழந்தைகளுக்கு அடிக்கடி டீ தருவதை தவிர்க்கவும். மேலும் இது பசியை குறைக்கும்.
டீயில் 2% கேபின் உள்ளது. புகையிலையில் உள்ள நிகோடின் போலவே இதுவும் ஒரு அடிமைப்படுத்தும் (addictive) பொருள் ஆகும்.
நிகோடின் அளவுக்கு தீங்கு இல்லை என்றாலும் விடாமல் டீ குடிக்கும் பழக்கத்தை இது ஏற்படுத்தும். கேபின் முதலில் நரம்பு மண்டலத்தை தூண்டி பின் அதனை அடக்குகிறது. எனவே இந்த பழக்கத்தை விட்டால் தலை வலி, சோர்வு, நடுக்கம் முதலியன ஏற்படலாம் (withdrawl symptoms)
டீ ஒரு diuretic அதாவது அதிகமான அளவில் சிறுநீரை வெளியேற்றும் தன்மைகொண்டது. உடலில் நீர் அளவு குறைவாகவே இருந்தாலும் வலியுடன் நீரை வெளியேற்றும். எனவே நீர் இழப்பு ஏற்படும். மேலும் இது சிறுநீரகங்களுக்கு வேலை பளுவை அளிக்கிறது. சாதாரண குழந்தைகளை விட டீ குடிக்கும் குழந்தைகள் தினமும் மூன்று முறை அதிகமாக சிறுநீர் போகும்.
டீ நேரடியாகவும், மறைமுகவாகவும் மலச்சிக்கலை ஏற்படுத்தும் தன்மை வாய்ந்தது. டீயில் உள்ள alkaloid பொருள்கள் நாம் உண்ணும் உணவில் உள்ள இரும்பு சத்தை குடலால் உறிஞ்சவிடாமல் தடுப்பதால் iron deficiency என்ற வகை ரத்த சோகை ஏற்பட வாய்ப்பு உள்ளது.
காபியில் கேபின் அளவு டீயில் இருப்பதைப்போல இருமடங்கு உள்ளது. மேலே சொன்ன விளைவுகள் இருமடங்கு ஏற்படும். மேலும் டானின் என்ற பொருளும் காபியில் உள்ளது. எனவே டீயை விட காபி குழந்தைகளுக்கு ஆபத்தானது.
4 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு ஒருமுறை மட்டும் குறைவான அளவில் டீயோ அல்லது காபியோ தரவும். இடையில் விடுமுறை நாட்களில் இதற்கும் விடுமுறை தரவும்.
டீ, காபி போன்ற உற்சாக பானங்களை 4 வயது வரை தவிர்ப்பது நல்லது. டீயில் உள்ள டென்னின் மற்றும் டேனிக் அமிலம் இரைப்பையில் அல்சர் எனப்படும் குடல் புண்ணை ஏற்படுத்தும். எனவே குழந்தைகளுக்கு அடிக்கடி டீ தருவதை தவிர்க்கவும். மேலும் இது பசியை குறைக்கும்.
டீயில் 2% கேபின் உள்ளது. புகையிலையில் உள்ள நிகோடின் போலவே இதுவும் ஒரு அடிமைப்படுத்தும் (addictive) பொருள் ஆகும்.
நிகோடின் அளவுக்கு தீங்கு இல்லை என்றாலும் விடாமல் டீ குடிக்கும் பழக்கத்தை இது ஏற்படுத்தும். கேபின் முதலில் நரம்பு மண்டலத்தை தூண்டி பின் அதனை அடக்குகிறது. எனவே இந்த பழக்கத்தை விட்டால் தலை வலி, சோர்வு, நடுக்கம் முதலியன ஏற்படலாம் (withdrawl symptoms)
டீ ஒரு diuretic அதாவது அதிகமான அளவில் சிறுநீரை வெளியேற்றும் தன்மைகொண்டது. உடலில் நீர் அளவு குறைவாகவே இருந்தாலும் வலியுடன் நீரை வெளியேற்றும். எனவே நீர் இழப்பு ஏற்படும். மேலும் இது சிறுநீரகங்களுக்கு வேலை பளுவை அளிக்கிறது. சாதாரண குழந்தைகளை விட டீ குடிக்கும் குழந்தைகள் தினமும் மூன்று முறை அதிகமாக சிறுநீர் போகும்.
டீ நேரடியாகவும், மறைமுகவாகவும் மலச்சிக்கலை ஏற்படுத்தும் தன்மை வாய்ந்தது. டீயில் உள்ள alkaloid பொருள்கள் நாம் உண்ணும் உணவில் உள்ள இரும்பு சத்தை குடலால் உறிஞ்சவிடாமல் தடுப்பதால் iron deficiency என்ற வகை ரத்த சோகை ஏற்பட வாய்ப்பு உள்ளது.
காபியில் கேபின் அளவு டீயில் இருப்பதைப்போல இருமடங்கு உள்ளது. மேலே சொன்ன விளைவுகள் இருமடங்கு ஏற்படும். மேலும் டானின் என்ற பொருளும் காபியில் உள்ளது. எனவே டீயை விட காபி குழந்தைகளுக்கு ஆபத்தானது.
4 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு ஒருமுறை மட்டும் குறைவான அளவில் டீயோ அல்லது காபியோ தரவும். இடையில் விடுமுறை நாட்களில் இதற்கும் விடுமுறை தரவும்.
இருமல், சளி போன்ற பிரச்சனைகளுக்கு சித்த மருத்துவத்தில் ஏராளமான, எளிய சிகிச்சை முறைகள், கைப்பக்குவங்கள் உள்ளன. அவற்றை பற்றி விரிவாக பார்க்கலாம்.
இருமலை குணமாக்கும் சித்த மருத்துவக் குறிப்புகள்
இருமல், சளி போன்ற பிரச்சனைகளுக்கு சித்த மருத்துவத்தில் ஏராளமான, எளிய சிகிச்சை முறைகள், கைப்பக்குவங்கள் உள்ளன. அவற்றை பற்றி விரிவாக பார்க்கலாம்.
இடைவிடாத இருமலால் அவதிப்படுபவர்கள் அதிமதுரத்தைப் பொடியாக்கி கால் ஸ்பூன் பொடியைத் தேனில் குழைத்துச் சாப்பிட்டால் நிவாரணம் கிடைக்கும்.
ஆடாதொடா இலையை இடித்து சாறு எடுத்து ஒரு ஸ்பூன் தேன் கலந்து சாப்பிட்டால் இரண்டே நாளில் எப்படிப்பட்ட இருமலும் காணாமல் போய்விடும்.
குழந்தைகள் தொடர் இருமலால் அவதிப்பட்டால் பெருங்காயத்தை எடுத்துத் தண்ணீரில் கரைத்துக் கொடுத்தால் இருமல் உடனே நிற்கும்.
மஞ்சள்தூளுடன் சிறிது மிளகைப் பொடியாக்கிச் சேர்த்து இரண்டையும் காய்ச்சிய பசும்பாலில் கலந்து பனங்கற்கண்டு சேர்த்துக் கொடித்தால் இருமல் குணமாகும்.
முற்றிய வெண்டைக்காயைச் சூப் செய்து குடித்தால் நாள்பட்ட இருமலும் குணமாகும்.
ஒரு முழு எலுமிச்சைப் பழத்தைப் பிழிந்து அதில் மூன்று ஸ்பூன் தேன் கலந்து குடித்தால் இருமல் குறையும்.
இருமலால் அவதிப்படுபவர்கள் அடிக்கடி உணவில் வெந்தயக் கீரையைச் சேர்த்துக் கொண்டால் இருமல் உடனே குணமாகும்.
இருமலால் அவதிப்படும் குழந்தைகளுக்கு கண்டங்கத்திரி வேரைச் சுத்தம் செய்து நன்றாக அரைத்து வெள்ளாட்டுப் பாலைக் காய்ச்சி அதில் கலந்து கொடுத்தால் இருமல் உடனே நிற்கும்.
கடுக்காய் மற்றும் சித்தரத்தை இரண்டையும் நன்றாக வறுத்துப் பொடியாக்கி இருமல் வரும்போது ஒரு சிட்டிகை அளவு வாயில் போட்டு அடக்கிக் கொண்டால் இருமல் உடனே நிற்கும்.
எலுமிச்சைப் பழச்சாறு, தேன் இரண்டையும் சம அளவு கலந்து சாப்பிட்டால் இருமல் சட்டென்று நிற்கும்.
வாய் துர்நாற்றத்தை இயற்கையான வழியில் குணமாக்க அற்புதமான சில தீர்வுகள் இதோ..
வாய் நாற்றத்தை போக்க என்ன செய்ய வேண்டும்?
- இலவங்கப்பட்டையை ஒரு கப் அளவு நீரில் போட்டு காய்ச்சி ஒரு பாட்டிலில் ஊற்றி வைத்துக் கொண்டு அந்த நீரால் தினமும் வாய் கொப்பளிக்க வேண்டும்.
- பார்ஸ்லி இலைகளை வாயில் போட்டு மென்று வந்தாலே வாய் துர்நாற்றத்திற்கு நல்ல பலனைக் காணலாம்.
- ஏலக்காய் விதைகளை தினமும் மென்று வருவதன் மூலம் இனிமையான, சுத்தமான சுவாச நிலையை பெறலாம்.
- கிரம்பை மென்று வாயில், வெற்றிலையை போல அடக்கிக் கொள்ள வேண்டும். இதனால் வாய் துர்நாற்றம் உடனே போய்விடும்.
- எலுமிச்சை சாறு மற்றும் உப்பு சேர்த்த கலவையால் தினமும் வாய் கொப்பளித்து வந்தால், வாய்துர்நாற்றத்தை தடுக்கலாம்.
- கொத்தமல்லி ஒரு சிறந்த நறுமணப்பொருள் என்பதால், இதை வாயில் போட்டு மென்றால் வாய்துர்நாற்றம் நீங்கும்.
தினமும் இருமுறை அவசியம் பற்களை சுத்தம் செய்யும் போது, நாக்கையும் சேர்த்து தவறாமல் சுத்தம் செய்து வந்தாலே, கடுமையான வாய் துர்நாற்றத்தை போக்கிவிடலாம்.
இயற்கையாகவே இனிப்புத் தன்மை உடைய கேரட்டை விரும்பாதவர்கள் எவரும் இல்லை எனலாம்.
இந்த கேரட்டை உணவில் எடுத்துக் கொள்பவர்களுக்கு கொழுப்புத் தொல்லையும், ஆண்மையின்மை பிரச்சனையும் நெருங்கவே நெருங்காது என்பது முழுக்க முழுக்கஉண்மை.
கேரட்டை சமைத்து உண்பதை விட, பச்சையாக சாப்பிடும் போது அதில் பெரும்பான்மையான சத்துக்கள் விரயம் ஆகாமல் நம்மை வந்து சேரும்.
- விட்டமின்"ஏ" சத்து நிறைந்துள்ள காரணத்தால், இவை ஆரோக்கியமான கண்களுக்கும், சருமத்திற்கும், உடல் வளர்ச்சிக்கும் மிகவும் உதவுகின்றது.
- இதில் நிறைந்துள்ள பீட்டா கரோட்டீன் கொழுப்பை கரைக்கும் வல்லமை பெற்றது.
- தினமும் ஒரு கேரட் சாப்பிடுவதன் மூலம், உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை அகற்றலாம் என்பது அறிவியல் பூர்வமான உண்மை.
- இவை இரத்தத்தைச் சுத்தப்படுத்தி, விருத்தியும் அடையச் செய்கின்றது. மேலும், குடல் புண்கள் வராமல் தடுக்கிறது. வாய் துர்நாற்றத்தை தடுக்கிறது.
- கேரட் சாற்றுடன், எலுமிச்சை சாறு கலந்து சாப்பிட்டால் பித்த கோளாறுகள் நீங்கும்.
- பாதி வேகவைத்த முட்டையுடன், கேரட் மற்றும் தேன்கலந்து சாப்பிட்டு வந்தால் ஆண்மை சக்தி அதிகரிக்கும்.
- கேரட் மற்றும் சர்க்கரைவள்ளிக்கிழங்கை உண்பதன் மூலம் மார்பகப் புற்றுநோயில் இருந்து ஆரம்ப நிலையிலேயே விடுபடலாம் என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
- இந்தக் காய்களில் உள்ள விட்டமின் ஏ-யில் இருந்து பெறப்படும் ரெட்டினாய்க் அமிலம், புற்றுநோய் உண்டாக்கும் செல்களை ஆரம்ப நிலையிலேயே அழித்துவிடும்.
- சருமத்துக்கு பொலிவைத் தந்து தோலில் ஏற்படும் சுருக்கத்தை கேரட் நீக்குகிறது.
- மஞ்சள் காமாலை குணமாக தினமும் கேரட் சாறு அருந்துவதுநலம்.
பெண்களுக்கு மாதவிடாயின் போது ஏற்படும் உதிரப்போக்கை கட்டுப்படுத்துகிறது.
உருளைக் கிழங்கை விட ஆறு மடங்கு சக்தி அதிகம் இருப்பதால் எளிதில் ஜீரணமாகின்றது, எலும்புகள் வலுப்படுகிறது.
முடி வளர்ச்சியை அதிகரிக்கும் கலம் கண்டுபிடிப்பு....
Tuesday, 30 May 2017
Posted by Author
Tag :
ஆரோக்கியத்தை சொல்லும்
மனிதர்களில் முடி கொட்டுதல் மற்றும் முடி வளர்ச்சியின்னை என்பன அழகை குறைக்கும் செயற்பாடுகள் ஆகும்.
இதனால் செயற்கை முறையில் முடி நடுதல் போன்ற மாற்று சிகிச்சைகள் உருவாக்கப்பட்டன.
எனினும் எதிர்காலத்தில் இயற்கையாகவே முடி வளர்ச்சியை அதிகரிக்க முடியும் என்ற நம்பிக்கை தரக்கூடிய கண்டுபிடிப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.
அதாவது தோலில் காணப்படும் நோயெதிர்ப்பு சக்தி கொண்ட கலங்கள் முடி வளர்ச்சியை ஊக்கப்படுத்துகின்றமை கண்டறியப்பட்டுள்ளது.
அதிலும் குறிப்பாக T வகை கலங்களே முடி வளர்ச்சியில் பிரதான பங்கு வகிக்கின்றன.
இதனை California San Francisco பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களே கண்டுபிடித்துள்ளனர்.
குறித்த கலங்களின் செயற்பாட்டினை தூண்டவதன் ஊடாக முடி வளர்ச்சியை அதிகரிக்க முடியும்.
இதற்காக மருத்துவச் சிகிச்சை எதிர்காலத்தில் சாத்தியமாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
சிறுநீர் கப்பு அடிக்குதா? அப்போ இதுதான் உங்கள் பிரச்சனை...
Friday, 26 May 2017
Posted by Author
Tag :
ஆரோக்கிய வாழ்வு
சிறுநீர் கழிக்கும் போது கடுமையான துர்நாற்றம் ஏற்பட்டால் அது எந்த நோயின் அறிகுறியை உணர்த்துகிறது என்பது உங்களுக்கு தெரியுமா?
சிறுநீர் கழிக்கும் போது துர்நாற்றம் ஏற்பட என்ன காரணம்?
- சில நேரங்களில் அதிகப்படியான உடல் வறட்சி சிறுநீர் துர்நாற்றத்தை உண்டாக்கும். எனவே அதற்கு போதிய அளவு நீரைப் பருகினால், இப்பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும்.
- சர்க்கரை நோய் இருந்தாலும் சிறுநீர் துர்நாற்றம் ஏற்படும். ஏனெனில் கல்லீரலில் கீட்டோன்களின் அளவு அதிகரிப்பதால், அது சிறுநீர் துர்நாற்றத்தை உண்டாக்குகிறது.
- சிறுநீரக கற்கள் இருந்தால் கூட அது சிறுநீர் துர்நாற்றத்தை ஏற்படுத்தும். எனவே கடுமையான சிறுநீர் துர்நாற்றம் ஏற்பட்டால், அது சிறுநீரக கற்கள் பிரச்சனை உள்ளது என்று அர்த்தமாகும்.
- கல்லீரலில் தொற்றுகள் இருந்தாலும் அது சிறுநீரக துர்நாற்றத்தை உண்டாக்கும். கல்லீரலானது டாக்ஸின்களை வெளியேற்ற முடியாத அளவில் செயலிழந்தால், அப்போது சிறுநீரில் அம்மோனியாவின் அளவு அதிகரித்து, சிறுநீர் துர்நாற்றத்தை உண்டாக்கும்.
- டயட் இருக்கும் போது சாப்பிடக் கூடிய சில உணவுகள், குறிப்பிட்ட மருந்துகள் மற்றும் விட்டமின் B6, புரோட்டீன் போன்ற சத்துக்கள் அதிகம் நிறந்த உணவுகளை அதிகம் உட்கொண்டாலும் அது சிறுநீர் துர்நாற்றத்தை உண்டாக்கும்.
- சிறுநீரில் உள்ள அம்மோனியாவின் அளவைக் கட்டுப்படுத்த, சிறுநீரகங்கள் கடுமையாக வேலை செய்யும் போது, சிறுநீரகங்கள் பலவீனமாகி, சிறுநீரில் அசிட்டிக் அளவு அதிகரித்து சிறுநீர் துர்நாற்றத்தை ஏற்படுத்தும்.
-
கொழுப்பு என்பது ஆண் பெண் இருபாலருக்கும் பிரச்சனை தரக்கூடிய ஒன்றுதான்.
பெண்களின் உடலில் பிட்டத்திலும் தொடைகளிலும் தோலுக்குச் சற்றுக் கீழே மட்டுமே கொழுப்பு திரளும்.
ஆனால் ஆண்களின் அடி வயிற்றுப் புழையிலும், சிறுகுடல் பகுதியிலும் கொழுப்பு திரளும்.
ஆண்களுக்கு கொழுப்பு அதிகபட்சமாக 0.85 முதல் 0.9 வரை இருக்கலாம். பெண்களுக்கு அதிகபட்சமாக 0.75 முதல் 0.8 வரை இருக்கலாம். இந்த உச்சவரம்புகளைவிடக் குறைவாயிருப்பதே நல்லது.
பல பெண்களுக்கு எவ்வளவு முயன்றாலும் பிட்டங்களும், தொடைகளும் குறையாது.
ஏனெனில் அந்த இடங்களில் உள்ள கொழுப்பு செல்கள் விடாப்பிடியானவை. தாய்மையுற்றுச் சிசுவுக்குப் பாலூட்டும்போது மட்டுமே பால் உற்பத்திக்காகத் தமது கொழுப்பு அமிலங்களைத் தந்து உதவும்.
ஊட்டப் பற்றாக்குறை காரணமாகத் தாயின் உடலில் கொழுப்பு இருப்பு குறைந்து, பாலிலும் சத்து குறைகிற நிலை ஏற்படுமானால் பிட்டங்களிலும் தொடைகளிலுமுள்ள செல்களிலிருந்து கொழுப்பு அமிலங்கள் விடுவிக்கப்பட்டுச் சத்துக் குறைபாட்டை ஈடுசெய்கிறது.
எனவே, பெண்களைப் பொறுத்தவரை கொழுப்பு என்பது மிகப் பெரிய சிக்கல்களை ஏற்படுத்துவதில்லை.
ஆனால், ஆண்கள் கவனமாக இருக்க வேண்டும். இதயம், நீரிழிவு சார்ந்த நோய்கள் அவர்களை அதிகம் தாக்க வாய்ப்புள்ளது என்பதைக் கவனத்தில்கொண்டு செயல்பட வேண்டும்.
நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு ரத்த நாள அடைப்பு பிரச்சனை வரலாம். இந்த இரத்த நாள அடைப்பை கைமருந்துகள் மூலம் குணப்படுத்த முடியும்.
இதயத்துக்கு வெளியே உள்ள சுத்த ரத்தக் குழாய்கள் சுருங்குவதை பெரிப்ரல் ஆர்ட்டீரியல் டிசிஸ் என்று அழைப்பார்கள். ஒருவித கெட்ட கொழுப்பு கரைபடுவதால் இது உருவாகிறது. ரத்த நாளங்களில் `பிளேக்’ என்று சொல்லக்கூடிய அழுக்கானது படியலாம். இது கையிலும் படியலாம். காலிலும் படியலாம். இதனால் சுத்தமான ரத்த நாளங்கள் அடைபடுகின்றன. ரத்தம் போவது தடைபடுகிறது. குறிப்பாக, காலுக்கு ரத்தம் செல்வது தடைபடுகிறது. ரத்தம் போகாவிட்டால், என்ன நேரிடும்?
அங்குள்ள திசுக்கள் அழியும். இதனால் காலை எடுக்க வேண்டிவரும். இதற்கு முக்கியமான காரணம் புகைபிடித்தல். நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கும் இது வரலாம். அதிக கொழுப்பு உள்ளவர்கள், அதிக மன அழுத்தம் உள்ளவர்கள், இதய நோய் உள்ளவர்களிடம் இது காணப்படும். சிலருக்கு வலி, மரத்துப் போதல், குத்துதல், கால் ஆடுசதையில் வலி போன்றவை காணப்படும்.
காலில் நாடிப் பார்க்க வேண்டும். அப்பொழுது காலில் புண்கள் வரும். குறிப்பாக விரல்கள், பாதங்கள் இவற்றில் புண் வந்தால் ஆறாது, நாள்பட்டு ஆறும். காலினுடைய நிறம் சற்று நீல நிறத்தில் காணப்படும். ஒரு காலின் சூடு, அடுத்த காலின் சூட்டிலிருந்து மாறுபடும். நகங்களில் மாறுபாடு காணப்படும். ஆண்மைக் குறைவு ஏற்படும். குறிப்பாக நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு மாரடைப்பு, பக்கவாதம் போன்றவை வரலாம்.
கட்டுப்படுத்த வழி :
இவர்கள் உடற்பயிற்சி, உணவு முறை, கொழுப்பை குறைக்கிற மருந்துகள், ரத்த அழுத்தத்தை குறைக்கிற மருந்துகளை எடுத்துக்கொள்ள வேண்டும். வேலை செய்யும்போது ஆடுசதையில் வலி வரும். ஓய்வு எடுத்தால் குறைந்துவிடும். ரத்தம் போகாததுதான் இதற்குக் காரணம். இதற்கு நவீன அறுவைசிகிச்சைகள் உள்ளன. இவர்கள் பொதுவாகவே நடந்தால் வலி ஏற்படுகிறது என்பார்கள்.
`5 நிமிஷம் ஓய்வெடுத்த பின் வலி குறைந்து விட்டது’ என்று சொல்வார்கள். இவர்களுக்கு டாப்ளர் டெஸ்ட் என்று சொல்லக்கூடிய காலில் ரத்தம் எவ்வாறு ஒடுகிறது என்று பார்க்கும் சோதனையை செய்ய வேண்டும். ஆஞ்சியோகிராபி பரிசோதனை செய்து பார்ப்பவர்களும் உண்டு. புகையிலையை அறவே ஒழிக்க வேண்டும். ஒழுங்காக உடற்பயிற்சி செய்ய வேண்டும். நீரிழிவு நோய், கொழுப்பு, ரத்த அழுத்த நோய் போன்றவற்றைக் கட்டுப்படுத்த வேண்டும்.
ஆயுர்வேத அணுகுமுறை :
காலில் ரத்த ஓட்ட அடைப்புக்கு சிகிச்சையாக வெண்தாமரை இதழ், மருதம்பட்டை இதழ், சீந்தில், பூண்டு ஆகியவற்றைச் சூரணமாக்கி சாப்பிட்டால், அந்த அடைப்பு வெளியேறும். கொத்தமல்லி கஷாயம் வைத்துக் கொடுக்க நல்ல பலன் கிடைக்கும். மகா மஞ்ஞிஷ்டாதி கஷாயம் அல்லது மஞ்சட்டி, மரமஞ்சள், வேப்பம் பட்டை, சீந்தில் கஷாயம் வைத்துக் கொடுத்தாலும் அடைப்புகள் மாறும். திரிபலா சூரணம் 10 கிராம்வரை வெந்நீரில் கலந்து சாப்பிட்டு வரலாம். ஏலாதி, மகா ஏலாதி போன்றவையும் இதற்குச் சிறந்தவை. நவீன மருத்துவத்தில் ஆஸ்பிரின் போன்ற மருந்துகளைக் கொடுப்பார்கள்.
கைமருந்துகள் :
‘பூண்டுக்கு மிஞ்சிய மருந்து இல்லை’. பூண்டு பற்களை நன்றாக வேகவைத்துப் பாலில் கலந்து காலை, மாலை என இரு வேளையும் குடித்து வந்தால் உடம்பில் கெட்ட கொழுப்பு அடைப்பு குறையும்.
பொதுவாக, நார்ச்சத்து நிறைந்த உணவுப் பொருட்கள், கெட்ட கொழுப்பு அடைப்பை உடலில் சேரவிடாமல் தடுக்கும். இதற்குச் சிறந்த உதாரணமாக ஆப்பிள் பழத்தைக் குறிப்பிடலாம். வாழைத்தண்டு, கீரை வகைகளைக் கூட்டு வைத்துச் சாப்பிடலாம்.
கறிவேப்பிலையுடன் சிறிது உளுந்து, புளி, உப்பு சேர்த்து துவையல் செய்து உணவுடன் சேர்த்துச் சாப்பிடலாம்.
வாழைத்தண்டு சாற்றில் கருமிளகை 48 மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு காய வைத்துப் பொடிக்கவும். உணவில் மிளகுக்குப் பதிலாக இந்தப் பொடியை பயன்படுத்தவும். உடலில் உள்ள கெட்ட கொழுப்பு கரைந்துவிடும்.
நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும் கொடம்புளி என்னும் புளியை வழக்கமாகப் பயன்படுத்தும் புளிக்கு பதிலாகப் பயன்படுத்தினால் நல்ல பலன் கிடைக்கும்.
பெண்கள் மாதவிடாய், பிரசவம் போன்ற நிலைகளில் பல்வேறு மாற்றங்களை உடல் ரீதியாக சந்திக்கின்றர்கள். இதற்கு ஹார்மோன்கள் முக்கிய காரணமாகும். பெண்களின் உடல் ரீதியான செயல்பாடுகள் எப்படி இருக்கும்?
* சுகப்பிரசவத்தின் போது, பெண்கள் 500 மி.லி ரத்தம் வரை இழக்க நேரிடும். அதுவே சிசேரியன் பிரசவத்தின் போது, 1000 மி.லி ரத்தம் வரை இழக்க நேரிடுகிறது.
* பெண்களின் இயல்பான நிலையில் இருக்கும் கர்ப்பப்பை 3 இன்ச் நீளமும், 2 இன்ச் அகலமும், 30 கிராம் அளவிற்கு குறைவான எடையுடனும் இருக்கும் சிறிய உறுப்பாகும்.
* கருவுறாத முட்டை கருப்பை சுவர் செல்களுடன் சேர்ந்து வெளியேறும் நிகழ்வே மாதவிடாய். இந்த சுழற்சி 10 நாட்கள் அல்லது அதற்கு மேலும் கூட தொடர்ச்சியாக நிகழ்கிறது.
* சீரற்ற மாதவிடாய் பிரச்சனையால், திடீரென உடல் எடை உயர்வு போன்ற உணர்வு, தூக்கமின்மை போன்ற பல உடல், மனநலப் பிரச்சனைகள் ஏற்படுகிறது.
* பெண்கள் குழந்தை பெற்ற பின் அவர்கள் உடலின் ஹார்மோன் அளவுகள் திடீரென குறையும். இதனால் போஸ்ட்பார்டம் ப்ளூஸ் (Postpartum blues) என்ற மனநலப் பிரச்சனைகள் 15 சதவீத பெண்களை பாதிக்கிறது.
* மெனோபாஸூக்கு பின் எஸ்ட்ரோஜென் ஹார்மோன் இழப்பு காரணமாக 20% பெண்கள் எலும்பு அடர்த்தியை இழக்க நேரிடுகிறது.
* ஒரு பெண் குழந்தை, தன் தாயின் கர்ப்பத்தில் சிசுவாக வளரும் போதே அதன் வாழ்நாளுக்கான கருமுட்டைகள் உருவாகியிருக்கும்.
* மாதவிடாய்க்கு பின் எஸ்ட்ரோஜன் ஹார்மோன் இழப்பால், மாரடைப்பு ஆபத்து பெண்களுக்கு அதிகமாகின்றது.
* கருமுட்டை என்பது சரும செல்லை விட 4 மடங்கு பெரியது ரத்த சிவப்பணுவை விட 26 மடங்கு பெரியது. விந்தணுவை விட 16 மடங்கு பெரியது.
* கருவில் 7 மில்லியன் கருமுட்டைகளுடன் வளரும் பெண் குழந்தை பிறக்கும் போதே 2 மில்லியன் கருமுட்டைகளுடன் பிறக்கும். பூப்படையும் போது, 4 லட்சம் கருமுட்டைகள் மீதமிருக்கும். அதன் வாழ்நாளில் 500 கருமுட்டைகள் வரை வெளிப்படும்.
* ஒவ்வொரு பெண்ணும் தனது வாழ்நாளில் தோராயமாக 3.500 நாட்களை மாதவிடாயுடன் கழிப்பதுடன், 81% பெண்கள் மாதவிடாய் நாட்களில் அடிவயிறு வலியால் துன்புறுகிறார்கள்.
* மாதவிடாய் நாட்களுக்கு முன் நடைபெறும் ஹார்மோன் ஏற்ற, இறக்க மாறுபாடுகளால் 30% பெண்கள் மூட் ஸ்விங்ஸ் பிரச்சனைகளை சந்திக்க நேரிடுகிறது.
* பெண்களின் கர்ப்பப்பை, கர்ப்பகாலத்தின் ஒன்பதாவது மாதத்தில் ஏறக்குறைய 40 செ.மீ அளவுக்கு நீளமாக இருப்பதுடன், குழந்தையின் நஞ்சுக்கொடி 5 கிலோ எடையைச்சுமந்திருக்கும்.
அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் செய்வது வயிற்றில் வளரும் குழந்தையை பாதிக்குமா?
Posted by Author
Tag :
ஆரோக்கியத்தை
அல்ட்ராசவுண்ட் ஸ்கேன்களின் நீண்ட கால விளைவுகள் பற்றி இன்னும் முழுமையாக தெரியவில்லை. ஆனால் பல காரணங்களுக்காக இது மருத்துவர்களுக்கு அவசியமானதாக இருக்கிறது.
அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் செய்வது வயிற்றில் வளரும் குழந்தையை பாதிக்குமா?
அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் இப்போதை விட பத்து ஆண்டுகளுக்கு முன்னர் அதிகமாக பயன்படுத்தப்பட்டு வந்தது. பிரசவம் எந்த வித சிக்கலும் இல்லாததாக இருந்தாலும், ஒரு தாய்க்கு ஐந்து ஸ்கேன்கள் வரை பரிந்துரைக்கப்படுகிறது. ஸ்கேன் எளிதில் பெறக்கூடியாதாகவும், விலை மலிவாகவும் உள்ளது.
மேலும் ஸ்கேன்கள் மருத்துவர்களுக்கு குழந்தையின் வளர்ச்சி, குழந்தையின் நிலை போன்ற அனைத்து விவரங்களையும் துல்லியமாக தருகிறது. இது குழந்தையை பற்றி மருத்துவர்கள் முழுமையாக அறிந்து கொண்டு அதற்கு ஏற்றாற் போல் சிகிச்சையளிக்க உதவியாக இருக்கிறது.
ஆனால் அல்ட்ராசவுண்ட் ஸ்கேன்களின் நீண்ட கால விளைவுகள் பற்றி இன்னும் முழுமையாக தெரியவில்லை. ஆனால் பல காரணங்களுக்காக இது மருத்துவர்களுக்கு அவசியமானதாக இருக்கிறது. அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் உங்கள் குழந்தையின் படத்தை பெற அதிக அதிர்வெண் ஒலி அலைகளை வெளிப்படுத்துகிறது. இந்த அலைகள் வெப்பத்தை உற்பத்தி செய்கின்றன.
அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் 4 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையை அதிகரிக்கிறது என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். உதாரணமாக 36 டிகிரி C வெப்பநிலை இருந்தால், இது 4 டிகிரி செல்சியஸ் அதிகரித்து 40டிகிரி செல்சியஸ் ஆக மாறுகிறது. இதனால் தீய விளைவுகள் ஏற்படலாம். ஆனால் சாதாரணமான 2டி, 3டி, 4டி போன்ற ஸ்கேன்கள் செய்யும் போது, மிக குறைந்த அளவு (1டிகிரி செல்சியஸ்க்கும் குறைவான) வெப்பம் மட்டுமே அதிகரிக்கிறது.
உங்கள் குழந்தை அமோனோடிக் திரவத்தில் மிதப்பதால், இந்த அதிக அளவு வெப்பம் உங்கள் குழந்தையின் உடலில் எந்த ஒரு தீங்கையும் ஏற்படுத்தாமல், பாதுக்காக்கிறது.
அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் செய்யும் மருத்துவர்கள் நன்கு பயிற்சி பெற்றவர்களாக இருப்பார்கள். அவர்கள் இந்த ஸ்கேன் செய்யும் போது குறிப்பிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றுவார்கள். இந்த ஸ்கேனை முப்பது நிமிடங்களுக்கு மேலாக அவர்கள் செய்வதில்லை
உங்கள் மருத்துவர் குறிப்பிட்ட சில காரணங்களுக்காக அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் செய்ய பரிந்துரை செய்வார். அவை:
உங்களுக்கு இரட்டை குழந்தை அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகளாக இருக்கலாம்.
உங்கள் கர்ப்பத்தை சிக்கலாக்கும் மருத்துவ காரணங்கள் இருக்கலாம்.
நீங்கள் 35 வயதிற்கு மேற்பட்டவராக இருக்கலாம்.
முந்தைய ஸ்கேன் ரிப்போட்டுகளின் ஏதேனும் பிரச்சனைகள் இருந்திருக்கலாம்.
இதற்கு முன்னர் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட முறைகள் உங்களுக்கு கருச்சிதைவு ஏற்பட்டு இருக்கலாம்.
முந்தைய பிரசவம் உங்களுக்கு மிகவும் சிக்கலாக இருந்திருக்கலாம்.
இப்படி ஒரு அதிசயம் நடக்குமாம்.. இனிமேல் தலையணை வைக்காதீர்கள்
Monday, 22 May 2017
Posted by Author
Tag :
ஆரோக்கிய வாழ்வு
தலைக்கு தலையணை வைக்காமல் சிலரால் நிம்மதியாக உறங்கவே முடியாது. ஆனால் தலையணை வைத்து படுத்து உறங்குவதால், நமது உடலில் சில பிரச்சனைகள் ஏற்படுகிறது என்பது உங்களுக்கு தெரியுமா?
தலையணை இல்லாமல் உறங்குவதால் ஏற்படும் நன்மைகள்
தலையணை பயன்படுத்தாமல் படுத்து உறங்குவதால், தண்டுவடம் அதன் இயற்கை நிலையில் இலகுவாக இருக்கும். இதனால் தண்டுவட பிரச்சனை, உடல் வலி போன்றவை ஏற்படாது.
தலையணை இல்லாமல் உறங்குவதால், தோள்பட்டை மற்றும் கழுத்து வலி போன்ற பிரச்சனைகள் ஏற்படாமல் தடுத்து, வலியை குறைக்க முடியும்.
தலையணை இல்லாமல் படுத்து உறங்குவதால், உடலின் எலும்பு நிலைகளை சீராக்கி, முகத்தில் ஏற்படும் சுருக்கங்களை அதிகரிக்கச் செய்யாமல் தடுக்கலாம்.
சிலருக்கு தலையணை வைக்காமல், தூக்கம் வராது அப்படி உள்ளவர்கள் கீழ் உள்ள முறைகளை பின்பற்றுவது சிறந்தது.
மெல்லிய தலையணை
நேராக படுத்து உறங்கும் பழக்கம் உடையவர்களுக்கு மெல்லிய தலையணை சிறந்தது. இது கழுத்து, தலை, தோள்ப்பட்டை பிரச்சனைகளை ஏற்படுத்தாது.
அடர்த்தியான தலையணை
ஒருபக்கமாக படுத்து உறங்கும் நபர்களுக்கு அடர்த்தியான தலையணை சிறந்தது. இது தோள்பட்டை மற்றும் காதுக்கு இடையே சமநிலையை ஏற்படுத்தும்.
தட்டையான தலையணை
குப்புறப்படுத்து உறங்கும் நபர்களுக்கு, தட்டையான தலையணைகள் சிறந்தது. இது தலையின் நிலை அசௌகரியமாக உணராமல் இருக்க உதவுவதுடன், முதுகு, இடுப்பு போன்ற உறுப்புகளில் வலி ஏற்படாமல் தடுக்கும்.
20 நிமிடத்தில் இவ்வளவு மாற்றமா? கழுத்துக்கு பின் ஐஸ்கட்டி வையுங்கள்...
Posted by Author
Tag :
ஆரோக்கிய வாழ்வு
சீனா வைத்தியத்தில் பிரபலமான ஒருமுறை தான் அக்குபிரஷர். அதனை பின்பற்றுவதன் மூலம் நம் உடலினுள் ஏற்படும் ஏராளமான பிரச்சனைகளுக்கு தீர்வினைக் காணலாம்.
அந்த வகையில் நம் உடலில் கழுத்தின் பின்புற மையத்தில் ஒரு அழுத்தப் புள்ளி உள்ளது. இதற்கு ஃபெங் ஃபூ என்று பெயர். இந்த புள்ளியில் ஐஸ் கட்டியை 20 நிமிடம் வைத்தால், உடலினுள் ஏற்படும் மாற்றங்கள் இதோ!
கழுத்தில் ஐஸ்கட்டியை வைப்பதால் ஏற்படும் மாற்றங்கள் என்ன?
- கழுத்தின் பின்பகுதியில் உள்ள ஃபெங் ஃபூ எனும் புள்ளியில் ஐஸ் கட்டியை தினமும் 20 நிமிடங்கள் வைத்தால், இரவில் நல்ல ஆழ்ந்த தூக்கத்தைப் பெறலாம்.
- ஐஸ் கட்டியை கழுத்துப் பகுதியில் வைத்தால், செரிமான மண்டலத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, செரிமானப் பிரச்சனைகள் மற்றும் இரைப்பை கோளாறுகள் வராமல் தடுக்கிறது.
- கழுத்திற்கு பின் ஐஸ் கட்டியை 20 நிமிடம் வைத்து, இருந்தால், சளித் தொல்லையில் இருந்து உடனடியாக விடுபடலாம்.
- கழுத்திற்கு பின் தினமும் இரண்டு முறை ஐஸ் கட்டியை 20 நிமிடம் வைப்பதன் மூலம், மூச்சு கோளாறுகளை தடுத்து, இதயத்தின் செயல்பாட்டை மேம்படுத்தலாம்.
- ஃபெங் ஃபூ புள்ளியில் ஐஸ்கட்டி வைப்பதால், அது தலைவலி, பல் வலி மற்றும் மூட்டு வலி, ரம்புகள் மற்றும் முதுகுத்தண்டு பிரச்சனைகள் போன்றவற்றில் இருந்து உடனடி நிவாரணம் அளிக்கிறது.
- கழுத்திற்கு பின் ஐஸ்கட்டியை வைப்பதால், தைராய்டு, ரத்த அழுத்த, ஆஸ்துமா உடல் பருமன், ஊட்டச்சத்து குறைபாடு, மாதவிடாய் கோளாறுகள், ஆண்மையின்மை, மன அழுத்தம், தூக்கமின்மை போன்ற பிரச்சனைகளை குணப்படுத்துகிறது.