Posted by : Author Friday, 26 May 2017


அல்ட்ராசவுண்ட் ஸ்கேன்களின் நீண்ட கால விளைவுகள் பற்றி இன்னும் முழுமையாக தெரியவில்லை. ஆனால் பல காரணங்களுக்காக இது மருத்துவர்களுக்கு அவசியமானதாக இருக்கிறது.

அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் செய்வது வயிற்றில் வளரும் குழந்தையை பாதிக்குமா?

அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் இப்போதை விட பத்து ஆண்டுகளுக்கு முன்னர் அதிகமாக பயன்படுத்தப்பட்டு வந்தது. பிரசவம் எந்த வித சிக்கலும் இல்லாததாக இருந்தாலும், ஒரு தாய்க்கு ஐந்து ஸ்கேன்கள் வரை பரிந்துரைக்கப்படுகிறது. ஸ்கேன் எளிதில் பெறக்கூடியாதாகவும், விலை மலிவாகவும் உள்ளது.

மேலும் ஸ்கேன்கள் மருத்துவர்களுக்கு குழந்தையின் வளர்ச்சி, குழந்தையின் நிலை போன்ற அனைத்து விவரங்களையும் துல்லியமாக தருகிறது. இது குழந்தையை பற்றி மருத்துவர்கள் முழுமையாக அறிந்து கொண்டு அதற்கு ஏற்றாற் போல் சிகிச்சையளிக்க உதவியாக இருக்கிறது.

ஆனால் அல்ட்ராசவுண்ட் ஸ்கேன்களின் நீண்ட கால விளைவுகள் பற்றி இன்னும் முழுமையாக தெரியவில்லை. ஆனால் பல காரணங்களுக்காக இது மருத்துவர்களுக்கு அவசியமானதாக இருக்கிறது. அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் உங்கள் குழந்தையின் படத்தை பெற அதிக அதிர்வெண் ஒலி அலைகளை வெளிப்படுத்துகிறது. இந்த அலைகள் வெப்பத்தை உற்பத்தி செய்கின்றன.

அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் 4 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையை அதிகரிக்கிறது என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். உதாரணமாக 36 டிகிரி C வெப்பநிலை இருந்தால், இது 4 டிகிரி செல்சியஸ் அதிகரித்து 40டிகிரி செல்சியஸ் ஆக மாறுகிறது. இதனால் தீய விளைவுகள் ஏற்படலாம். ஆனால் சாதாரணமான 2டி, 3டி, 4டி போன்ற ஸ்கேன்கள் செய்யும் போது, மிக குறைந்த அளவு (1டிகிரி செல்சியஸ்க்கும் குறைவான) வெப்பம் மட்டுமே அதிகரிக்கிறது.

உங்கள் குழந்தை அமோனோடிக் திரவத்தில் மிதப்பதால், இந்த அதிக அளவு வெப்பம் உங்கள் குழந்தையின் உடலில் எந்த ஒரு தீங்கையும் ஏற்படுத்தாமல், பாதுக்காக்கிறது.

அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் செய்யும் மருத்துவர்கள் நன்கு பயிற்சி பெற்றவர்களாக இருப்பார்கள். அவர்கள் இந்த ஸ்கேன் செய்யும் போது குறிப்பிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றுவார்கள். இந்த ஸ்கேனை முப்பது நிமிடங்களுக்கு மேலாக அவர்கள் செய்வதில்லை

உங்கள் மருத்துவர் குறிப்பிட்ட சில காரணங்களுக்காக அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் செய்ய பரிந்துரை செய்வார். அவை:

உங்களுக்கு இரட்டை குழந்தை அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகளாக இருக்கலாம்.

உங்கள் கர்ப்பத்தை சிக்கலாக்கும் மருத்துவ காரணங்கள் இருக்கலாம்.

நீங்கள் 35 வயதிற்கு மேற்பட்டவராக இருக்கலாம்.

முந்தைய ஸ்கேன் ரிப்போட்டுகளின் ஏதேனும் பிரச்சனைகள் இருந்திருக்கலாம்.

இதற்கு முன்னர் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட முறைகள் உங்களுக்கு கருச்சிதைவு ஏற்பட்டு இருக்கலாம்.

முந்தைய பிரசவம் உங்களுக்கு மிகவும் சிக்கலாக இருந்திருக்கலாம்.

Leave a Reply

Subscribe to Posts | Subscribe to Comments

Welcome to My Blog

- Copyright © மருத்துவம் -New Mannar- Powered by New Mannar - Designed by New Mannar -