Posted by : Author
Monday, 22 May 2017
தலைக்கு தலையணை வைக்காமல் சிலரால் நிம்மதியாக உறங்கவே முடியாது. ஆனால் தலையணை வைத்து படுத்து உறங்குவதால், நமது உடலில் சில பிரச்சனைகள் ஏற்படுகிறது என்பது உங்களுக்கு தெரியுமா?
தலையணை இல்லாமல் உறங்குவதால் ஏற்படும் நன்மைகள்
தலையணை பயன்படுத்தாமல் படுத்து உறங்குவதால், தண்டுவடம் அதன் இயற்கை நிலையில் இலகுவாக இருக்கும். இதனால் தண்டுவட பிரச்சனை, உடல் வலி போன்றவை ஏற்படாது.
தலையணை இல்லாமல் உறங்குவதால், தோள்பட்டை மற்றும் கழுத்து வலி போன்ற பிரச்சனைகள் ஏற்படாமல் தடுத்து, வலியை குறைக்க முடியும்.
தலையணை இல்லாமல் படுத்து உறங்குவதால், உடலின் எலும்பு நிலைகளை சீராக்கி, முகத்தில் ஏற்படும் சுருக்கங்களை அதிகரிக்கச் செய்யாமல் தடுக்கலாம்.
சிலருக்கு தலையணை வைக்காமல், தூக்கம் வராது அப்படி உள்ளவர்கள் கீழ் உள்ள முறைகளை பின்பற்றுவது சிறந்தது.
மெல்லிய தலையணை
நேராக படுத்து உறங்கும் பழக்கம் உடையவர்களுக்கு மெல்லிய தலையணை சிறந்தது. இது கழுத்து, தலை, தோள்ப்பட்டை பிரச்சனைகளை ஏற்படுத்தாது.
அடர்த்தியான தலையணை
ஒருபக்கமாக படுத்து உறங்கும் நபர்களுக்கு அடர்த்தியான தலையணை சிறந்தது. இது தோள்பட்டை மற்றும் காதுக்கு இடையே சமநிலையை ஏற்படுத்தும்.
தட்டையான தலையணை
குப்புறப்படுத்து உறங்கும் நபர்களுக்கு, தட்டையான தலையணைகள் சிறந்தது. இது தலையின் நிலை அசௌகரியமாக உணராமல் இருக்க உதவுவதுடன், முதுகு, இடுப்பு போன்ற உறுப்புகளில் வலி ஏற்படாமல் தடுக்கும்.
Related Posts :
- Back to Home »
- ஆரோக்கிய வாழ்வு »
- இப்படி ஒரு அதிசயம் நடக்குமாம்.. இனிமேல் தலையணை வைக்காதீர்கள்

