Posted by : Author Saturday, 22 April 2017


கருத்தரித்தலை தடுப்பதற்காக பயன்படுத்தும் மாத்திரைகளால் பக்க விளைவுகள் ஏற்படும் என்பது அறிந்ததே.

எனினும் இதனால் ஏற்படும் பக்க விளைவுகள் தொடர்பாக புதிய ஆய்வு எச்சரிக்கைகள் வெளியாகிய வண்ணம் உள்ளன.

தற்போது இம் மாத்திரைகளை பயன்படுத்தும் பெண்களின் அழகு பாதிப்படைவதாக புதிய ஆய்வு ஒன்றின் முடிவில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

சுவீடனிலுள்ள Karolinska Institutet ஐ சேர்ந்த ஆராய்ச்சியாளர்களே இந்த ஆய்வினை மேற்கொண்டுள்ளனர்.

மேலும் இக் குழுவிற்கு தலைமை வகித்த Angelica Lindén Hirschberg என்பவர் குறிப்பிடுகையில் உலகெங்கிலும் சுமார் 100 மில்லியன் பெண்கள் கர்ப்பத்தடை மாத்திரைகளை பயன்படுத்துவதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

இவர்கள் தமது 18 வயது தொடக்கம் 35 வயதிற்கு இடைப்பட்ட 340 கர்ப்பத்தடை மாத்திரை பயன்படுத்தும் பெண்களை ஆய்விற்குட்படுத்தியுள்ளனர்.

குறித்த பெண்கள் பயன்படுத்திய கர்ப்பத்தடை மாத்திரையில் எத்தியின் எஸ்ட்ராடியோல் மற்றும் Levonorgestrel எனும் வேதிப்பொருட்கள் காணப்பட்டதுடன், மாத்திரைகளை தொடர்ச்சியாக மூன்று மாதங்களுக்கு பயன்படுத்தியுள்ளனர் என்பதுவும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Subscribe to Posts | Subscribe to Comments

Welcome to My Blog

- Copyright © மருத்துவம் -New Mannar- Powered by New Mannar - Designed by New Mannar -