Posted by : Author
Tuesday, 28 February 2017
மன அழுத்த பிரச்சனை ஏற்பட பலருக்கும் பல்வேறு காரணங்கள் இருக்கும். ஆனால் அதற்கான தீர்வு ஒன்று தான் என்று ஆய்வு கூறுகிறது.
இதுகுறித்து இங்கிலாந்தைச் சேர்ந்த எக்ஸீடர் பல்கலைக்கழகம் சார்பாக ஆய்வு நடத்தப்பட்டது.
அந்த ஆய்வில், பறவைகளுடன் அதிக நேரம் செலவழித்து, அது பறப்பதை பார்த்துக் கொண்டிருப்பவர்களுக்கு பதற்றம், மனச்சோர்வு, மன அழுத்தம் போன்ற பிரச்சனைகள் குறைவாக உள்ளது என்பது உறுதியாகி உள்ளது.
ஆனால் பறவைகள் மற்றும் மனிதர்களுக்கு இடையே ஏதேனும் தொடர்பு உள்ளதா? அதனால் ஏன் மன அழுத்தம் குறைகிறது? என்ற கேள்விகளுக்கான பதில் மட்டும் முழுக் காரணத்தோடு கண்டுபிடிக்கவில்லை.
எனினும், நகர வாசிகளை விட, இயற்கையோடு இயைந்து வாழ்பவர்களே நிம்மதியாக உள்ளார்கள் என்பதை உறுதியாக பேராசிரியர் டேனியல் காக்ஸ் என்பவர் கூறியுள்ளார்.
Related Posts :
- Back to Home »
- ஆரோக்கியத்தை »
- மன அழுத்த பிரச்சனைக்கு உறுதியான தீர்வு: ஆய்வின் தகவல்....

