Posted by : Author
Tuesday, 28 February 2017
அன்றாடம் நாம் சாப்பிடும் அரிசி உணவுகள் உடல் எடையை அதிகரிக்கிறது என்று அனைவராலும் நம்பப்பட்டு வருகிறது.
ஆனால் உண்மையில் அரிசி உணவை சாப்பிடுவதால், உடல் எடை குறையும் என்பது உங்களுக்கு தெரியுமா?
அரிசி உணவு உடல் எடையை குறைப்பதற்கான காரணம் என்ன?
அன்றாடம் நாம் சாப்பிட்ட உணவிற்கு தகுந்தாற்போல வேலை செய்யாமல், நாள் முழுவதும் உட்கார்ந்தபடியே இருப்பது தான் உடல் எடை அதிகரிப்பதற்கான முக்கிய காரணம்.
அரிசி உணவானது, நமது உடலுக்குத் தேவையான ரிபோஃபிளேவின், பி காம்ளெக்ஸ் மற்றும் இதர விட்டமின்கள் போன்ற ஆரோக்கியமான சத்துக்களை தரக் கூடியது.
தினமும் அரிசியை 200 முதல் 350 கிராம் அளவுக்கு எடுத்துக் கொள்ள வேண்டும். அரிசியில் நார்ச்சத்து என்பது மிகமிகக் குறைவு என்பதால் நார்ச்சத்துக்கள் மிகுந்த காய்கறிகள் மற்றும் கீரைகளை எடுத்துக் கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.
அரிசி உணவை தவிர்ப்பதால் ஏற்படும் பாதிப்புகள்
அரிசி உணவை தவிர்ப்பதால் அதில் உள்ள சத்துக்கள் நமது உடம்பிற்கு கிடைக்காமல் இருக்கும். இதனால் உதடு வெடிப்பு, நாக்குப் புண், நரம்புத் தளர்ச்சி வருவதுடன் உடல் சோர்வு அதிகமாக ஏற்படும்.
ஆய்வின் முடிவு
அதிக உடல்பருமன் கொண்டவர்கள் தொடர்ந்து வெள்ளை அரிசியை விட சிவப்பு அரிசி உணவை சாப்பிட்டு வந்தால், அவர்களின் உடல் எடை கணிசமாக குறையும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளார்கள்.
குறிப்பு
வீட்டில் அன்றாடத் தேவைக்கு புழுங்கல் அரிசி மிகவும் சிறந்தது. இதை தவிர சிகப்பு அரிசி, கைக்குத்தல் அரிசி, கேரளா அரிசி இது போன்ற அரிசி வகைகளும் மிகவும் சிறந்தவை.
Related Posts :
- Back to Home »
- ஆரோக்கிய வாழ்வு »
- அரிசி உணவு உடல் எடையை அதிகரிக்குமா? குறைக்குமா?

