Posted by : Author
Sunday, 26 February 2017
இதயம் மற்றும் மூளைக்கு தேவையான ரத்தம் மற்றும் சத்துக்களை எடுத்து செல்லும் ரத்த நாளங்கள் சுருங்கி விரியும் தன்மை உடையது.
இதயத்தை போன்றே சுருங்கி விரியும் ரத்தக் குழாய்களுக்கு நைட்ரிக் ஆக்சைடு என்ற ரசாயன பொருள் உதவுகிறது.
இந்த நைட்ரிக் ஆக்சைடு உற்பத்தி நமது உடம்பில் குறையும் போது, ரத்த குழாயின் சுருங்கி விரியும் தன்மையும் குறைகிறது.
இந்தக் காரணத்தினால் தான் ரத்தக் குழாயில் கொழுப்பு படிந்து, ரத்தக் குழாய் அடைப்பு, மாரடைப்பு, பக்கவாதம் போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது.
தேவையான பொருட்கள்
- எலுமிச்சை
- இஞ்சி
- பூண்டு
- ஆப்பிள் சீடர் வினிகர்
1 கப் எலுமிச்சைச் சாறு, 1 கப் இஞ்சி சாறு, 1 கப் பூண்டு சாறு மற்றும் 1 கப் ஆப்பிள் சீடர் வினிகர் ஆகிய அனைத்தையும் சம அளவு கலந்து, 60 நிமிடம் வரை இளஞ்சூட்டில் நன்றாக கொதிக்க வைக்க வேண்டும்.
பின் அந்த பானம் ஆறியதும் இயற்கையான தேன் கலந்து குடிக்க வேண்டும்.
குடிக்கும் முறை
இந்த இயற்கையான பானத்தை நாள் தோறும் காலை உணவுக்கு முன் 1 டீஸ்பூன் அளவு குடித்து வர வேண்டும்.
இதனால் ரத்தக் குழாய் அடைப்பு தடுக்கப்பட்டு, பைபாஸ் என்ற ரத்தக் குழாய் அடைப்பு அறுவை சிகிச்சையில் இருந்து விடுபடலாம்.

Related Posts :
- Back to Home »
- ஆரோக்கியத்தை »
- ரத்த குழாய் அடைப்பு நீங்க இதை கட்டாயம் செய்திடுங்கள்,,,

