Posted by : Author
Saturday, 21 January 2017
நமக்கு ஏற்படும் பலவிதமான நோய்களை குணப்படுத்தும் மிகச் சிறந்த நிவாரணி மஞ்சள்.
எனவே இந்த மஞ்சள் பொடியை ஒரு டம்ளர் தண்ணீரில், எலுமிச்சை, இஞ்சி மற்றும் தேன் ஆகியவற்றைக் கலந்து குடிப்பதால் கிடைக்கும் நன்மைகளை பற்றி பார்ப்போம்.
தண்ணீரில் மஞ்சள் கலந்து குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்
- மஞ்சளில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடென்டுக்கள் ஆர்த்ரைடிஸ், ஆஸ்டியோ ஆர்த்ரைடிஸ் போன்ற பிரச்சனைகள் மூலம் வரக் கூடிய வீக்கம் மற்றும் வலியை குறைக்கிறது.
- அல்சீமர் நோயினால் ஏற்படும் ஞாபக சக்தி குறைவு நோய் தீவிரமடைந்தால், அது நமது உறுப்புகளில் அதிகமான வீக்கத்தினை ஏற்படுத்தும். எனவே மஞ்சளானது அந்த அல்சீமர் நோய் மற்றும் அதனால் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்கிறது.
- நமது உடலில் உருவாகும் தேவையற்ற மூலக்கூறுகள் மற்றும் புற்றுநோயை ஏற்படுத்தும் செல்களை அழித்து, நம்மை புற்றுநோய் தாக்காமல் தடுக்கிறது.
- நமது வயிற்றில் ஏற்படும் வயிறு உப்புசம், நெஞ்செரிச்சல், வாய்வு, மலச்சிக்கல் போன்ற வயிறு தொடர்பான பிரச்சனைகளுக்கு, மஞ்சள் ஒரு சிறந்த தீர்வாக உள்ளது.
- மஞ்சள் கலந்த ஜூஸானது, கல்லீரலில் நல்ல கொலஸ்ட்ராலை அதிகப்படுத்தி, இதயத்தில் அதிகரிக்கும் கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கும் தன்மையைக் கொண்டுள்ளது.
- மஞ்சள் ஜூஸ், நமது ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்துவதால், சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு சிறந்த நிவாரணியாக உள்ளது.
- மஞ்சளில் உள்ள ஆன்டி ஆகிஸிடென்டுக்கள் காயம், முகப்பரு மற்றும் முகப்பருவினால் ஏற்படும் தழும்புகள் போன்ற பிரச்சனைகளை தடுக்கிறது.
- சருமத்தில் சேரும் அழுக்குகளை அகற்றி, தொற்றுக்கள் ஏற்படாமல் பொலிவாக வைத்துக் கொள்வதற்கு, இந்த மஞ்சள் ஜூஸினை முகத்தில் பேக்காக கூட போட்டு வரலாம்.
Related Posts :
- Back to Home »
- ஆரோக்கியத்தை சொல்லும் »
- இதை குடிப்பதால் என்ன நடக்கும்? கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க!

