Posted by : Author
Saturday, 21 January 2017
Salmonella என்பது ஒரு வகை பக்டீரியா இனமாகும்.
இவ் பக்டீரியாக்கள் பொதுவாக மனிதர்களில் காய்ச்சல்கள் ஏற்படுவதற்கு காரணமாக இருப்பதாகவும், உணவுகள் நஞ்சூட்டப்படுவதற்கு காரணமாக இருப்பதாகவும் கூறப்படுகின்றது.
எனினும் முதன் முறையாக இதனை மருத்துவத்தில் பயன்படுத்த முடியும் என கண்டறியப்பட்டுள்ளது.
அதாவது மூளைக் கட்டிகளை குணப்படுத்தும் ஆற்றல் இதற்கு இருப்பதாக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
கட்டிகளை தமது உணவாக உட்கொள்வதற்கு மூலம் அவற்றினை அழிக்கக்கூடியன என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தவிர புற்றுநோய் கட்டிகளையும் இப் பக்டீரியாக்களை பயன்படுத்தி அழிக்க முடியும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் அமைந்துள்ள Duke பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்விலேயே இந்த உண்மை வெளியாகியுள்ளது.
குறித்த ஆய்வின்போது எலிகள் பயன்படுத்தப்பட்டுள்ளதுடன் அவ் ஆய்வு வெற்றியையும் கொடுத்துள்ளது.
Related Posts :
- Back to Home »
- ஆரோக்கியத்தை சொல்லும் »
- மூளையில் ஏற்படும் கட்டிகளை அழிக்கும் பக்டீரியா...

