Posted by : Author
Wednesday, 30 November 2016
நம் வீட்டில் இருக்கும் பெரியவர்கள் மற்றும் உடல் நிலை சரியில்லாமல் இருக்கும் குழந்தைகள் உள்ளிட்டோர் உரிய நேரத்தில் மருந்து சாப்பிட்டார்களா? என்பதை வேலைக்குப் போகும் மகனோ, மகளோ அல்லது அப்பாவே, தாயோ எப்படித் தெரிந்து கொள்வது.
பெரியவர்களுக்கு வயது ஆக ஆக மறதியும் கூடவே வந்துவிடும். இதனால் அவர்கள் மாத்திரை சாப்பிட்டோமா? இல்லையா? என்ற சந்தேகம் அவர்களுக்கு வரும்.
இப்படிப்பட்ட பிரச்சனையை தீர்க்கத் தான் வந்துள்ளது ஸ்மார்ட் பில். இந்த ஸ்மார்ட் பில் மிகவும் சிறிய ஒரு கம்ப்யூட்டர் சிப் போன்று உள்ளது.
இதை மாத்திரை சாப்பிடுவதற்கு முன்பாக வெற்று மாத்திரைகளுடன் விழுங்கிவிட வேண்டும் என கூறப்படுகிறது.
விழுங்கியவுடன் அது குடலுக்குள் சென்று ஒட்டிக் கொள்ளும். அதன் பிறகு தாம் வழக்கமாகச் சாப்பிடும் மருந்து, மாத்திரைகளைச் சாப்பிட வேண்டும்.
இந்த ஸ்மார்ட் பில்லில் உள்ள செயலி மூலமாக குறிப்பிட்ட ஸ்மார்ட் போனுக்கோ அல்லது மடிக்கணினிக்கோ மருந்து, மாத்திரை சாப்பிட்ட தகவல் சென்று விடும்.
இந்த மாதிரியான ஸ்மார்ட் பில்களை PROTEUS DIGITAL HEALTH என்ற நிறுவனம் தயாரிக்கிறது.
மேலும் இந்த ஸ்மார்ட் பில்களைப் போல உடலில் தோலுக்கடியில் பொருத்தும் நானோ சென்சார்களும் பயன்படுகின்றன. இவை மாரடைப்பு ஏற்படப் போவதை முன் கூட்டியே தெரிவிக்கும் திறனுடையவை.
Related Posts :
- Back to Home »
- ஆரோக்கிய வாழ்வு »
- ஸ்மார்ட் பில் மிகவும் சிறிய ஒரு கம்ப்யூட்டர் சிப்

