Posted by : Author
Wednesday, 30 November 2016
பொதுவாக நகர்புறத்தில் இருப்பவர்களை விட கிராமபுறத்தில் இருக்கும் இளைஞர்களுக்கு அதிகமான முதுகு வலி பிரச்சனைகள் ஏற்படாது, இதற்கு சில காரணங்களும் இருக்கின்றது.
முதுகுவலி ஏற்படுவதற்கு காரணமாக இருப்பது முதுகெலும்பின் வடிவம் S-ஆ J-வா
கலிபோர்னியாவை சேர்ந்த எஸ்தர் கோகலே என்ற அக்குபஞ்சர் நிபுணர், கிராமப்புற மக்களிடம் இல்லாத ஒரு பிரச்சனை, நகர்ப்புறங்களில் வசிக்கும் மக்களிடம் மட்டும் ஏன் இருக்கிறது என்பது குறித்து ஒரு ஆய்வு நடத்தினார்.
இந்த ஆய்வின் முடிவில், கிராமப்புற மக்கள் வேலை செய்யும் போது, நடந்து, உட்கார்ந்து, நின்று என்று பலநிலைகளில், மாறி வேலை செய்கிறார்கள்.
இந்த நிலையானது நகர்புறத்தில் வசிக்கும் மக்களிடம் இல்லாததால், அவர்களுக்கு முதுகு வலி அதிகரிக்க காரணமாக இருக்கிறது என்பதை கண்டுபிடித்தார்.
மேலும் பொதுவாக அனைவரிடத்திலும் S வடிவில் இருக்கும் முதுகெலும்பானது, கிராமப்புற மக்களிடம் மட்டும் J வடிவில் காணப்பட்டது.
ஏனெனில் இதற்கு முக்கிய காரணம் கிராமப் புறத்தில் வசிகும் மக்கள் தினமும் குனிந்து, நிமிர்ந்து கடுமையாக வேலை செய்வதால், அவர்களின் முதுகெலும்பானது J வடிவில் இருக்கிறது.
எனவே முதுகெலும்பு J வடிவில் இருப்பவர்களுக்கு முதுகு வலி போன்ற பிரச்சனைகள் அதிகமாக ஏற்படுவதில்லை என்று எஸ்தர் கோகலே