Posted by : Author
Saturday, 29 October 2016
Vue Smart Glasses என்னும் மனிதன் கண்களில் அணியும் வித்தியாசமான மூக்கு கண்ணாடி தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
மூக்கு கண்ணாடியில் என்ன வித்தியாசம் என கேட்கிறீர்களா? இதில் அடங்கியுள்ள தொழில்நுட்ப புரட்சியை பற்றி அறிந்தால் நீங்கள் அசந்து போய் விடுவீர்கள்.
இந்த கண்ணாடியை அணிந்து கொண்டு அதிலேயே நாம் பாடல்கள் கேட்க முடியும். ஆம் இது ஒயர்லஸ் ஸ்பீக்கரால் ஆனதாகும். மேலும் இதை அணிந்து கொண்டே நாம் மற்றவர்களுக்கு கால் செய்ய கூட முடியும்.
அதே போல நாம் வாக்கிங், ஜாக்கிங் உடற்பயிற்சியை இந்த கண்ணாடியை அணிந்து கொண்டு செய்தால், நாம் எவ்வளவு தூரம் ஓடியிருக்கிறோம் மற்றும் உடலிலிருந்து எவ்வளவு கலோரி பர்ன் ஆகியிருக்கிறது என அந்த கண்ணாடியே நமக்கு சொல்லி விடும்.
அதில் ப்ளு தூத் வசதி உள்ளதால் நம் செல்போனை எடுக்காமலே ஹேண்ட் ப்ரி கால் மூலம் மற்றவர்களிடம் பேச முடியும்.
இன்னும் இந்த கண்ணாடியில் பலவிதமான வசதிகள் உள்ளது. தொழில்நுட்பத்தில் உச்சமாக திகழும் இந்த கண்ணாடியானது நாம் விரும்பும் நிறத்தில், வடிவங்களில் கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Related Posts :
- Back to Home »
- ஆரோக்கியத்தை சொல்லும்.... »
- ஸ்டைலிஷான இளசுகளுக்கு சூப்பரான வரப்பிரசாதம்!

