Posted by : Author
Tuesday, 20 September 2016
45 வயதுக்கு முன்னர் மாதவிடாய் நிறுத்தம் ஏற்படும் பெண்களுக்கு இதய நோய்கள் ஏற்படும் வாய்ப்பு அதிகம் என சொல்லப்படுகிறது.
அது மட்டுமல்லாது இப்பெண்கள் தம் இளம் வயதிலேயே மரணத்தை தழுவுவதாகவும் தற்போது மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் மூலம் தெரியவருகிறது.
சாதரணமாக மாதவிடாய் நிறுத்தமானது சூலகங்களிலிருந்து சுரக்கப்படும் ஈஸ்திரயன் போன்ற சுரப்புக்கள் தடைப்படுவதாலேயே ஏற்படுகிறது.
ஆனாலும் செயற்கையாக அறுவைச் சிகிச்சைகள் மூலமும், வேறு மருத்துவ நிலைமைகளாலும் மாதவிடாய் நிறுத்தம் கொண்டு வரப்படலாம்.
மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் 310,000 பெண்கள் 33 வகையான ஆய்வுகளுக்கு உட்படுத்தப்பட்டிருந்தனர்.
அதில் 45 வயதுக்கு முன்னர் மாதவிடாய் நிறுத்தம் உண்டாகும் பெண்களில் 50 வீதமானோர் காலப்போக்கில் பாரிய இதய நோய்களுக்கு ஆளாவதும், 20 வீதமானோர் மரணத்தை சந்திப்பதும் வெளிக்கொணரப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ஆய்வாளர் Muka கூறுகையில், முற்கூட்டி மாதவிடாய் நிறுத்தம் ஏற்படும் பெண்கள் கொலஸ்திரோல், குருதி வெல்லம், குருதியமுக்கம் போன்றவற்றில் அவதானமாக இருப்பது நல்லது என்கிறார்.
Related Posts :
- Back to Home »
- ஆரோக்கியத்தை »
- பெண்களே உஷார்! இதய நோய்களை தோற்றுவிக்கும் மாதவிடாய் நிறுத்தம்....

