Posted by : Author
Tuesday, 20 September 2016
பொதுவாக நாம் வெளியில் செல்லும் போது நன்றாக குளித்துவிட்டு சென்றாலும், சற்று நேரத்திலே உடல் முழுவதும் வியர்த்து விடும்.
மேலும் சோர்வாகி போவதுடன் அன்றைய பணிகளையும் உற்சாகமாக செய்ய முடியாமல் போகலாம்.
இந்த நிலையை போக்கி, உங்கள் உடம்பு புத்துணர்ச்சி பெற்று வாசனையில் நீங்கள் கமகமக்க இதோ சூப்பரான டிப்ஸ்!
ரோஜா குளியல்
ரோஜா குளியல் என்பது அழகிய ரோஜாவின் இதழ்களை உதிர்த்து ஒரு டப்பில் போட்டு, அதில் வெதுவெதுப்பான தண்ணீரை நிறைத்து சிறிது நேரம் அப்படியே வைக்க வேண்டும்.
பின் ரோஜாவின் இனிய மணம் நாசியில் கமழ நமக்குப் பிடித்த சோப்பை நன்றாக தேய்த்து குளிக்க வேண்டும்.
சந்தனக் குளியல்
சிறிய சந்தன ஸ்டிக்குகள் அல்லது சந்தன தைலத்தை நாம் குளிக்கும் தண்ணீரில் கலந்து சிறிது நேரம் கழித்து அந்த தண்ணீரில் குளிக்க வேண்டும்.
மேலும் சந்தனத்தைக் கொண்டு தயாரிக்கும் மைசூர் சாண்டல் சோப்பை விட சந்தனத்தின் மணம் உங்கள் உடம்பில் நாள் முழுதும் இருக்கும்.
இதனால் உங்கள் உடம்பு வாசனையாகவும், புத்துணர்ச்சியாகவும் இருக்கும்.
லெமன் குளியல்
லெமன் வாங்கி அதனுடைய சாற்றைப் பிழிந்து விட்டு, வெறும் தோலை மட்டும் நிழலில் உலர்த்தி எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
உலர்த்திய லெமன் தோலை குளிப்பதற்கு முன், தண்ணீரில் போட்டு சிறிது நேரம் கழித்து, தண்ணீரில் உள்ள லெமன் தோலை நீக்கி விட்டு குளிக்க வேண்டும்.
இதனால் உங்கள் உடம்பின் துர்நாற்றம் அகன்று, சருமத்தின் நிறம் பள்ளிச்சென்று இருக்கும்.
ஆரஞ்சுக் குளியல்
நாம் தினமும் ஆரஞ்சுப் பழத்தை சாப்பிட்டதும் அதனுடைய தோலை வீணாக்காமல், அந்த தோலை நிழலில் காய வைத்து ஒரு பிளாஸ்டிக் ஜாரில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
நாம் குளிப்பதற்கு முன்பு தண்ணீரில் ஆரஞ்சுத் தோலை போட்டுக் வைத்து சிறிது நேரத்திற்கு பின் அந்த தண்ணீரில் குளித்து வந்தால், உங்கள் தோல் பளபளப்பாகி, உடம்பில் உள்ள துர்நாற்றமும் அகலும்.
வேம்புக் குளியல்
வேப்பிலை மரம் அனைத்து இடங்களிலும் பரவலாக இருக்கும். எனவே வேம்பு மரத்தில் உள்ள தளிர் வேப்பிலை கொஞ்சம் பறித்து வைத்துக் கொள்ள வேண்டும்.
பின் வாரம் மூன்று நாட்கள் சோப்புக் குளியல் முடிந்ததும், தளிர் வேப்பிலைத் தண்ணீரில் ஒரு முறை போட்டு குளிக்க வேண்டும்.
கடும் கோடை காலங்களில் வேம்புக் குளியலை பெரியவர்கள் முதல் சிறுவர்கள் வரை குளித்து வந்தால், உடலைக் குளிர்விப்பதோடு சரும வியாதிகளையும் தடுத்து உடம்பில் உள்ள துர்நாற்றத்தையும் போக்கும்.
பீர்க்கைநார் குளியல்
நாம் குளிக்கும் போது உடம்பில் உள்ள அழுக்கை நீக்குவதற்கு, சந்தையில் கிடைக்கும் பீர்க்கை காயின் நாரை தாண்ணீரில் நனைத்து கொண்டு நம் உடல் மீது தேய்த்துக் குளித்து வந்தால், சருமத்திற்கு தேவையற்ற பின் விளைவுகள் ஏற்படாமல் பாதுகாக்கும்.
குறிப்பு-நாம் முதலில் சோப் போட்டுக் குளித்து விட்டு கடைசியாக, மேல் கொடுக்கப்பட்டுள்ள குளியல் முறைகளில் நமக்கு பிடித்த ஏதாவது ஒரு முறையை பின்பற்ற வேண்டும்.

Related Posts :
- Back to Home »
- அழகு குறிப்புகள் »
- உடல் புத்துணர்ச்சிக்கு சிறப்பான குளியல் முறைகள்....

