Posted by : Author
Tuesday, 6 September 2016
காய்கறிகள் என்றாலே நமக்கு ஆரோக்கியம் தான் நினைவுக்கு வரும். ஏனென்றால் அவ்வளவு மருத்துவ குணங்கள் நிறைந்தது. இதிலும் ஒவ்வொரு காய்களும் ஒவ்வொரு உறுப்புகளுக்கு மருத்துவ குணங்களை கொண்டுள்ளது.
காய்கறிகளில் பச்சையாக சாப்பிடக் கூடியது என்றும், சில காய்கறிகளை வேக வைத்து சாப்பிட்டால் தான் அதனுடைய இரட்டிப்பு சத்துகள் கிடைக்கும் என்பதால், வேகவைத்து சாப்பிடும் காய்கறிகள் என்றும் இரு வகைகளாக காய்கறிகளைப் பிரிக்கலாம்.
விட்டமின் C நிறைந்த வெள்ளரிக்காய், நெல்லிக்காய் இது போன்ற காய்களை பச்சையாகவே சாப்பிடலாம். புரோட்டின், கார்போஹைட்ரேட் போன்ற சத்துகளை கொண்ட காய்கறிகளை வேகவைத்து சாப்பிட்டால் தான் அதனுடைய இரட்டிப்பு சத்துகள் நமக்கு கிடைக்கும். எனவே வேகவைத்து சாப்பிடும் ஒருசில காய்கறிகளைப் பற்றி இப்போது நாம் பார்ப்போம்!
இந்த காய்களை வேகவைத்து சாப்பிட்டால் சத்துகள் கிடைக்கும்! உங்களுக்கு தெரியுமா?
பீட்ரூட்
பீட்ரூட்டில் ஆன்டி ஆக்ஸிடென்டுகள் மற்றும் நுண்சத்துக்கள் இருப்பதால் இதனை வேகவைத்தால் தான் அதில் இருக்கும் சத்துக்கள் உயிர் பெற்று அதனுடைய இரட்டிப்பு சத்துகள் நமக்கு கிடைக்கின்றன. எனவே 3 நிமிடங்கள் மட்டும் வேகவைத்தால் போதுமானது.
உருளைக் கிழங்கு
உருளைக் கிழங்கை எண்ணெயில் வறுத்து சாப்பிட்டால் அவை கொழுப்பாக மாறி அஜீரணத்தையும், உடல் பருமனையும் உண்டாக்கும். இதில் ஸ்டார்ச் அதிகம் இருப்பதால், இதனை வேகவைத்து குழந்தைகளுக்கு கொடுத்தால், நல்ல சத்துகள் குழந்தைகளுக்கு கிடைக்கும்.
முட்டை
முட்டையில் அதிக புரோட்டின், விட்டமின்கள், மினரல்கல் உள்ளன. எனவே அதனை பச்சையாக குடிக்கும்போது அதன் முழு சத்துக்களும் நமக்கு கிடைப்பதில்லை. மேலும் இதனை ஆம்லெட் சாப்பிடும்போது அவை கலோரியாக அதிகரித்து, உடல் பருமனை உண்டாக்குகின்றன. இதனால், முட்டையை வேக வைத்து சாப்பிட்டால், அதன் சத்துக்கள் இரட்டிப்பாகி அனைத்து சத்துக்களும் நமக்கு கிடைக்கின்றன.
பீன்ஸ்
பீன்ஸில் நார்சத்து மற்றும் புரோட்டின்கள் இருப்பதால், இதை வேகவைக்கும் போது மட்டும் தான் அதனுடைய முழுமையான சத்துக்கள் நமக்கு கிடைக்கின்றது. மேலும் இதனை 6 நிமிடங்கள் வேக வைத்தால் போதுமானது.&rc;&nc;குறிப்பாக சர்க்கரை வியாதி உள்ளவர்கள் வேக வைத்த பீன்ஸ் சாப்பிட்டால் மிகவும் நல்லது.
பசலைக் கீரை
கீரைகள் என்றாலே பொதுவாக வேகவைத்து சாப்பிட்டால் தான் அதனுடைய சத்துகள் கிடைக்கும். ஆனால் பசலைக் கீரைகளை வேகவைக்கும் போது அதிலுள்ள பீட்டா கரோட்டின் விட்டமின் Aவாக மாறி அதிக சத்துகள் நமக்கு கிடைக்கின்றன.
காலிஃப்ளவர் காலி ஃப்ளவரில் அதிக சத்துக்கள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடென்ட் உள்ளதால், இதனை ஆவியில் அவித்து சாப்பிட்டால் முழு சத்துக்களையும் நாம் பெறமுடியும். மேலும் இதனை எண்ணெயில் பொரித்து மற்றும் பச்சையாக சாப்பிடும் போது முழுமையான சத்துக்களை நாம் பெற முடிவதில்லை.
Related Posts :
- Back to Home »
- ஆரோக்கிய வாழ்வு »
- இந்த காய்களை வேகவைத்து சாப்பிட்டால் சத்துகள் கிடைக்கும்! உங்களுக்கு தெரியுமா?

