Posted by : Author
Thursday, 18 August 2016
உலகில் பெரும்பாலான நபர்களுக்கு தொப்பை பெரும் பிரச்னையாக உள்ளது, இதனால் மன அழுத்தத்திற்கு ஆளாகுகின்றனர்.
இதற்கு காரணமாக இருப்பது அவர்கள் உண்ணும் உணவுகள் செரிமானம் ஆகாமல் இருப்பதே, அந்த உணவில் உள்ள கொழுப்புகள் வயிற்றிலேயே தங்கி தொப்பையை உண்டாக்குகிறது.
எனவே தொப்பை மற்றும் அதிகமான உடல் எடையை குறைப்பதற்கு காலை உணவாக இதனை உட்கொள்ளலாம்,
தொப்பையை குறைக்கும் சூப்பர் உணவுகள்
ஓட்ஸ்

ஓட்ஸ் சுவையாகவும், குறைவாக சாப்பிட்டாலே அதிக பசியை நிரப்பும் தன்மையும் கொண்டது. மேலும் இதில் அதிக அளவு நார்ச்சத்து உள்ளதால், உடம்பில் அதிகப்படியாக உள்ள கொலஸ்ட்ரால் மற்றும் கலோரிகளை குறைத்து உடல் பருமன் இல்லாமல் சீராக வைக்கிறது.
முட்டை

முட்டையின் வெள்ளை கருவில் பல அத்தியாவசிய சத்துகளுடன் புரோட்டீன் மற்றும் கலோரிகள் உள்ளன. எனவே உடல் பருமனாக உள்ளவர்கள் முட்டையின் வெள்ளை கருவை மட்டும் சாப்பிட்டு வந்தால், தேவையற்ற கொலஸ்ட்ராலை குறைக்கும்.
தயிர்

தயிரில் புரோட்டீன் மற்றும் புரோபயாடிக் சத்துக்கள் உள்ளதால், ரத்தத்தின் சர்க்கரையின் அளவை குறைத்து தொப்பையை குறைக்க பெரிதும் உதவியாக உள்ளது.
ஆப்பிள்

ஆப்பிளில் ஆன்டி- ஆக்ஸிடன்டுகள் மற்றும் கனிமச்சத்துகளுடன், பெக்டின் என்ற பொருளும் உள்ளதால், உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை நீக்கி தொப்பையை குறைக்க உதவுகிறது.
வாழைப்பழம்

வாழைப்பழத்தில் பொட்டாசியம் மற்றும் நார்ச்சத்துகள் நிறைந்துள்ளது. எனவே ஒரு வாழைப்பழம் மற்றும் ஓட்ஸ் சேர்த்து சாப்பிட்டால் தேவையற்ற கொழுப்புகளை நீக்கி தொப்பையை குறைக்கும்.
பாதாம்

பாதாமில் புரதம் மற்றும் கொழுப்பு இருப்பதால் உடலின் வயிற்று பகுதியில் டெபாசிட் ஆகும் கொழுப்பை குறைத்து, தொப்பையை குறைக்க உதவுகிறது.
Related Posts :
- Back to Home »
- ஆரோக்கியத்தை »
- தொப்பையை குறைக்கணுமா? இதெல்லாம் மறக்காமல் சாப்பிடுங்க

