Posted by : Author Tuesday, 16 August 2016


ஒரு Facebook லைக் உங்களை மேலும் உற்சாகப்படுத்தலாம். ஒரு Twitter காமண்ட் உங்களை கோபமூட்டுவதாக அமையலாம். ஒரு Instagram புகைப்படம் உங்களை பசுமையாக்கலாம். Whatsapp இல் மேற்கொள்ளும் அரட்டைகள் உங்களை ஆபாசமாக மாற்றலாம்.

இவ்வகை இலத்திரனியல் அமுத்தங்களிலிருந்து நாமாக விடுதலை பெறுவது எவ்வாறு?

நீங்கள் உங்கள் smartphone இனை கைவிடுவதை எண்ணி கவலைப்படுபவர்களா? நீங்கள் உங்கள் வீட்டில் நடப்பதை விட, ஒன்லைனில் நடக்கும் விடயங்கள் மீது அதிகம் ஆவல் கொள்பவர்களா? நீங்கள் இறுதியாக மேற்கொண்ட முகத்திற்கு முகமான அரட்டையினை நினைவுபடுத்த போராடுபவரா?

இதில் ஏதாவது ஒரு கேள்விக்கு ஆம் என பதிலளித்தால் நீங்கள் இலத்திரனியல் அடிமைகள்.

தொழில்நுட்பமானது உங்கள் வாழ்க்கையை இலகுவாக்குவதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட ஒன்று. பதிலாக நாம் அதன் பாவனையால் நாமகவே அழுத்தங்களுக்கு உள்ளாகின்றோம்.

இது தொடர்பாக Sociology பேராசிரியர் Kanika Khandelwal Ahuja கூறுகையில், இந் நாட்களில் குழந்தைகள் அதிகம் phone உடன் காணப்படுகின்றனர். மக்களை அவர்களது smartphones இலிருந்து பிரிப்பது கடினமாகின்றது.

இது இறுதியாக அவர்களது நாளாந்த வாழ்க்கை, நடத்தைகளில் மாற்றங்களைக் கொண்டு வருகிறது.

இவ்வாறான இலத்திரனியல் சாதனங்கள் மூளையில் இரசாயன மாற்றங்களை கொண்டுவருவதாகவும் தெருவிக்கப்படுகின்றது.

நாமாகவே ஒவ்வொரு நாளும் இவ்வகை சாதனங்களிலிருந்து சிறிது நேரம் விலகியிருப்பதன் மூலம் இது போன்ற அழுத்தங்களிலிருந்து விடுபட முடியும் என சொல்லப்படுகிறது.

Leave a Reply

Subscribe to Posts | Subscribe to Comments

Welcome to My Blog

- Copyright © மருத்துவம் -New Mannar- Powered by New Mannar - Designed by New Mannar -