Posted by : Author
Monday, 29 August 2016
குழந்தைகள் சிறு வயதில் தன் பெற்றோர்கள் இருந்து என்ன பழக்கத்தை சொல்லிக் கொடுக்கிறார்களோ அதைத் தான் பின்பற்றுவார்கள். எனவே சிறு வயதில் இருந்தே குழந்தைகளுக்கு நல்ல பழக்கத்தை சொல்லிக் கொடுத்தால், குழந்தைகள் வளரும் போது கெட்ட பழக்கத்தில் ஈடுபடுவதைத் தடுக்கலாம்.
குழந்தைகள் தாங்களே அறியாமல் செய்யும் ஒன்று தான் படுக்கையில் 'சுச்சு' போவது. இப்படி இவர்கள் சிறு குழந்தையாக இருக்கும் போது படுக்கையிலேயே சிறுநீர் கழித்தால் பரவாயில்லை. ஆனால் சில குழந்தைகள் பள்ளி செல்லும் வயதிலும் படுக்கையில் சிறுநீர் கழிக்கின்றனர்.
இப்போது குழந்தைகள் இரவில் படுக்கும் போது படுக்கையில் சிறுநீர் கழிக்காமல் இருப்பதற்கு ஒருசில டிப்ஸ்களை பார்க்கலாம்.
பெரும்பாலான பெற்றோர்கள் செய்யும் ஒரு பெரிய தவறு தான் இரவில் படுக்கும் முன் குழந்தைகளை தண்ணீர் குடிக்க சொல்வது. இரவில் அப்படி தண்ணீர் குடித்துவிட்டு படுத்தால், குழந்தைகளே சிறுநீரை அடக்க நினைத்தாலும், அவர்களால் முடியாமல் போகும். எனவே இரவில் படுக்கும் முன் குழந்தைகளுக்கு நீர்ம நிலையில் உள்ள பொருட்களை அருந்த கொடுக்க வேண்டாம்.
குழந்தைகள் இரவில் படுக்கையில் சிறுநீர் கழிக்காமல் இருக்க வேண்டுமானால், அவர்கள் ஒவ்வொரு முறை சிறுநீர் கழிக்கும் போதும், அவர்களை எழுப்பி, உடைகளை மாற்றச் சொல்லி, படுக்கை விரிப்பை மாற்றிவிட்டு, பின் தூங்க சொல்லுங்கள். இதனால் அவர்கள் ஒவ்வொரு முறை செய்யும் போதும் எழுப்பி விட்டுக் கொண்டே இருந்தால், அவர்கள் பொறுமை இழந்து, அவர்களாகவே சிறுநீர் கழிப்பதை நிறுத்திவிடுவார்கள்.
பொதுவாக குழந்தைகளுக்கு பரிசுகள் என்றால் கொள்ளை இஷ்டம். எனவே அவர்களிடம் பந்தயம் போன்று வையுங்கள். அதாவது இரவில் படுக்கையில் சிறுநீர் கழிக்காமல் இருந்தால், மறுநாள் உனக்கு சாக்லெட் அல்லது பொம்மை வாங்கி தருவேன் என்று சொல்லுங்கள். இதனால் அவர்கள் சிறுநீர் கழிப்பதை நிறுத்த முயற்சிப்பார்கள். இப்படி முயற்சித்தாலே, அவர்கள் விரைவில் படுக்கையில் சிறுநீர் கழிப்பதை நிறுத்திவிடுவார்கள்.
உங்கள் குழந்தைகளுக்கு பல வழிகளை முயற்சித்தும் 3-6 மாதங்களாக எந்த ஒரு மாற்றமும் தெரியாவிட்டால், மருத்துவரை சந்திப்பது சிறந்தது. ஏனெனில் ஒருவேளை உங்கள் குழந்தைக்கு மலச்சிக்கல் ஏற்பட்டிருக்கலாம் மற்றும் அத்துடன் வேறு சில நோய்களான நீரிழிவு அல்லது சிறுநீரக பாதை தொற்று கூட ஏற்பட்டிருக்கலாம். எனவே மருத்துவரை கலந்தாலோசிப்பது நல்லது.
Related Posts :
- Back to Home »
- ஆரோக்கியத்தை சொல்லும்.... »
- குழந்தைகள் படுக்கையில் சிறுநீர் கழிக்காமல் இருப்பதற்கு ஒருசில டிப்ஸ்களை பார்க்கலாம்.

