Posted by : Author Monday, 29 August 2016


கருப்பாக இருக்கும் ஒவ்வொரு பெண்ணுக்குமே வெள்ளையாக வேண்டும் என்ற ஆசை இருக்கும், இதற்காக பல்வேறு ரசாயன பொருட்களை உபயோகிப்பார்கள், இது உடனடியாக பலன் தந்தாலும் பிற்காலத்தில் ஆபத்துகள் தான் அதிகம்.

எனவே வீட்டில் இருந்தபடியே வெள்ளை நிறத்தை பெற உங்களுக்கான எளிய பேஸ் பேக் டிப்ஸ் இதோ,

பால்பவுடர் மற்றும் எலுமிச்சை

பால்பவுடர் மற்றும் எலுமிச்சை சாறுடன் சிறிது தேன் கலந்து, பேஸ் பேக் போல தயாரித்து முகத்தில் தடவி 10 நிமிடத்திற்கு முன் கழுவினால் உங்களின் முகம் பொலிவாக இருக்கும்.

ஓட்ஸ் மற்றும் தயிர்

இரவில் ஓட்ஸை நீரில் ஊற வைத்து, காலையில் புளிப்பு தயிருடன் கலந்து பேஸ்ட் போல செய்து முகத்தில் தடவி காய்ந்த பின் கழுவி வந்தால், உங்களின் தோல் மிருதுவாகி நல்ல கலரை கொடுக்கும்.

மஞ்சள் மற்றும் தக்காளி

தக்காளி அல்லது எலுமிச்சை சாற்றினை மஞ்சளுடன் கலந்து, பேஸ்பேக் போல தயாரித்து முகத்திற்கு தினமும் பூசி வர வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் கருமையான தோலின் நிறத்தை வெண்மை ஆக்கலாம்.

பாதாம் எண்ணெய்


பாதாம் எண்ணெய் கொண்டு தினமும் நன்கு சூடு பறக்க முகத்தில் மசாஜ் செய்து வந்தால், உடம்பின் ரத்த ஓட்டம் அதிகரித்து, தோலின் சருமம் பளபளப்பாகவும், பொலிவுடனும் காணப்படும்.

வாழைப்பழம்

வாழைப்பழத்தில் ஏராளமான நன்மைகள் இருப்பதால், இதனை தேன் அல்லது புளிப்பு தயிர் ஒரு தேக்கரண்டி எடுத்துக் கொண்டு, இவை அனைத்தையும் பேஸ்ட் போல செய்து முகத்தில் பூசி வந்தால், முகப் பொலிவினை அதிகரிக்கச் செய்கிறது.

சந்தனம்

சந்தனம் அல்லது சந்தன மரத்தூளை கொண்டு பேஸ்ட் போல தயாரித்து, தினமும் முகத்தில் பூசி வர இயற்கையான வெள்ளை நிறத்தினை பெறலாம். மேலும் இது உங்களுக்கு முகப் பொலிவையும் கொடுக்கிறது.




Leave a Reply

Subscribe to Posts | Subscribe to Comments

Welcome to My Blog

- Copyright © மருத்துவம் -New Mannar- Powered by New Mannar - Designed by New Mannar -