Posted by : Author Wednesday, 20 July 2016


ஆப்பிள்களில் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் மற்றும் வைட்டமின்கள் அதிகமாக நிறைந்துள்ளன, பச்சை நிற ஆப்பிள்கள் புளிப்பாக இருந்தாலும், சுவைப்பதற்கு இனிமையாக இருக்கும்.

இந்த பழத்தில் தான் இயல்பாகவே பல்வேறு வகையான புரதங்கள், வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் நார்ச்சத்துகள் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் உள்ளன.

மேலும் நிறைய நார்ச்சத்துக்கள் இருப்பதால், குடலை சுத்தம் செய்வதிலும் மற்றும் வளர்ச்சிதை மாற்றத்தினை அதிகரிக்கவும் செய்கிறது.

கனிம உள்ளடக்கம்

பச்சை ஆப்பிள்கள் ஏராளமான தாதுக்களை கொண்டுள்ளது. தாதுப்பொருட்களான இரும்புச்சத்து, துத்தநாகம், தாமிரம், மாங்கனீசு, பொட்டாசியம் முதலிய சத்துக்கள் மனித சுகாதாரத்திற்கு வேண்டுவன ஆகும்.

அதிலும் ஆப்பிள்களில் இருக்கும் நுண்ணூட்டச் சத்தான இரும்புச்சத்து இரத்தத்தில் ஆக்ஸிஜனின் அளவை உயர்த்த உதவுகிறது.

இதயத்திற்கு ஆரோக்கியமானது

எடையை குறைக்க முயலுபவர்களுக்கு பச்சை ஆப்பிள் ஒரு சிறந்த உணவாக இருக்கிறது.

அதிலும் அத்தகையவர்கள் ஒவ்வொரு நாளும் உணவில் ஒரு ஆப்பிளை சேர்க்க வேண்டும்.

மேலும் இது இரத்த நாளங்களில் கொழுப்பு சேகரிப்பதை தடுத்து, இதயத்திற்கு சரியான இரத்த ஓட்டத்தைப் பராமரிக்க உதவுகிறது.

சரும புற்றுநோயை தடுக்கிறது

பச்சை ஆப்பிளில் வைட்டமின் சி நிறைந்து காணப்படுவதால், இது கட்டற்ற தீவிர மூலக்கூறுகளால் சரும செல்களுக்கு எதிராக ஏற்படும் சேதத்தை தடுக்க உதவுகிறது. இதனால் சரும புற்றுநோய் ஏற்படும் வாய்ப்புகளை குறைகிறது.

ஆரோக்கியமான வலுவான எலும்புகள்

பச்சை ஆப்பிள்கள் தைராய்டு சுரப்பியை சரியான செயல்பாட்டில் இருக்க உதவி செய்வதால், அது வாத நோய் ஏற்படுவதைத் தடுக்கிறது.

பச்சை ஆப்பிள்களில் வைட்டமின் ஏ, பி மற்றும் சி நிறைந்துக் காணப்படுவதால், இது கட்டற்ற தீவிர மூலக்கூறுகளால் சரும செல்களுக்கு எதிராக ஏற்படும் சேதத்தை தடுக்க உதவுவதோடு, இது சருமத்தை பிரகாசிக்கவும் உதவுகிறது.

முதுமையைத் தடுக்கும்

பச்சை ஆப்பிள்கள் மூப்படைதலுக்கு எதிரான ஒரு சிறந்த மூலப்பொருளாக உள்ளது. இந்த ஆப்பிளில் எதிர் ஆக்ஸிகரணிகள் மற்றும் நார்ச்சத்துக்கள் நிறைந்துக் காணப்படுவதால், தோலின் நெகிழ்வு திறன் மற்றும் நீண்ட நாட்கள் இளமையாக இருக்க செய்கிறது.

முகப்பரு

பச்சை ஆப்பிள்கள் முகப்பருவிற்கு எதிரான சிகிச்சையில் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. அதிலும் பச்சை ஆப்பிள்களை வழக்கமாக உண்பதால், பருக்கள் வெடிப்பதை கட்டுப்படுத்துவதோடு, பருக்கள் வருவதைத் தடுக்க உதவுகிறது.

கருவளையம் மற்றும் முடி உதிர்தல்

குறிப்பாக பச்சை ஆப்பிள் கண்ணைச் சுற்றி ஏற்படும் கருவளையங்களை நீக்கி, கண்களுக்கு புத்துணர்ச்சி அளிக்க உதவுகிறது, பச்சை ஆப்பிள்கள் முடிகளை வலுப்படுத்தி, முடியின் வளர்ச்சியை அதிகரித்து மற்றும் முடி உதிர்தலைத் தடுக்க உதவுவதால், இதனை தினமும் தவறாமல் சாப்பிடுங்கள்.

Leave a Reply

Subscribe to Posts | Subscribe to Comments

Welcome to My Blog

- Copyright © மருத்துவம் -New Mannar- Powered by New Mannar - Designed by New Mannar -