Posted by : Author
Wednesday, 20 July 2016
வயது வித்தியாசம் பாராமல் அனைவரையும் அச்சுறுத்தி வரும் நீரிழிவு நோயானது இந்தியாவில் 79.4 மில்லியனாக அதிகரிக்கலாம் என மருத்துவர்களால் கூறப்படுகிறது.
தற்போது இவ்வெண்ணிக்கை 31.7 மில்லியனாக உள்ளது குறிப்பிடத்தக்கது. இவ்அதிகரிப்பானது கிட்டத்தட்ட 15 சதவீதம் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
இவ்வெண்ணிக்கையானது 2030ம் ஆண்டில் இந்தியாவுக்கு பிறகு உலகளவில் 171 மில்லியனில் இருந்து 366 மில்லியனை தொடலாம் என சொல்லப்படுகிறது.
இன்றைய சகாப்தத்தில் கர்ப்பிணிப் பெண்கள் அதிகம் கர்ப்ப கால நீரிழிவு நோய்களால் அவதிப்படுவதாகவும் அவர்கள் மேலும் சொல்கிறார்கள்.
இது அதிக எடையை கொண்டிருப்பவர்களிலும், 25 வயதுக்கு மேல் கருத்தரிப்பவர்களிலும் அதிகமாக நிகழ்வதாக அவர்கள் கூறுகின்றனர்.
இக்கர்ப்பகால நோய்கள் தாயை மட்டுமல்ல, பிறக்கப்போகும் பிள்ளைகளையும் பாதிக்கக் கூடியது.
கர்ப்பகால நீரிழிவு நோய்த்தாக்கத்தின் போது கர்ப்பத்திற்கு தேவையான இன்சுலினை உற்பத்தி செய்து, பயன்படுத்த முடியாமல் போகின்றது.
இன்சுலின் இல்லாததன் காரணமாக குருதியில் குளுக்கோஸ் அகற்றப்படாது, மாறாது பேணப்படுகிறது.
Related Posts :
- Back to Home »
- ஆரோக்கிய வாழ்வு »
- இந்தியாவில் 79.4 மில்லியனாக அதிகரிக்கப் போகும் நீரிழிவு நோய்: மருத்துவர்கள் எச்சரிக்கை...

