Posted by : Author
Tuesday, 24 May 2016
புற்றுநோய்க்கெதிரான அடுத்த கட்டம், நெதர்லாந்தை சேர்ந்த ஆய்வாளர்களும், ஒஸ்லோ பல்கலைக்கழக ஆய்வாளர்களும் இணைந்து, ஒருவருடைய செந்த நோய் எதிர்ப்புக் கலங்கள் புற்றுநோயை அடையாளம் கண்டு, அதற்கெதிராக போராட முடியாமல் போனாலும், இன்னொருவருடைய நோய் எதிர்ப்புக் கலங்கள் அவரில் புற்றுநோய்க்கெதிராக போராட கூடும் என கண்டுபிடித்துள்ளனர்.
இது தொடர்பான ஆய்வுப் பத்திரிகை கடந்த 19 ஆம் திகதியன்று வெளியிடப்பட்டிருந்தது.
இவ் ஆய்வில், புற்றுநோய் கலங்களிலிருந்து பெறப்பட்ட விகாரமாக்கப்பட் DNA ஆனது ஒரு ஆரோக்கிமான வழங்கியிலிருந்து பெறப்பட்ட நோய் எதிர்ப்புக் கலத்தினுள் செலுத்தப்பட்டு புற்றுநோய்க்கெதிராக அதன் செயற்பாடு தூண்டப்பட்டது.
பின்னர் இது நோயாளியின் நோய் எதிர்ப்பு கலங்களினுள் செலுத்தப்பட்டு வெற்றி காணப்பட்டது.
இதன் மூலம் நோயாளியின் சொந்த நோயெதிர்ப்பு கலங்கள் புற்றுநோய்கெதிராக போராட முடிந்தது அவதானிக்கப்பட்டது.
ஒருவரின் சொந்த நோயெதிர்ப்பு கலங்கள் புற்றுநோய்க்கெதிராக தொழிற்படாமல் போவதற்கு பல காரணங்கள் உள்ளன.
முதலாவதாக, குறிப்பிட்ட நோயெதிர்ப்புக்கலங்கள் பல வகையான தடுப்பாளிகளால் செயற்படாமல் போகலாம். இவ்வகை தடுப்பாளிகளை செயலிழக்கச் செய்யும் ஆய்வுகள் தற்போது மேற்கொள்ளப்பட்ட வண்ணம் உள்ளன.
அடுத்ததாக, குறிப்பிட்ட நோயெதிர்ப்பு கலங்களால் புற்றுநோய் கலங்களை இனங்காண முடியாமல் போகலாம்.
இக்கலங்கள் புற்றுநோய் கலங்களை இனங்கான உதவுவதன் மூலம், அதற்கெதிராக போரட வைக்க முடியும்.
பிற உடல்களை அடையாளம் காணும் நோயெதிர்ப்பு கலங்கள் T- cells எனப்படுகின்றன. இவ் T- cells புற்று நோய் கலங்கள் உட்பட, பிற கலங்களின் மேற்பரப்பை, மேற்பரப்பிலுள்ள புரதத்ததை இனங்காணுவதன் மூலம் அக்கலங்களை கொல்லுகின்றது.
பிற உடல்கள் சில வேளை அந்நிய புரதங்களையும் கொண்டிருக்கலாம். இவை Neo-Antigens எனப்படுகின்றன. உதாரணத்திற்கு வைரஸ் தொற்றுக்குட்பட்ட கலங்கள் வைரஸ் புரதத்தை கொண்டிருக்கும்.
இதன் மூலம் வைரஸ் தொற்றுக்குட்பட்ட கலங்கள் இனங்காணப்பட்டு அழிக்கப்படுகின்றன.
இங்கு முதலில் நோயாளியின் T cells, புற்றுநோய் கலங்களிலுள்ள எல்லா வகையான புரதத்துக்கெதிராகவும் தொழிற்படுகிறதா என ஆராயப்பட்டது.
இதற்கென மூன்று நோயாளிகளில் இருக்கக் கூடிய எல்லா வகையானNeo-Antigens களும் வரைபடப்படுத்தப்பட்டது. இவற்றில் பெரும்பாலானவை நோயாளியின் T cells இனால் இனங்காண முடியாமலிருந்தது.
ஆனால் மேற்படி Neo-Antigens வேறொரு ஆரோக்கியமான ஒருவரின் நோய் எதிர்ப்பு கலங்களால் இனங்காண முடிந்தது அவதானிக்கப்பட்டது.
Related Posts :
- Back to Home »
- கலங்களை புற்றுநோய்க்கு »
- மற்றொருவருடைய நோயெதிர்ப்பு கலங்களை புற்றுநோய்க்கு எதிராக பயன்படுத்தலாம்....

