Posted by : Author
Sunday, 14 February 2016
கொழுப்பு நிறைந்த உணவுகளுக்கும், திடீரென ஏற்படும் மாரடைப்புக்கும் இடையே எந்தவித தொடர்பும் இல்லை என புதிய ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது.
இதய நோய் பாதிப்புக்கான காரணிகள் குறித்து கடந்த 1984ம் ஆண்டு முதல் 1989ம் ஆண்டு வரை கிழக்கு பின்லாந்து பல்கலைகழகம் ஆய்வு மேற்கொண்டது.
இதில் இதயநோய் பாதிப்பில்லாத 42 வயது முதல் 60 வயது நிரம்பிய 1,032 ஆண்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர்.
இவர்களுக்கு தினசரி கொழுப்பு நிறைந்த உணவுகளும், முட்டையும் வழங்கப்பட்டது.
21 ஆண்டுகளாக நடத்தப்பட்ட ஆய்வில் கொழுப்பு சத்து நிறைந்த உணவை சாப்பிடுவதாலோ, நாளொன்று ஒரு முட் டையை சாப்பிடுவதாலோ மாரடைப்பு ஏற்படுவதில்லை என்பது தெரியவந்துள்ளது.
மேலும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட நபர்களில் 230 பேருக்கு கொழுப்பு சத்தை பாதிக்கும் வளர்சிதை மாற்றங்களால் மட்டுமே மாரடைப்பு ஏற்பட்டதும் தெரியவந்துள்ளது.
Related Posts :
- Back to Home »
- உணவே மருந்து »
- முட்டை சாப்பிட்டால் மாரடைப்பு வராது! புதிய ஆய்வில் தகவல்....

