Posted by : Author
Sunday, 14 February 2016

உணவு பதார்த்தங்களில் மிகுந்த சத்துக்கள் நிறைந்தது என்றால் அது கீரை தான். எண்ணற்ற பலன்கள் கீரையில் அடங்கியுள்ளன.
கீரைவகைகளில் இரும்பு சத்து அதிகமாக உள்ளது. கீரைகளை குழந்தைகளுக்கு சிறுவயதில் இருந்தே கொடுத்து வருவது அவர்களை ஆரோக்கியமாக வைக்கும். சரி எந்தெந்த கீரையில் என்னென்ன சத்துகள் உள்ளன என்பது தெரியுமா?
முருங்கை கீரை:

முருங்கை மரத்தின் பூக்கள், காய், கீரைகள் என அனைத்துமே மனிதர்களுக்கு பயனளிக்கக்கூடியது. பாலில் உள்ளதை விட நான்கு மடங்கு இரும்பு சத்து முருங்கை கீரையில் உள்ளது. முருங்கை கீரையை வேகவைத்து அதன் சாற்றை குடித்து வந்தால் உடல் சூடு தணியும்.
மேலும் வெப்பத்தின் காரணமாக உடலில் ஏற்படும் மந்தம், உட்சூடு, கண்நோய், பித்தமூர்ச்சை போன்றவையும் நீங்கும். இது போல் முருங்கை இலைகளை நெய்யில் வதக்கி சாப்பிட்டால் ரத்த சோகை உள்ளவர்களின் உடம்பில் நல்ல ரத்தம் ஊறும். பல் கெட்டிப் படும்.
புதினா:

புதினாக்கீரை பசியைத் தூண்டும். மணமும் காரச் சுவையும் கொண்டது. புதினாக் கீரையில் உடல் ஆரோக்கியத்திற்குத் தேவையான வைட்டமின்களும், தாதுப்பொருட்களும் அதிக அளவில் இருக்கின்றன.
பெண்களின் மாதவிலக்குப் பிரச்னைகள் தீர புதினாக்கீரை உதவுகின்றது. ஆண்மை குறைவையும் நீக்குகிறது.
வல்லாரை:

வல்லாரை உணவாக பயன்படுவதை விட மருந்தாகவே அதிகம் பயன்படுத்தப்படுகிறது. வல்லாரை இலையை வாயில் போட்டு மென்று விழுங்கினால் குடல் புண், குடல் நோய், வாய்ப்புண், வாய் நாற்றம் ஆகியவை அகலும்.
வல்லாரை கீரையை சாம்பார் செய்து சாப்பிடுவதன் மூலம் உடல் எரிச்சல், மூட்டு வலி, வீக்கம், சிறுநீர் மஞ்சள் நிறமாகப் போதல் போன்ற நோய்கள் குணமாகும். வல்லாரைத் துவையல் மலச்சிக்கலை அகற்றும்.
எனினும் வல்லாரைக் கீரையைச் சமைக்கும்போது புளி சேர்க்கக்கூடாது. புளி சேர்த்தால் அதன் சுவையும், மருத்துவக் குணமும் கெட்டுவிடும். என்பது குறிப்பிடத்தக்கது.
அகத்திக்கீரை:

கீரைகளில் ஒரு விஷேசமான தன்மையை உடையது அகத்திக்கீரை: அதாவது, மருந்து உட்கொள்ளும் நேரத்தில் அகத்திக்கீரையை உண்ணக்கூடாது. எனெனில், மருந்தின் வீரியத்தை குறைக்கும் சக்தி இதற்கு உண்டு. கண்பார்வை, நினைவாற்றலை பேணுவதற்கு அகத்தி முக்கிய பங்கு வகிக்கிறது.
வெயிலில் அலைவதால் ஏற்படும் வெப்பும், மலச்சிக்கல், காபி, தேநீர், இவை குடிப்பதால் ஏற்படும் பித்தம் ஆகியவை தீரும். எனினும் அகத்திக்கீரையை மாதத்துக்கு 2 அல்லது 3 முறை மட்டுமே உணவில் சேர்த்துக்கொள்வது நலம்.
Related Posts :
- Back to Home »
- உணவே மருந்து , மரக்கறிகள் »
- எந்த கீரையில் சத்து அதிகம்!

