Posted by : Author Thursday, 25 February 2016


கர்ப்பமாக இருக்கும் பெண்களுக்கு தன் வயிற்றில் இருக்கும் குழந்தையின் வளர்ச்சி பற்றி அறிந்து கொள்ள ஆவலாக இருக்கும்.
ஒவ்வொரு மாதமும் அவர்களுடைய எதிர்பார்ப்பும் அதிகரித்துக் கொண்டே இருக்கும்.

மாதம் நெருங்கும் போது எப்போது வருவாள் குட்டி தேவதை/குட்டி இளவரசர் என மனதில் எண்ணற்ற கோட்டைகளை கட்ட ஆரம்பித்து விடுவார்கள்.

8 வது வாரத்தில்

குழந்தையின் கண்கள் மற்றும் காதுகள் வளர ஆரம்பிக்கும், 2 செ.மீ நீளத்தில் இருக்கும்.

12 வது வாரத்தில்

5 செ.மீ நீளம் இருக்கும், குழந்தை முழு வடிவம் பெற்று அழகான கைகள், கால்கள் உருவாகி இருக்கும்.

இந்த வாரத்திற்கு பின்பே குழந்தை ஆணா, பெண்ணா என்பதை கண்டறிய முடியும், மர்ம உறுப்புகள் 9வது வாரத்தில் தொடங்கி 12வது வாரத்தில் முழுவதுமாக வளர்ச்சி அடைந்திருக்கும்.

20 வது வாரத்தில்

இக்கால கட்டத்தில் குழந்தை 18 செ.மீ நீளம் இருக்கும், அசைவுகளும் நன்றாக தெரியும். புருவம் மற்றும் நகங்கள் வளர்ச்சி அடைந்திருக்கும்.

24 வது வாரத்தில்

குழந்தையின் கேட்கும் திறன் அதிகரிப்பதோடு, பதிலளிக்கவும் தொடங்கும். முகம், உறுப்புகள் நன்கு வளர்ச்சியடைந்து முழுமையான வடிவம் பெறும்.

28 வது வாரத்தில்

குழந்தையால் சுவாசிக்க முடியும், வாசனையையும் நுகர முடியும்.

32 வது வாரத்தில்

கண்களை திறந்து பார்க்கும், தலைகீழாக திரும்பி வரும், முக்கியமாக நன்றாக கை, கால்களை அசைக்க ஆரம்பிக்கும்.

40 வது வாரத்தில்

குழந்தை வெளியே வருவதற்கு தயாரான நிலையில் இருக்கும், எடை 2- 4 கிலோ வரை இருக்கும்.

Leave a Reply

Subscribe to Posts | Subscribe to Comments

Welcome to My Blog

- Copyright © மருத்துவம் -New Mannar- Powered by New Mannar - Designed by New Mannar -