Posted by : Author Tuesday, 22 December 2015



அடிக்கடி காதை சுத்தம் செய்வதும் பிரச்சினை தான்... சுத்தம் செய்யாமலே விட்டு வைத் திருந்தாலும் சிக்கல்தான்!
உடலில் ஏற்படும் அழுக்கு, வியர்வை, துர்நாற்றத்தைப் போக்கி, சுறுசுறுப்பாகச் செயல்படுவதற் காகவே நாள்தோறும் குளிக்கிறோம். அதேபோன்று, நமது காதின் வெளிப்பகுதியில் மஞ்சள் நிறத்தில் மெழுகு சுரப்பதையும் சுத்தம் செய்யவேண்டும். அப்படி சுரக்கும் மெழுகுகூட ஒரு வகையில், நம் ஆரோக்கியத்துக்கு நல்லதுதான்.

உண்மையில் காதில் பரவும் பாக்டீரியா மற்றும் காளான்களை மெழுகு அழிக்கிறது. கிருமிகள் அதிகரிக் காமல் தடுக்கும் ஒரு வகை மருந்தாக மெழுகு இருக்கிறது. சிலருக்கு காதில் அதிகமாக மெழுகு சேரும். அவர்கள் அதனை கண்டுகொள்ளாமல் அலட்சியமாக இருப்பார்கள். சிலர் நாள்தோறும் காதில் ஏற்படும் மெழுகை ஒரு வேலையாகவே சுத்தம் செய்வார்கள். இது நன்மையா? தீமையா? எப்படிச் சுத்தம் செய்வது?

நாள்தோறும் நாம் காதில் சுரக்கும் மெழுகை சுத்தம் செய்வதனால் மட்டும் மெழுகு குறையாது. அதற்காக காதை சுத்தம் செய்யாமல் இருப்பதனாலும் பிரச்சினைகள் உருவாகும். மெழுகை சுத்தம் செய்யாமல் இருப்பவர் களுக்கு, என்றைக்காவது ஒருநாள் முக்கியமான இடத்தில் இருக்கும் போதுதான் காதில் பயங்கரமாக முணுமுணு என அரிப்பு கிளம்பும்.

அப்போது, கையில் எது கிடைக்கிறதோ, அதைக் கொண்டு காதை சுத்தம் செய்வார்கள். ஊக்கு, கொண்டை ஊசி, தீக்குச்சியின் கீழ்ப்பகுதி, பென்சிலின் அடிப்பகுதி என பலவற்றையும் காதில் போட்டு குடைவார்கள். இதுபோன்ற பொருள்கள் நடுக்காது வரை நுழைவதால், காயங்கள் ஏற்பட்டு தொற்றுக்கிருமிகள் பரவ வாய்ப்புள்ளது.

காதுக்கு எந்தப் பாதிப்பும் இன்றி பொறுமையாகவும், மென்மையாகவும் சுத்தம் செய்யவேண்டும். தினமும் குளித்துவிட்டு வெளியே வந்தவுடன், டவல் அல்லது கைக்குட்டையின் நுனியை வைத்து சுத்தம் செய்யலாம். அது குளிக்கும்போது காதினுள் செல்லும் தண்ணீரை வெளியே கொண்டு வரும். பாதுகாப்பான முறையில் தரமான பட்ஸ் கொண்டு தேவையான போது சுத்தம் செய்வதே நல்லது.காது குடைவதற்கான உபகரணங்கள் என்னென்ன....?

1. அவரவர்கள் சுண்டு விரல் : இதுதான் அவசரத்திற்கு கிடைக்கக் கூடியது. சுண்டு விரலை காதுக்குள் விட்டு குடையலாம். இதில் உள்ள சிக்கல் என்னவென்றால், காதுக்குள் அதிக தூரம் இந்த விரல் உள்ளே போகாது. அதனால் காது குடைவதின் சுகம் அரைகுறையாகத்தான் இருக்கும்.

2. அடுத்து அவசரத்திற்கு உபயோகப் படக்கூடியது, கார் அல்லது இரு சக்கர வாகனத்தின் சாவி. இது ஓரளவிற்கு காதினுள் புகும். இதனால் குடையும்போது ஓரளவிற்கு சுகமாயிருக்கும்.

3. நீங்கள் அலுவலகத்தில் இருந்தீர்களானால் உங்களுக்கு உடனடியாக கிடைக்கக் கூடியவை, பென்சில் அல்லது பால்பாய்ன்ட் பேனா. இவைகள் நல்லவையே. என்ன, பென்சிலின் கூர் உடைந்திருந்தால் நல்லது. இல்லையென்றால் உடனடியாக டாக்டரிடம் போக வேண்டியிருக்கும்.

4. துண்டு பேப்பர்: இது ஆபீசிலும் வீட்டிலும் தாராளமாகக் கிடைக்கும். இதை ஒரு பக்கத்தில் இருந்து சுருட்டி, கூப்பு வடிவத்திற்கு கொண்டு வந்து, கூராக இருக்கும் முனையை சிறிது மடக்கி விட்டு, உபயோகிக்கலாம். தினசரி காலண்டர் தாளைக் கிழித்தவுடன் அநேகர் செய்யும் முதல் காரியம் இதுதான். இது எந்த விதமான ஆபத்தும் இல்லாதது.

5. பறவைகளின் இறகுகள்: இவை இயற்கை நமக்குக் கொடுத்த வரம். இதனால் காதைக் குடையும்போது அப்படியே வானத்தில் சஞ்சரிப்பது போல உணர்வீர்கள்.

6. "இயர்பட்ஸ்" (earbuds): இவை ஓரளவிற்கு பாதுகாப்பானவை. இதில் இரண்டு வகை உண்டு. ஒன்று மெடிகல் ஷாப்புகளில் விற்பது. இது விலை அதிகம். அடுத்தது, வீட்டில் தயார் செய்வது (Home-made). இது ரொம்பவும் செலவில்லாதது.

ஊர்க்குச்சியை எடுத்து ஒரு முனையில் கொஞ்சம் பஞ்சை வைத்து திருகினால் "இயர்பட்" தயார்.

Leave a Reply

Subscribe to Posts | Subscribe to Comments

Welcome to My Blog

- Copyright © மருத்துவம் -New Mannar- Powered by New Mannar - Designed by New Mannar -