Posted by : Author Sunday, 8 November 2015


அவதானக் குறை, மிகையியக்க குறைபாடு (ஏ.டி.ஹெச்.டி.-ADHD) என்பது அவதானக் குறைவு, அளவுக்கு மீறிய இயக்கம் ஆகிய இரண்டு பரந்த அறிகுறிகளைக் கொண்டது. இது சிறு வயதில் ஏற்படும் ஒரு உளவியல் சம்பந்தப்பட்ட நோய்.
ஒரு குறிப்பிட்ட செயற்பாட்டில் முழுமையான கவனத்தைக் குவிக்க முடியாமல், பராக்குப் பார்ப்பது போன்ற சூழ்நிலையையும் மற்றும் வயதுக்கு மீறிய இயக்கம், உத்வேகம் (அளவுக்கு மீறிய துறுதுறுப்பு) போன்றவையும் இந்தக் குறைபாட்டினால் தோன்றுபவை.

சமீபத்தில் ஏ.டி.ஹெச்.டி.-யால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மூலிகை மருத்துவமாக கஞ்சாவைப் பயன்படுத்தியதில், இந்த நோயின் முக்கிய அறிகுறிகளிலிருந்து இவர்கள் மீள்வதாக கண்கூடாகத் தெரியவந்துள்ளது.
வழக்கமான சிகிச்சை செய்து பலனளிக்காதுபோன முப்பது பேருக்கு இந்த கஞ்சா மூலிகை சிகிச்சை மனதை ஒருநிலைப்படுத்தவும், தூக்கத்தை மேம்படுத்தவும் உதவுகின்றது. அத்துடன், இவர்கள் திடீரென உணர்ச்சிவசப்படுவதும் குறைந்துள்ளதாக இந்த ஆராய்ச்சியை மேற்கொண்ட ஜெர்மனியக் குழு குறிப்பிட்டுள்ளது.

இந்த ஆய்வின்போது இருபத்து இரண்டு வயதுள்ள முப்பது பேரும் தமது ஏ.டி.ஹெச்.டி. பிரச்சனைக்காக மருத்துவர்கள் பரிந்துரைத்த மருந்துகளை பயன்படுத்துவதை முற்றிலுமாக தவிர்த்துவிட்டு, முழுமையாக கஞ்சாவின் மூலிகை மருத்துவத்துக்கு மாற்றப்பட்டு இந்த சோதனைக்கு உள்ளாக்கப்பட்டனர்.

கடந்த 2008-ம் ஆண்டின்போது ஏ.டி.ஹெச்.டி.-யால் பாதிக்கப்பட்ட 28 வயதினரிடையே நடத்தப்பட்ட ஆய்விலும் கஞ்சா அவர்களுக்கு நல்ல பலனைத் தருவதாகத் தெரியவந்தது. எனினும், மிகக் குறைவான ஆராய்ச்சிகளே இதன் சார்பாக நடத்தப்பட்டுள்ளதால் இது உபயோகத்துக்கு வருவதில் தாமதம் நீடித்து வருகின்றது.

அமெரிக்காவில் இரண்டு மாநில அரசுகள் மட்டும் மருத்துவரின் ஆலோசனைப்படி மருந்தாக கஞ்சாவை பயன்படுத்திக்கொள்ள ஏ.டி.ஹெச்.டி.-யால் பாதிக்கப்பட்டவர்களை அனுமதித்துள்ளது.
ஜெர்மனிய சட்டத்தின்படி மருத்துவர் பரிந்துரைத்த மருந்து பலனளிக்கவில்லையென்றால், சுகாதாரத் துறையிடம் அனுமதி பெற்று மருத்துவ காரணங்களுக்காக கஞ்சாவைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Subscribe to Posts | Subscribe to Comments

Welcome to My Blog

- Copyright © மருத்துவம் -New Mannar- Powered by New Mannar - Designed by New Mannar -