Posted by : Author
Sunday, 8 November 2015
சர்க்கரை நோய் எனப்படும் நீரிழிவு பாதித்தவர்களுக்கு குறைந்த விலையில், பக்க விளைவுகள் இன்றி ஆயுர்வேத மாத்திரைகள் விரைவில் விற்பனைக்கு வர உள்ளது.
நீண்ட காலமாக சர்க்கரை நோய் கட்டுப்படுத்தும் அலோபதி மாத்திரைகளை சாப்பிடும் நோயாளிகளுக்கு பல்வேறு பக்க விளைவுகள் ஏற்படுகின்றன.
இதனைத் தடுக்கும் வகையில் தேசிய மூலிகைத் தோட்ட மையம் (என்பிஆர்ஐ) மூலிகைகளைக் கொண்டு புதிய ஆயுர்வேத மருந்தை கண்டுபிடித்துள்ளது.
இந்த மையத்தின் மூத்த விஞ்ஞானி ஏ.கே.எஸ். ராவத் கூறுகையில், இந்த மருந்து மாத்திரை வடிவில் தயாரிக்கப்பட்டுள்ளது. ஜிஆர்-34 என பெயரிடப்படும் இது 100 மாத்திரை ரூ.500 க்கு விற்பனை செய்யப்படும் என்று தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து சாப்பிடுவதால், இன்சுலின் எடுத்துக் கொள்வது குறையும். சர்க்கரையும் கட்டுப்பாட்டில் இருக்கும் என்றும் அவர் கூறினார்.
Related Posts :
- Back to Home »
- நீரிழிவு நோய் »
- நீரிழிவு நோயாளிகளுக்கு புதிய ஆயுர்வேத மாத்திரை அறிமுகம்...

