Posted by : Author Wednesday, 7 October 2015


மகிழ்ச்சியான குழந்தைச் செல்வங்கள் பெற்றிட ஒரு சில தம்பதிகள் செயற்கை முறை கருவுறுதலை தெரிவு செய்கின்றனர். அவர்களுக்கு தற்போது அதன் வெற்றிக்காக அக்குபஞ்சர், யோகா மற்றும் இசை ஆகிய மூன்றையும் இணைத்து துணை சிகிச்சையாக வழங்குகின்றனர்.


ஆண் பெண் ஆகிய இருபாலருக்கும் மகப்பேறு மருத்துவத்தில் அக்குபஞ்சர் மற்றும் சுஜோக் போன்ற துணை சிகிச்சைகள் பரவலாக பயன்படுத்தப்பட்டுள்ளது. சக்திக்கான கொள்கையின்படி ஒருவரது உடல் நலம், ஞi மற்றும் இரத்த ஓட்டத்தின் அடிப்படையில் தான் நிர்ணயம் செய்யப்படுகின்றது. சீனாவில் ஞi என்பது ஆற்றல் சக்தியை குறிப்பதாக உள்ளது. ஞi மற்றும் இரத்த ஓட்டம் நன்றாக இருக்கும் பொழுது மனித உடலானது போதுமான சக்தியை பெற்று, தேவைப்படும் சரியான அளவிற்கு செயல்திறன் கொண்டு மகப்பேற்றிற்கான சத்துக்களையும் மேம்படுத்துகின்றது.

அக்குபஞ்சர் சிகிச்சையின் மூலம், ஆண்களின் விந்து உற்பத்தி மற்றும் அதன் தரத்தை அதிகப்படுத்தும் போது அவர்களின் குணாதிசயங்களையோ அல்லது உடல் ரீதியான ஆசைகளையோ கட்டுப்படுத்துவதில்லை எனவும், மகப்பேறின்மைக்கான சிகிச்சைகளில் பலன்தரத்தக்கனதாக உள்ளது எனவும், விந்துக்களின் எண்ணிக்கையையும் தரத்தையும் உயர்த்துவனவாக உள்ளது எனவும், ஊனமான பிறப்புகளை தடுக்கின்றன எனவும் கண்டறியப்பட்டு ஆதாரத்துடன் விவரிக்கப்பட்டுள்ளன.

மேலும், அக்குபஞ்சர் சிகிச்சை, பெண்களின் மாதவிலக்கு சுழற்சியை முறைப்படுத்துகின்றது, விந்துக்களின் எண்ணிக்கையையும் அசையும் தன்மையையும் மேம்படுத்துகின்றது,  மகப்பேறின்மை தொடர்பான மன அழுத்தத்தையும் பரபரப்பையும் குறைக்கின்றது. ஹார்மோன் மற்றும் என்டோகிரைன் முறைகளை சரி செய்கின்றது. கர்ப்பப்பையில் இரத்த ஓட்டத்தை அதிகப்படுத்துகின்றது, குறைபிரசவ சந்தர்ப்பங்களை குறைக்கின்றது பெண்களுக்கான ஐவிஎப் மகப்பேறின்மை சிகிச்சையில் கர்ப்பம் தரிப்பதற்கான வாய்ப்புகளை அதிகப்படுத்துகின்றது.

அதாவது, அக்குபஞ்சர் சிகிச்சையின்போது, பெண்களுக்கான நியுட்ரோடிரான்ஸ்மிட்டர்ஸ் மூலமாக ஊக்கப்படுத்தி கோனாடாட்ராபின் என்ற ஹோர்மோனை சுரக்கச் செய்து, மாதவிலக்கு சுழற்சியையும், முட்டை வெளியேற்றத்தையும் கட்டுப்படுத்த இயலுகின்றது. அதேபோல் இது இரத்த ஓட்டத்தை கருப்பைக்குள் அதிகரிக்கச் செய்து என்டோ ஜீனஸ் ஓப்பியாய்ட்சை உருவாக்கி பெண்களின் உடல்நலத்தை நல்ல நிலையில் வைப்பதற்கும் பேருதவி புரிவதாகக் கருதப்படுகின்றது. 

மேலதிக விவரங்களுக்கு தொடர்பு கொள்ளவேண்டிய தொலைபேசி எண்கள்  : 0091  98410 30388 அல்லது 0091 87544 60477

Leave a Reply

Subscribe to Posts | Subscribe to Comments

Welcome to My Blog

- Copyright © மருத்துவம் -New Mannar- Powered by New Mannar - Designed by New Mannar -