Posted by : Author
Wednesday, 7 October 2015
முதுமையின் காரணமாக ஏற்படும் மூட்டு வலி, உடற்பருமன் காரணமாக உருவாகும் மூட்டு வலி அல்லது வேறு காரணங்களால் ஏற்படும் மூட்டு வலிக்கு மருத்துவர்கள் ஒன்று வலி நிவாரணத்திற்கான வழிமுறையை எடுத்துரைப்பர் அல்லது மூட்டு மாற்று சத்திர சிகிச்சையை செய்துகொள்ளும் படி பரிந்துரைப்பர்.
வெற்றிவீதம், சத்திர சிகிச்சைக்கு பின்னரான பராமரிப்பு மற்றும் மாற்றிக்கொள்ளவேண்டிய வாழ்க்கை நடைமுறை போன்ற காரணிகளினால் மூட்டு மாற்று சத்திர சிகிச்சை செய்து கொள்வதற்கு எம்மில் பலருக்கு தயக்கம் காணப்படுகின்றது.
இதனால் மூட்டு வலிக்கு சத்திர சிகிச்சையில்லாமல் நிரந்தரமான தீர்வு இருக்கிறதா? என தேடலைத் தொடருவோம். இவர்களுக்கு பலன் தரும் வகையில் ப்ரோலோஸோன் தெரபி சிகிச்சையை பார்ப்போம்.
இது அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் பிரபலமான சிகிச்சை முறையாகும். அவர்களின் சுகாதார நிறுவனம் அனுமதித்திருக்கும் பாதுகாப்பான சிகிச்சை முறையும் கூட. நாம் தற்போது மூட்டு வலியினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மூட்டு மாற்று சத்திர சிகிச்சை சிறந்த தீர்வு என்று எண்ணுகிறோம்.
மூட்டு மாற்று சத்திர சிகிச்சை செய்யவேண்டும் என்றால் மூட்டு தேய்மானம் அடைந்திருக்கவேண்டும். அதனை உறுதிப்படுத்தியபின் அவ்வித சத்திர சிகிச்சையை மேற்கொள்வார்கள். மூட்டு தேய்மானம் என்றால் மூட்டுகள் தேய்வதில்லை. அதிலுள்ள குறுத்தெலும்புகள் தேய்மானம் அடைந்து அதன் 2 புறங்களிலுமுள்ள எலும்புகள் ஒன்றோடொன்று உராயும்போது ஏற்படும் வலியையே நாம் மூட்டு தேய்மானம் என்று குறிப்பிடுகிறோம்.
இதனால் அவர்கள் அந்த குறுத்தெலும்புகளுக்கு பதிலாக செயற்கையான செராமிக்காலான மூட்டுகளை அங்கு பொருத்துகிறார்கள். இந்த சத்திர சிகிச்சைக்கு பின்னர் 60 சதவிதத்தினருக்கு வலி ஓரளவு கட்டுக்குள் இருக்கின்றது என்றும், சத்திர சிகிச்சைக்கு பின்னரான பராமரிப்பு அதிகம் என்றும் கருத்து தெரிவிக்கிறார்கள்.
ஆனால் ப்ரொலோஸோன் தெரபி சிகிச்சையில் மூட்டுகளில் உள்ள குறுத்தெலும்புகளை மீண்டும் வளரச்செய்வதற்கான முயற்சிகளை மேற்கொள்கிறார்கள். மூட்டுகளில் உள்ள கார்டிலேஜ்கள் வளர்வதற்கான அல்லது வளர்ச்சியடைவதற்கு தேவையான சத்துப் பொருள்களை நேரடியாக மூட்டு பகுதியில் ஊசி மூலமாக செலுத்துகிறார்கள்.
அதனுடன் ஓஸோன் என்ற ஓக்ஸிஜனையும் போதுமான அளவிற்கு செலுத்துவார்கள். இதனை 5 முதல் 10 நிமிடங்களில் நடைபெறும் சிகிச்சை முறையாகும். சத்திர சிகிச்சையில்லை. இரத்த இழப்பு இல்லை.
உங்களுடைய தேய்மானத்தின் அடர்த்தி மற்றும் வீரியத்தைப் பொறுத்து இந்த சிகிச்சை முறை 3 முதல் 6 முறை மேற்கொண்டால் போதுமானது. நல்லதொரு பலனை வழங்கும். மூட்டு தேய்மானத்தின் முதல் 3 நிலைகளுக்கு இந்த சிகிச்சை சிறப்பாகவும், இறுதி கட்ட நிலையில் தேய்மானம் இருந்தால் சற்று மெதுவாகவும் இந்த சிகிச்சை பலன் தரும். இது 100 சதவீதம் பக்கவிளைகளற்ற சிகிச்சை முறையாகும்.
இந்த சிகிச்சை முறையில் கால் மூட்டைத்தவிர தோள் பட்டை இணைப்பு, இடுப்பு வலி, கை கால் வலி கணுக்கால் வலி, குதிக்கால் வலி என எந்தெந்த இணைப்புகளில் வலியிருந்தாலும் இந்த ப்ரோலோஸோன் தெரபி மூலம் நிரந்தர தீர்வைப் பெற முடியும். அனைத்து ஆண் பெண் வயதினருக்கும் மற்றும் நீரிழிவு நோயாளிகளுக்கும் பொருந்தும்.
Related Posts :
- Back to Home »
- ஆரோக்கிய வாழ்வு »
- மூட்டுவலியை குணப்படுத்தும் நவீன ப்ரொலோஸோன் தெரபி...

