Posted by : Author
Monday, 21 September 2015

வெப்ப மிகுதியின் தாக்கத்தை நமது உடல் கட்டுப்படுத்திக்கொள்ள முடியாதபோது வெப்ப அழுத்தத்திற்கு (Heat Stress) ஆளாகிறோம்.
நமது உடலுக்குள் வெப்பமானது உட்புகும்போது பல்வேறு உடல் உபாதைகளுக்கு ஆளாகிறோம்.
பொதுவாக வெளிப்புற தொழிலாளர்கள் மற்றும் வெப்பம் மிகுந்த சுற்றுச்சூழலில் வேலை பார்க்கும் நபர்களே அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள்.
குறிப்பாக தீயணைப்பு வீரர்கள், பேக்கரி தொழிலாளர்கள், விவசாயிகள், கட்டுமான தொழிலாளர்கள், பேக்டரி தொழிலாளர்கள் ஆகியோர் அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள்.
அறிகுறிகள்
பணியில் கவனம் செலுத்த இயலாமை
தசைப்பிடிப்பு
சரும அலர்ஜி
தாகமிகுதி
மயக்கம், சுயநினைவை இழத்தல்
தலைவலி
உடலின் வெப்பநிலையை கட்டுப்படுத்த இயலாத போது வெப்ப அதிர்ச்சி heat stroke ஏற்படுகிறது, இது ஏற்படும்போது 10 முதல் 15 நிமிடங்களுக்குள் உடலில் வெப்பநிலை 106 டிகிரி டிகிரி அளவு அதிகரிக்கிறது.
இவை சில நேரங்களில் மரணத்தையும், உடலில் நிரந்தர குறைபாடுகளையும் ஏற்படுத்திவிடுகின்றன.
சிசிச்சைகள் என்ன
அதிகப்படியான வேலை செய்பவர்கள் தங்களது வேலை முறைகளை மற்றிக்கொள்ள வேண்டும்.
உதாரணத்திற்கு வெயிலில் அலையும் வேலை செய்பவர்கள் இறுக்கமான ஆடைகள் அணிந்திருந்தால். அதை அவ்வப்போது தளர்த்திக்கொள்ளவேண்டும்.
மேலும் குளிர்பானங்கள் பருகுவது, சிறிது நேரம் நிழலில் அல்லது குளிர்ச்சியான இடத்தில் அமர்ந்து அமர்ந்துகொள்வது போன்றவற்றை செய்யலாம்.
இதேபோல் அதிக நேரம் உழைப்பதையும் தவிர்க்க வேண்டும். நாம் வேலை செய்யும் இடத்தை முடிந்த வரை குளிர்ச்சி நிறைந்ததாக வைத்துக்கொள்ள வேண்டும்.உடலின் வெப்ப அளவை சீராக வைத்துகொள்ள வேண்டும்.
காரம் சார்ந்த உணவுகள் மற்றும் அசைவ உணவுகளை தவிர்ப்பது நல்லது.
Related Posts :
- Back to Home »
- ஆரோக்கிய வாழ்வு »
- உடலுக்குள் உட்புகும் வெப்பம்? விபரீதம் தெரியுமா?

