Posted by : Author Monday, 21 September 2015



மாங்காய் என்ற பெயரை கேட்டாலே நாவில் எச்சில் ஊறுவது போன்று உடலுக்கு தேவையான ஆரோக்கிய நன்மைகளையும் வழங்குகிறது.
மாங்காய் சாப்பிட்டால் மலக்குடல் புற்றுநோய் வராமல் தடுக்கும்.

செரிமாணத்தைத் தூண்டி மலக்குடலைச் சுத்தம் செய்யும். பசியைத் தூண்டும்.

மாங்காயில் உள்ள சத்துக்கள்:

மாங்காயில் விட்டமின் மற்றும் கனிமச்சத்துக்கள் நிறைந்துள்ளன.

100 கிராம் மாங்காயில் உள்ள சத்துக்கள்

கால்சியம் - 10 மி.கி

சுக்ரோஸ் 14.8 மி.கி

பைபர் 1.8 கி

இரும்பு 0.13 மி.கி

மக்னீசியம் 11 மி.கி

பொட்டாசியம் 156 மி.கி

புரோட்டின் 0.51 மி.கி

விட்டமின் ஏ 38 மி.கி

விட்டமின் சி 27.7 மி.கி




தயமின் 0.058 மி.கி

விட்டமின் B12 0.057 மி.கி

விட்டமின் பி3 0.548 மி.கி

விட்டமின் பி5 0.180 மி.கி



மருத்துவ பயன்கள்

1.மாங்காயில் கலோரிகள் குறைவாக இருப்பதால் எடையை குறைக்க நினைப்போர் இதனை சாப்பிடலாம்.

2.மாங்காயில் வைட்டமின் சி சத்து இருப்பதால், புதிய இரத்த அணுக்களின் உற்பத்திக்கு உதவுகிறது.

3.மாம்பூவை நிழலில் உலர்த்தி எடுத்து பொடித்து நீர்விட்டு கொதிக்க வைத்து குடிநீராக அருந்தினால் வயிற்றுப்போக்கு நீங்கும்.

4.கால் பித்தவெடிப்பு உள்ள பகுதியில் மாம்பிசினைத் தடவி வந்தால் பித்த வெடிப்பு குணமாகும்.

5.சுவாசம் சம்பந்தப்பட்ட நோய்கள் இருந்தால் அது மற்றவர்களுக்கு பரவாமல் தடுக்கும் தன்மை மாவிலைக்கு உண்டு.

6.தினமும் மாங்காய் சாப்பிட்டடால் ரத்தத்தை சுத்தப்படுத்தி உங்கள் உடலை பலமாக்கும்.

7.ஆண் பெண் ஆகிய இருபாலருக்கும் ஏற்படும் நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு தரும்.

8.மாலைக்கண் மற்றும் பற்களில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு மாங்காய் சாப்பிடுவது சரியான தீர்வாகும்.

9.சருமத்தை பளபளப்பாக்கி, முதுமை தோற்றத்தை தடுக்கும்.

மாங்காய் சாதம்

முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு போட்டு தாளிக்க வேண்டும்.

பின்னர் அதில் நறுக்கிய இஞ்சி, வர மிளகாய், பச்சை மிளகாய், கறிவேப்பிலை மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து வதக்க வேண்டும்.

பிறகு துருவிய மாங்காய், உப்பு சேர்த்து நன்கு 2 நிமிடம் வதக்க வேண்டும். பின்பு அதில் அரிசியைப் போட்டு, கிளறி இறக்கி விட வேண்டும். இப்போது சுவையான மாங்காய் சாதம் ரெடி!!!

மருத்து பயன்கள்

சாப்பிடுவதன் மூலம் புதிய இரத்த அனுக்களை உற்பத்தி செய்யும்.

மாதவிடாய் பிரச்சனைக்கு தீர்வு தரும், மேலும் கர்ப்பிணி பெண்கள் மாங்காய் சாப்பிடுவதற்கு பதிலாக மாங்காய் சாதம் செய்து சாப்பிடலாம்.

குறிப்பு

இதனை, சரும நோய், வயிற்றுவலி உள்ளவர்கள் சாப்பிடக்கூடாது. சூட்டைக் கிளப்பும்.

Leave a Reply

Subscribe to Posts | Subscribe to Comments

Welcome to My Blog

- Copyright © மருத்துவம் -New Mannar- Powered by New Mannar - Designed by New Mannar -